சனி, 4 ஏப்ரல், 2020

உத்தரகண்ட் குறித்த பத்து அசர வைக்கும் உண்மைகள் பற்றி காண்போம்

உத்தரகண்ட் குறித்த பத்து அசர வைக்கும் உண்மைகள் பற்றி காண்போம்


நந்தா தேவியில் அபாயக் கதிர்கள்;
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் போட்டியில் சில ஆயுதங்கள் கருவிகளைக் கொண்டு பாதுகாப்பு ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது நமக்கு தெரிந்ததுதான். ஆனால் சில சமயங்களில் இங்கு பேசப்படும் ஒரு விசயம் நம்மை அச்சுறுத்துகிறது. அது இங்கு கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக கூறப்படுவதுதான். இங்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஒரு கருவியில் புளூட்டோனியம் காப்சூல் தொலைந்துவிட்டதாம். அதனால்தான் இந்த கதிர்வீச்சு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கோவிலுக்குள் யாருக்கும் அனுமதி இல்லை;
லட்டு டேவ்டா கோவிலுக்குள் பூசாரிக்கே அனுமதி இல்லையாம். அட உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டம் வான் கிராமத்தில் இருக்கும் இந்த கோவிலுக்குள் இந்த கோவில் பூசாரியே போகமாட்டாராம். அட ஆச்சர்யமா இருக்குல.. வெளிய இருந்துதான் பூசை எல்லாம். வருடத்தில் ஒரு முறை மட்டுமே தூரத்திலிருந்து இந்த கோயிலுக்கு பக்தர்கள் வழிபட அனுமதி இருக்கிறதாம்.
பூக்களால் உருவான பள்ளத்தாக்கு;
உலகின் திசைகள் எட்டு என்று வைத்துக்கொள்வோம். எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணுக்கு இனிதாக பல்வேறு வண்ணங்களில் அழகிய மலர்கள் கொத்துக்கொத்தாக இதழ் விரித்து உங்கள் மனதை கொள்ளை கொண்டால் என்ன செய்வீர்கள். அப்படி ஒரு இடம் உத்தரகண்ட்டில் இருக்கிறது. ஆம். உத்தரகண்ட்டின் பூக்களின் பள்ளத்தாக்குதான் அது. வேலி ஆப் பிளவர் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த இடம் மிகவும் அழகானது.
எல்லா நிறத்திலும் பூக்கள் காணப்படுகிறது. இந்த பகுதி ஆங்கில அதிகாரியான ஹோல்ஸ்வொர்த்தால் கண்டுபிடிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு மலையேற்றப் பயணம் மேற்கொண்ட இவர் கொத்துக் கொத்தாய் பூக்கள் நிறைந்த மலைகளுக்கு இடையில் இருந்த இந்த இடத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டார், தன் குடும்பத்தினரிடம் இது பற்றி கூறினார். பின்னர் இது நாளடைவில் சுற்றுலா பிரதேசமானது. 1988ம் ஆண்டு இதை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக