செவ்வாய், 14 ஏப்ரல், 2020

பெண்மையை போற்றுவோம்....


பெண்மையை போற்றுவோம்...

♥பெண் ஒரு ஆணிடம் சற்று நெருக்கமாய் பழகினால் #ஆட்டக்காரி

♥கண்டுக்கொள்ளாமல் சென்றால் அமைதியாக இருந்தால் #திமிர்பிடித்தவள்..

♥பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் ஆண்கள் பார்வையில் பெண்கள் #லூசுகள், சுயமாய் சிந்திக்க தெரியாதவர்கள், அரைவேக்காடுகள் etc...

♥ஆனால் இவற்றை ஆண்களால் யோசிக்க முடியுமா...??

1♥எங்காவது வெளியே சென்றிருக்கும் போது சிறுநீர் கழிப்பதற்காக கழிப்பிடம் இல்லாமல் வீடு செல்லும் வரை அடக்கிக்கொண்டிருக்க வேண்டிய அவஸ்தையை... (இதனால் தான் பல பெண்கள் பின்னர் பல சிறுநீர் நோய்க்கு உட்படுகிறார்கள்)

2♥பயணத்திலோ, அலுவலகத்திலோ அல்லது நடந்து சென்றுகொண்டிருக்கும் போதோ அவசரமாய் கைப்பையில் தேடி நாப்கினை எடுத்து அதை மாற்ற இடம் தேடி அலையும் கொடுமையை...

3♥ஏதோ ஒரு கூட்டத்தில் இலேசாய் ஆடை விலகி உள்ளாடை வெளியே தெரிய நடந்துசெல்லும் ஒரு பெண்ணை பார்வையிலேயே கற்பழிக்கும் ஆயிரம் கண்களை கடந்து செல்லும் ஒரு சிரமத்தை...

4♥ஆள் நடமாற்றம் அதிகமற்ற ஒரு சாலையில் நான்கு ஆண்கள் கூட்டமாய் நிற்கையில் அவர்களை கடந்து செல்ல வேண்டிய ஒரு பெண்ணின் உளவியலை....

5♥பயணத்திலோ கூட்டநெரிசலிலோ பாலுக்கு அழும் குழந்தைக்கு பால் கொடுக்கமுடியாத வேதனையான நிலையை....

6♥மாதவிலக்கு நாட்களில் கூட பலகிலோமீட்டர் நடந்தோ அல்லது நாள்பூராகவும் நின்றோ வேலைபார்க்கவேண்டிய துயரம் நிறைந்த நாட்களை...

7♥அது ஒருபோதும் ஆண்களால் முடியாது.... இவ்வளவையும் வெகு சாதாரணமாய் அனுதினமும் கடந்து செல்லும் பெண்களின் வலிமையை ஆண்களால் ஒருபோதும் பெற முடியாது...

8♥இந்த வலிமையை பெற பெண்கள் கொஞ்சம் லூசுத்தனமாய் இருந்து தான் ஆக வேண்டும் அல்லது அப்படி இருந்தால் தான் அதை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியும்...

9♥உலகத்தின் அத்தனை கசப்புகளையும் மனதில் சுமந்துக்கொண்டு புன்னகையுடன் செல்லும் ஒரு பெண்ணை இனி சாலையில் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு நீங்கள் எந்த மரியாதையையும் தர வேண்டாம்.. அவர்களை அவர்கள் பாதையில் அமைதியாக செல்ல வழி விடுங்கள்...

* என் சக பெண்களை நல்ல தோழியர்களாகக் கொள்வேன்.

* என் சக தோழியர்களைக் கண்ணியமாக நடத்துவேன்.

* என் தாய்க்கும், சகோதரிக்கும் கொடுக்கும் அனைத்து மரியாதைகளையும் பெண்களுக்குக் கொடுப்பேன்.

* எந்தச் சூழலிலும் கண்ணியக் குறைவாக பெண்களிடம் நடந்து கொள்ள மாட்டேன்.

* பெண்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் ஒருக்காலும் ஈடுபடமாட்டேன்.

* பெண்களை நுகர்வுப் பொருளாக நடத்த மாட்டேன்.

* பெண்களின் உணர்வுகளை மதிப்பேன்.

* பெண்மையைப் போற்றுவேன்.

* மானுடத்திற்கான சமத்துவத்தைக் கடைப்பிடிப்பேன்.

பெண்மையை போற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக