புதன், 29 ஏப்ரல், 2020

பாட்டி காலத்தில் சாப்பிட்ட சில கீரை வகைகள்

பாட்டி காலத்தில் சாப்பிட்ட சில கீரை வகைகள்.

1 முள்ளிக்கீரை
2 பண்ணைக்கீரை
3 வேளைக்கீரை
4 சிறுக்கீரை
5 அரைக்கீரை
6 பொன்னாங்கண்ணி
7 தண்டங்கீரை
8 செங்கீரை
9 நாயுருவிக்கீரை
10 தொய்யக்கீரை
11 கோவைக்கீரை
12 கனிமூங்கிக்கீரை
13 பாலைக்கீரை
14 வட்டச்சாரணைகீரை
15 நெருஞ்சிக்கீரை
16 பொருமிக்கீரை
17 பாச்சிட்டிக்கீரை
18 பசலைக்கீரை
19 சுக்குட்டிக்கீரை
20 கருஞ்சுக்குட்டிக்கீரை(மணத்தக்காளி)
21 அப்பக்கோவைக்கீரை
22 குப்பைக்கீரை(குப்பைமேனி)
23 தண்ணிக்குடத்தான் கீரை
24 மணல்வாரிக்கீரை
25 வாதமுடக்கிக்கீரை
26 முடக்கத்தான்கீரை
27 வல்லக்கீரை
28 ஆரைக்கீரை
29 தூதுவளைக்கீரை
30 முருங்கைக்கீரை
31 அகத்திக்கீரை
32 வல்லாரைக்கீரை
33 நிலஆவரைக்கீரை
34 தகரக்கீரை
35நண்டு கொழுப்புகீரை
36 குமுட்டிக்கீரை
37 புளிமிச்சங்(புளிச்ச)கீரை
38 முளைக்கீரை
39 வெந்தயக்கீரை.
இக்கீரைகள் பற்றிய மேலும் சில விளக்கத்தையும் கூறினார்கள்>
இதில் தொய்யக் கீரையை(அப்போதைய) முஸ்லீம்கள் சாப்பிட மாட்டார்கள்.கனிமூங்கிக்கீரை மலையில் மட்டுமே இருக்கும்.பாலைக்கீரைத் தண்டை மூக்கில் விட்டால் வரும் தும்மலில் (நெஞ்சுச்)சளி உடையும். பாச்சிட்டிக்கீரை கோவைக் கீரையைப் போலவே இருக்கும்.அப்பக்கோவைக்கீரை மலையில் மட்டுமே வளரும்.இது கெட்ட வாடை அடிக்கும்.ஆனால் சமைத்த பின் மிக ருசியாக இருக்கும்.வாதமுடக்கிக்கீரையை சதகுப்பையுடன் ரசம் வைத்து (வாதக்)காய்ச்சல் வந்தவர்களுக்குக் கொடுக்க உடன் காய்ச்சல் விலகும்.செங்கீரை என்பது தண்டங்கீரையின் ஒருவகை.ஆரைக் கீரை தண்ணீர் வற்றிய குளத்தில் அதிகம் முளைக்கும்.நிலஆவரைக்கீரை புளியந்தளைபோல் அகலமாக நிலத்தில் படர்ந்திருக்கும்.தகரக்கீரை ஆற்றுக்கால் பக்கம் இருக்கும்.நண்டு கொழுப்புக்கீரை ஓடை ஓரம் அரைஅடிக்கும் மேலே வளரும்.(நண்டு கொழுத்தால் வங்கில் இருக்காது எனும் பழமொழி எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது !).வல்லக்கீரையை ஆண்கள் உண்ணும் பழக்கம் இல்லை.குமுட்டிக் கீரை/புளிமிச்சங்கீரை என்பது கடைகீரைகள். புளிமிச்சங் கீரையைப் பறிக்கும் போது அதன் காயை கவனமாகக் களைய வேண்டும். ஏனெனில் அதன் மொளங்கு ஈக்கி மாதிரி வெள்ளையாக இருக்கும்.இது காற்றில் பறக்கும். கைகால்களில் பட்டால் அரிக்கும்.
நமது கீரைத் தொன்மையை மீட்டெடுத்து நல வாழ்வு வாழ்வோம். வாழ்வாங்கு வாழ்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக