புதன், 8 ஏப்ரல், 2020

ஆவிகள் ஏன் கேமராக்களில் மட்டும் சிக்குகின்றன என உங்களுக்கு தெரியுமா??? இல்லையென்றால் தெரிந்து கொள்ளுங்கள் ...

ஆவிகள் ஏன் கேமராக்களில் மட்டும் சிக்குகின்றன என உங்களுக்கு தெரியுமா??? இல்லையென்றால் தெரிந்து கொள்ளுங்கள் ...


பலருக்கு ஆவிகள் பேய்கள் என்றால் பயம் உண்டு. ஆனால், பெரும்பாலும் ஆவிகள் கேமராக்களில் ஏன் சிக்குகின்றன என்ற கேள்வியானது பெரும்பாலும் அனைவரின் மனதிலும் இருக்கிறது பழைய காலத்து ப்லிம் கேமிரா முதல் தற்போதைய ஸ்மார்ட்போன் கேமிரா வரை இது பொதுவான ஒன்றுதான். கேமராவில் ஆவிகள் ஏன் சிக்குகின்றன என்பதை பார்ப்போம் வாருங்கள் ........
 
ஸ்டீரியோஸ்கோபி மாயையை உருவாக்கும் அல்லது மேம்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஆவிகள் மற்றும் பேய்கள் போன்ற உருவங்கள் சிக்குவது வழக்கமானது தான்.அவைகளில், ஆர்ப்ஸ் (Orbs) எனப்படும் கேமிரா தொழில்நுட்ப கோளாறு மிக முக்கியமான ஒரு காரணமாகும். ஒரு புகைப்படம் எடுக்கும் போது, ஒரு உருண்டை வடிவில் பிரதிபலிக்கும் உருவத்தை தான் ஆர்ப்ஸ் என்பர். இது ஃப்ளாஷ் பயன்படுத்துவதில் மூலம் தூசி அல்லது மற்ற துகள்களின் மேல் விழும் அதீத வெளிச்சத்தினால் உருவாகுகிறது. இதை சிலர் ஆவி, பூதம் என்று கதைக்கட்டி விடுவர். டிஜிட்டல் கேமிராக்கள் தொடங்கி ஸ்மார்ட்போன் கேமிராக்கள் வரை அனைத்துமே மெதுவான இயக்கம் என்றவொரு பொதுவான தொழில்நுட்ப கோளாறை அவ்வப்போது சந்திக்கும். முக்கியமாக இருட்டான இடங்களில் இது அதிகம் நிகழும். இந்த கோளாறின் கீழ் பதியும் புகைப்படத்தில் ஆவி பேய் போன்ற உருவங்கள் தெரிவதும் சாத்தியமே
டபுள் எக்ஸ்போஷர் எனப்படும் சிறப்பு விளைவை உருவாக்க வேண்டுமென்று எடுக்கப்படும் புகைப்படங்களிலும் ஆவிகள் மற்றும் பேய்களை உருவாக்கலாம்.இதற்காக உண்மையில் பேய்கள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் இல்லை என கூறிவிட முடியாது. ஆனால் இப்போதய  தொழில்நுட்பங்களால் இது போன்ற அமானுஷ்யங்களை உருவாக்க முடியும். போலி கருப்பு வெள்ளை புகைப்பட காலம் தொடங்கி அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்ட இந்த காலம் வரை பலர் பணத்திற்காகவும், புகழ்ச்சிக்காகவும் பொய்யான பேய் புகைப்படங்ககளை உருவாக்குவதும், பின் அது போலி என்று நிரூபிக்கப்படுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக