செவ்வாய், 8 நவம்பர், 2016

வீட்டில் எப்படி விளக்கேற்ற வேண்டும்.

வீட்டில் எப்படி விளக்கேற்ற வேண்டும்.

*விளக்கில் எண்ணெய்விட்டு எத்தனை திரிகள் இருந்தாலும் ஏற்றவேண்டும்.குறைந்தது இரு திரிகளாவது ஏற்றவேண்டும்.

*வீட்டில் பூஜைகள் செய்தால் முதலில் குடும்பத்தலைவி விளக்கேற்றிய பின் மற்ற்வர்கள் ஏற்றுவது சிறப்பு.

*விளக்கில் தீபம் ஏற்றும் போது முதன் முதலில் எண்ணெய் அல்லது நெய் விட்டபின் திரியை போட்டு தீபமேற்ற வேண்டும்.அப்படி செய்தால் வீட்டிலுள்ள இருளும்

அகலுவதோடு இல்லத்தில் உ:ள்ள அனைவரின் மன இருள் அகன்று தெளிவான சிந்தனை கிடைக்கும்.

*இரு திரியை முறுக்கி ஏற்றுவது நல்லது.

*ஒரு திரி தீபமேற்றினால் கிழக்கு திசை பார்த்தவாறு ஏற்றவும்.

*தீபத்தை வாயினால் ஊதி அணைக்க கூடாது புஷ்பம் அல்லது கல்கண்டால் அணைப்பது நலம்.

*தீபம் ஏற்றும் போது பின் வாசல் கதவை மூடவேண்டும்.காலையில் பிரம்ம முகூர்த்தமான 4-30 முதல் 6 மணிக்குள் ஏற்ற வேண்டும் அதேபோல் மாலை பிரதோச காலமான 5-50 மணிபோல் ஏற்றலாம்.

*தீபம் என்பது விளக்கு மட்டும் அல்ல ஒரு இல்லத்தின் கலங்கரை விளக்கம் ஆகும்.வீட்டில் விளக்கேற்றினால் இல்லத்தில் மங்களமும்,இன்பமும்
பொங்கும்.சந்தோசமான வாழ்வு உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக