திங்கள், 27 ஆகஸ்ட், 2018

குழந்தைகளின் வளர்ச்சியில் உங்கள் வீட்டின்பங்கு என்ன? (Sponsored Content)


குழந்தைகளின் வளர்ச்சியில் உங்கள் வீட்டின்பங்கு என்ன? (Sponsored Content)

குழந்தைகள் வளர ஆரம்பித்துவிட்டன. இப்போது, வீடு மாற்றவேண்டியது கட்டாயம். குழந்தைகளின் ஆரோக்கியமான மன வளர்ச்சி அவர்கள் வளரும் சூழ்நிலையைப் பொறுத்தே அமையும் என்பதால், பெற்றோர்கள் இந்த விஷயத்தில் நிறுத்தி நிதானமாக யோசித்து முடிவெடுத்தல் அவசியமாகிறது. குழந்தைகளின் வளர்ச்சி, படிப்பு, வருங்கால செயல்திறன் மேம்பாடு, இதையெல்லாம் மனதில்கொண்டு புதுவீட்டை வாங்கச் சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
அடிக்கடி வீடு மாறுகிறீர்களா?
வேலை மற்றும் வாடகை காரணமாக வீட்டை நாம் மாற்றுவதுண்டு. நமக்கு என குடும்பம் ஒன்று வரும்வரை நாம் வீட்டை அடிக்கடி மாற்றலாம். குழந்தைகள் பிறந்தபின் இதே முறையை பின்பற்றுவது சரியல்ல என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஒரே இடத்தில் வளரும்போது குழந்தைகளுக்கு நிம்மதியான சூழலை உருவாக்கிக் கொடுக்கிறோம். பெற்றோருடன் இணைந்து பாதுகாப்பான இடத்தில் வசிப்பதால் குழந்தைகளுக்கு ஸ்திரமான மனநிலை ஏற்படுகிறது. இது, அவர்களை படிப்பிலும் பிற நடவடிக்கைகளிலும் சிறப்பாக செயல்படவைக்கும். வீடு மாறும்போது, அந்தந்தச் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்வதில் சிறார்களுக்கு அதிகச் சிரமமாக இருக்கும். இது, தனக்கென நல்ல நட்பையும் சமூகத் தொடர்புகளையும் ஏற்படுத்துக்கொள்வதில் குழந்தைகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே, குழந்தைகள் பக்குவம் அடையும்வரை ஒரே வீட்டில் வசிப்பதே பரிந்துரைக்கப்படுகிறது.
விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!
குழந்தைகள் ஓடியாடி விளையாடுதல் முக்கியமாகப் பட்டாலும், குழந்தைகளின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ள நிலையில், குறிப்பாக பெண் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்புவதில் பெற்றோர்கள் தயங்குவது அவர்களின் தரப்பு தவிப்பை உணர்த்துகிறது. இருந்தாலும், சிறார்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பது பெருந்தவறு, அவர்களின் வயதை ஒத்த பிள்ளைகளுடன் பரஸ்பரம் பேசுவதும் விளையாடுவதும் முக்கியமாகும். ஸ்கூல் தவிர விடுமுறை நாள்களிளும் ஓடியாடி விளையாடும்போது, அவர்களின் சமூகத் தொடர்பு சார்ந்த செயல்பாடுகள் மேம்படுகிறது, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது, மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. இதனால் நாம் வசிக்கும் வீடு மற்றும் சுற்றுப்புறம் பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டியது அவசியம்!
வீட்டுக்கு அருகாமையில் பள்ளிக்கூடம்...
வீட்டுக்கு அருகில் ஸ்கூல் இருக்கும்போது, குழந்தைகளின் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது. இதனால் நேரம் மிச்சப்பப்படுவதோடு, பயணக் களைப்பின்றி பிள்ளைகள் வீட்டுக்கு வரமுடியும். வீடு அருகில் இருப்பதால், ஸ்கூல் விட்டபின் நேரத்துக்கு வரவேண்டிய கட்டாயத்துக்கு குழந்தைகள் வந்துவிடுகிறன்றனர். பதின்பருவக் குழந்தைகள் ஏற்படுத்திக்கொள்ளும் தேவையற்ற நட்புகளையும், அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் இது தவிர்க்கிறது. பெற்றோரால், குழந்தையின் நடவடிக்கைகளைச் சுலபமாகக் கண்காணிக்கவும் முடிகிறது.
நிலையான வீடு மற்றும் நல்ல சூழல் என்பது குழந்தைகளின் நலத்திலும் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்றைய குழந்தைகள்தான் நாளைய சமுதாயம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் மனதில்கொண்டு, நாம் குழந்தைகளுடன் வசிக்கவிருக்கும் வீட்டை தேர்வுசெய்வது முக்கியமாகும்!


சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்ற குடியிருப்புகள்...
குழந்தைகளுக்கு ஏற்றவாறும் அவர்கள் மனம் விரும்பும் வகையிலும் பல விசேஷ வீடுகளை இன்று அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளன கட்டுமான நிறுவனங்கள். CasaGrand நிறுவனத்தினர், இதேபோன்று CasaGrand ASTA எனும் குழந்தைகளுக்கு ஏற்ற குடியிருப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சென்னை கொரட்டூர் பகுதியில், பாடி மேம்பாலத்துக்கு அருகில் அமையவிருக்கும் ASTA குடியிருப்புகள், அண்ணா நகர் மற்றும் அம்பத்தூருக்கு அருகாமையில், பிரதானமான இடத்தில் அமையவிருக்கிறது. 614 சதுர அடி முதல் 2792 சதுர அடிகளில், 2,3 & 4 பி.எச்.கே. வீடுகள் கொண்ட இத்திட்டத்தில் மொத்தம் 325 அப்பார்ட்மென்டுகள் வரவிருக்கின்றன.
அஸ்டாவின் அம்சங்கள்
குழந்தைகளைப் பராமரிக்கும் பகல் காப்பகம் அஸ்டா வளாகத்துக்கு உள்ளேயே இருப்பது வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு பெரும் அனுகூலமாக இருக்கும். இதனால் குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும் வரை தாய்மார்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. குழந்தைகளை வீடு இருக்கும் அப்பார்ட்மென்ட் வளாகத்துக்கு உள்ளேயே பாதுகாப்பாக விட்டுவிட்டு நம் அலுவல்களை நாம் பார்க்கவியலும். குழந்தைகளுக்கு விளையாட்டுத் திடல், ஸ்கேட்டிங் வசதி, கிரிக்கெட் பயிற்சியிடம், ஹாஃப் பேஸ்கட்பால் கோர்ட், விளையாட்டு உபகரணங்கள் பொருந்திய மண் திடல், படிப்பதற்கு பிரத்தியேக அறை, தியான மண்டபம், உள்விளையாட்டு அரங்கம் என தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்ட காசாகிராண்ட் அஸ்டா அபார்ட்மென்ட்ஸ்-இன் சமீபத்தில் 4 பள்ளிகள், 5 கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவை இருப்பது பெரிய ப்ளஸ்!
குழந்தைகளோடு வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்திட விரும்பும் யாவரும், காசாகிராண்ட் அஸ்டாவில் அப்பார்ட்மெண்ட்களை வாங்க தவறவிடக் கூடாது. ஏனெனில், மகிழ்ச்சியான குழந்தைகள்தான் மகிழ்ச்சியான வீட்டுக்கு அடையாளம்!
நன்றி விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக