சனி, 11 ஏப்ரல், 2020

டைல்ஸ் போட்ட வீட்டில் ஸ்டைலாக வாழ்கிறீர்களா? அனைத்து நோய்களும் உங்கள் வீட்டில் ஸ்டைலாக வாழ்ந்து கொண்டிருக்கும்.

டைல்ஸ் போட்ட வீட்டில் ஸ்டைலாக வாழ்கிறீர்களா? அனைத்து நோய்களும் உங்கள் வீட்டில் ஸ்டைலாக வாழ்ந்து கொண்டிருக்கும்.


ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் மூன்றாவதாக வருவது உறைவிடமான வீடுதான். அந்த வீடு மனிதனை பாதுகாப்பதற்காக இருக்க வேண்டுமே அல்லாமல் பாதிப்பை உருவாக்குவதாக இருக்க கூடாது. இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அனைவரும் கான்கிரீட் வீடுகளிலேயே வாழ வேண்டும் என்பதைப் பெரிதும் விரும்புகிறார்கள். மேலும் அவ்வாறு கான்கிரீட் வீடுகளில் வசித்தாலும் அதில் டைல்ஸ் போட்டு ஸ்டைலாக வாழவேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் விருப்பமாக உள்ளது.
பொதுவாக பழைய காலங்களில் ஓடு அல்லது ஓலையால் கட்டப்பட்ட வீடுகளில் மக்கள் வசித்தார்கள். மேலும் அவர்கள் வீட்டு முற்றங்களில் பெரும்பாலும் பசு மாட்டின் சாணத்தை கரைத்து, தெளித்து, மெழுகி அதில் கோலமிட்டு வைத்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது பசுமாட்டை நாம் காண முடியவில்லை. அவர்கள் அவ்வாறு செய்ததற்கு காரணம் என்ன என்று தெரியுமா?, பசு மாட்டின் சாணத்தை கரைத்து நம் வீட்டின் முற்றத்தில் தெளித்து விடும்போது அந்த சாணம் வீட்டில் மற்றும் வீட்டை சுற்றி இருக்கும் அனைத்து கிருமிகளையும் கொன்றுவிடும். மேலும் நாம் வெளியில் சென்று கண்ட இடங்களுக்கு சுற்றி திரிந்து விட்டு நம் வீட்டிற்கு வரும்போது நாம் பலவிதமான இடத்திலும் நம் கால்களை வைத்திருப்போம்.
அப்போது பல இடங்களிலும் உள்ள நுண்கிருமிகள் நம் கால் பாதங்களில் தொற்றி இருக்கும்.அந்த கிருமிகள் ஆனது சாணி தரையின் மேல் கால் வைக்கும்போது அழிந்துவிடுகிறது. மேலும் நாம் வீட்டிற்குள் நுழையும் போது நம்மால் மற்றவர்களுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் இப்பொழுது அவ்வாறு இருக்கிறதா? சாணி என்றாலே என்ன என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு காலம் மாறிவிட்டது. நாம் எந்த அளவிற்கு மாறி விட்டோம் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக