புதன், 23 நவம்பர், 2016

பீன்ஸ்  சாப்பிட்டு வந்தால் நீரிழிவை கட்டுப்படுத்த முடியும் ...

பீன்ஸ்  சாப்பிட்டு வந்தால் நீரிழிவை கட்டுப்படுத்த முடியும் ...

  இன்றைய மக்கள் காய்கறிகளை விட கடைகளில் கிடைக்கும் பாஸ்ட் புட் என்ற உணவுகளை அதிகம் விரும்புகின்றனர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்இ ஊட்டசத்துக் குறைபாடு போன்ற சிக்கல்கள் உருவாகின்றன. நல்ல காய்கறிகளையும்இ கீரைகளையும் சாப்பிட்டு வந்தாலே போதும்இ உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைத்து விடும். ஒவ்வொரு காய்களிலும் ஒரு விதமான சத்துகள் இருக்கின்றன. அதனால் எந்த காய்களையும் ஒதுக்கி தள்ளாமல் சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

புற்றுநோயைத் தடுக்கும் :

🌀 பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.

நீரிழிவை கட்டுப்படுத்தும் :

🌀 இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக கரைவதால் அது இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.

வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துகள் :

🌀 பீன்ஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்இ புரோட்டின்இ நார்ச்சத்துஇ காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்இ வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்களான பொட்டாசியம்இ ஃபோலேட்இ காப்பர்இ இரும்புச்சத்துஇ பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் இருப்பதால்இ இது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இதயத்திற்கு சிறந்தது பீன்ஸ்.

🌀 பீன்ஸில் உள்ள சிலிகான் என்னும் கனிமச்சத்து எலும்புகளை வலுவாகவும்இ ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மற்ற காய்கறிகளை விட இந்த காய்கறியில் உள்ள சிலிகான் எளிதில் உறிஞ்சப்படுவதோடுஇ செரிமானமும் அடையும்.

தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் :

🌀 சிலருக்கு கோதுமைஇ பார்லி போன்ற தானியங்களில் உள்ள க்ளுடனால் அலர்ஜி ஏற்படலாம். அத்தகையவர்கள் தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் சாப்பிட்டால்இ தானியங்களால் கிடைக்கக் கூடிய சத்துக்களை பீன்ஸ் மூலம் பெறலாம்.

முதுமையை எதிர்த்துப் போராடும் :

🌀 பச்சை பீன்ஸில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தின் தரத்தை அதிகரித்துஇ முதுமையை எதிர்த்துப் போராடும்.

🌀 நற்குணங்களை கொண்ட பீன்ஸை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் ஊட்டசத்து குறைபாடு குறையும்.

*********************************
மனிதர்களுக்குத் தேவையான அனைத்து
உயிர்ச் சத்துக்களும் கீரை, காய், கனி, விதை
இவற்றில் உள்ளன. இதில் மனிதன் தினமும்
உணவுக்காக அதிகம் உபயோகிப்பது
காய்களையே..
வேகவைத்த காய்களைத்தான் மனிதக்
குடலானது எளிதில் சீரணிக்கும். மற்றும்
அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும்.
இதனாலே நம் முன்னோர்களும், அவதாரப்
புருஷர்களும் சைவ உணவை வலியுறுத்தி
வந்தனர்.
அத்தகைய காய்களில் பீன்ஸ் வகையும் ஒன்று.
இது அவரை இனத்தைச் சேர்ந்தது. பீன்ஸை
இங்கிலீஷ் காய் என்பர். காரணம்
ஆங்கிலேயர்கள் தங்கள் உணவில் அதிகம்
சேர்த்துக்கொள்ளும் காய்களில்
இதுவும் ஒன்று.
பீன்ஸ் குச்சி போல் நீண்டு சற்று பருத்து
காணப்படும். பயறு வகை காய்களைப் போல்
விதைகள் உள்ளிருக்கும்.
பச்சையாக பறித்த பீன்ஸில் கலோரி அளவு
குறைவாக உள்ளது. இது எளிதில்
சீரணமாகக்கூடியது. வைட்டமின், தாதுக்கள்
அதிகம் நிறைந்துள்ளது
100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம்
உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின்
உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத்
தன்மைகளை வெளியேற்றும் தன்மை
கொண்டது. புற்று நோயைக்
குணப்படுத்தும் தன்மை பீன்ஸ்க்கு உண்டு என்று
அண்மையில் ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நார்ச்சத்தானது (ஈடிஞுtச்ணூதூ
ஞூடிஞஞுணூ) இரத்தத்தில் உள்ள
கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை
சத்தாக மாற்றுகிறது.
இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால்
கண்பார்வை தெளிவடையச்
செய்கிறது. அதுபோல் ப்ளேவனாய்டு
பாலிபினோலிக்
ஆண்டி ஆக்ஸிடென்ட், லூட்டின்,
ஸியாசாந்தின், கரோட்டின் இருப்பதால்
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்
செய்கிறது.
பீன்ஸில் த்டிச்-துச்ணtடடிண என்ற வேதிப்
பொருள் நிறைந்திருப்பதால் இது
சருமத்தையும், கண்களையும், புறஊதாக்
கதிர்களின் பாதிப்பிலிருந்து தடுக்கிறது.
இதிலுள்ள ஞூணிடூச்tஞுண், வைட்டமின் பி 12
உடன் இணைந்து கருவுற்ற பெண்களுக்கு
கருவில் குழந்தை நன்கு வளரவும், நரம்பு
பாதிப்புகள் ஏதும் பாதிக்காதவண்ணமும்
தடுக்கிறது.
பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி,
இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக்
கொடுக்கிறது.
பீன்ஸில் இரும்பு, கால்சியம், மக்னீசியம்,
மாங்கனிசு மற்றும் பொட்டாசியம்
நிறைந்துள்ளது. மக்னீசியம் உடலின் வளர்சிதை
மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பொட்டாசியம் இதயத் துடிப்பை
சீராக்குகிறது. இரத்த அழுத்தத்தைக்
குறைக்கிறது.
பீன்ஸில் உள்ள இசோபிளவோன்ஸ் எனப்படும்
உயிர்த்தாது உடலுக்கு வலுவைக்
கொடுக்கும் தன்மை
கொண்டது.
பீன்ஸை சிறிதாக நறுக்கி நீரில்
கொதிக்கவைத்து, அந்த நீரை அருந்தி
வந்தால் வாய்ப்புண் வயிற்றுப்புண்
குடல்புண் ஆறும்.
பீன்ஸை பொரியலாகச் செய்து
சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியை
அதிகரிக்கும். வாயுத் தொல்லையை
நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து
மலச்சிக்கலைப் போக்கும்.
· மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
சிறந்த உணவாகும்.
· பீன்ஸ் இரத்தத்தில் உள்ள
கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை
சுத்தமாக்குகிறது. இரத்தக் குழாய்
அடைப்புகளைப் போக்குகிறது. உயர் இரத்த
அழுத்தத்தை சீர்செய்கிறது. இதய அடைப்பு,
இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
மேலும் உடலில் உள்ள தேவையற்ற
கொழுப்பைக் கரைத்து, அதிக உடல்
எடையைப் போக்குகிறது.
· பீன்ஸை கொதிக்கவைத்து ஆறிய நீரில்
முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
· பீன்ஸ் சருமத்தைப் பாதுகாக்கும்.
வியர்வையைத் தூண்டும்.
· தொண்டைப்புண், வறட்டு இருமல்,
நாவறட்சி இவற்றைப் போக்கும்.
· கை, கால் நடுக்கத்தைப் போக்கும்.
· நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி
உணவில் சேர்த்து வந்தால் நோயினால்
உண்டான பாதிப்புகள் குறையும்.
· பல் வலியைப் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியைக்
கொடுத்து, வாத, பித்த, கபம்
என்னும் முக்குற்றத்தை சீராக வைத்திருக்கும்.
· நீண்ட நாள் ஆறாத புண்களின் மீது,
பீன்ஸ் வேகவைத்த நீரை ஆறவைத்து புண்களைக்
கழுவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.
பீன்ஸை பொரியல், அவியல்,
சாம்பார் என பலவாறு சமைத்து
உண்ணலாம்.
பீன்ஸைப் பயன்படுத்தி நீண்ட ஆரோக்கியம்
பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக