வியாழன், 2 ஏப்ரல், 2020

சேகுவேராவின் வாழ்க்கை பாதையை மாற்றிய பயணம் எது என்று உங்களுக்கு தெரியுமா

சேகுவேராவின் வாழ்க்கை பாதையை மாற்றிய பயணம் எது என்று உங்களுக்கு தெரியுமா


1948 ஆம் ஆண்டு மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா புவனஸ் அயரஸ் பல்கலை கழகத்தில் சேர்ந்தார் ஆனால் 1951 ஆம் ஆண்டு படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு அவரது நண்பரான ஆல்பெர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். தென்னமெரிக்கா முழுதும் தொழுநோய் பிடித்திருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும் அதற்கு தங்களால் எதுவும் மருந்து கண்ண்டுபிடிக்க முடியுமா என்ற தேடலும் அந்த பயணத்திற்கு ஆரம்பம்    
பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றங்களில் இருந்து தொண்டு செய்வது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது, "சே" வாழ்வினை முழுவதும் புரட்டி போட்ட பயணம் அது இதுவரை சே மீது ஒரு புரட்சியின் சிறு நிழலும் விழவில்லை 
 தென்னமெரிக்க கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை ,பிணி ,வறுமை,வாக்குரிமை, அறியாமை, அடக்குமுறை, பறிப்பு, வர்க்க வேறுபாடுகளுக்கு காரணமாக அமெரிக்காவும் அதன் நிறுவனமான சி இ ஏ செயல்படுவதியும் அறிந்தார் 
லத்தின் அமெரிக்கா நாடுகளில் சமூக பொருளாதார ஏற்ற தாழ்வுகளுக்கு அனைத்துக்கும் வாசிங்டனும் அதன் முதலாலித்துவம் மட்டுமே கரணம் என்பதை கண்டறிந்தார், "இந்த பயணம் தான்  சேவின் புரட்சிக்கு காரணமாக அமைந்தது".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக