வியாழன், 9 ஆகஸ்ட், 2018

காலஞ்சென்ற கலைஞர் உரைத்த முத்தான வாழ்க்கைக்கு வித்தாகும் பொன்மொழிகள்..!


காலஞ்சென்ற கலைஞர் உரைத்த
முத்தான வாழ்க்கைக்கு வித்தாகும் பொன்மொழிகள்..!

1 "தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை."

2 "உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்."

3 "தோழமையின் உயிர்த்துடிப்பே, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது."

4 "குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும்... கூர்வாளைக் கூர்வாளால் சந்திக்க வேண்டும்."

5 "மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது"

6  "புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்... உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்."

7 "வாழும் போது மனிதர்களைப் பிரித்துவைக்கும் சாதிவெறி, அவர்கள் இறந்த பிறகாவது தணிந்துவிடுகிறதா?"

8 "மிஞ்சினால் கெஞ்சுவது எப்படி கோழைத்தனமோ; அதைப் போன்றுதான் கெஞ்சினால் மிஞ்சிகிற வீரமும் ஆகும்."

9 "உண்மையானவனின் பின்னால் ஐந்து பேர் செல்வார்கள்... அந்த உண்மையைப் புரியாதவன் பின்னாலும் ஐந்து பேர் செல்வார்கள்."

10 "இழிவு செய்யும் நண்பர்களை விட, எதிர்த்து நிற்கும் பகைவர் எவ்வளவோ மேல்!"

11 "பதவி என்பது முள்கிரீடம் போன்றது!"

12 "அனுபவம் ஒரு பள்ளிக்கூடம்... ஆனால், அதில் ஆணவக்காரர்கள் கற்றுத் தேர்வதில்லை."

13 'முடியுமா நம்மால்' என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். 'முடித்தே தீருவோம்' என்பது வெற்றிக்கான தொடக்கம்.

14 "அணு அளவுகூட இதயமிலாத ஒருவருக்கு ஆகாயம் அளவு மூளையிருந்து என்ன பயன்?"

15 "ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை, அவர் இறந்துபோன நாளில் கணக்கிடத் தெரிந்துகொள்ளலாம்."

16 "தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை."

17 "ஆசைகள் சிறகு ஆகலாம்; அதற்காக கால்களை இழந்துவிட்டு பறந்தால் பூமிக்கு திரும்ப முடியாது."

18 "அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது."

19 "அதிருப்தியாளர்கள் வளரவளர அவர்களின் மத்தியிலே அவர்களை நடத்தி செல்லும் தலைவன் ஒருவன் தோன்றிவிடுவான்."

20 "தான் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் போது தன் மக்களின் முகம் சுண்டக் கூடாது என்பதில் குறியாக இருப்பது தாய்க் குணம்."

21 "தவறு செய்ய ஆரம்பிக்கிறவனுக்கு அஸ்திவாரத்திலே ஏற்படுவதை விட, உச்சி போய் சேரும் போது தான் அதிக அச்சம் தோன்றுகிறது.

22 "பழியுணர்வு மட்டுமே வாழ்க்கை எனக் கொண்டவர்கள், பகைவர் முயற்சி இல்லாமலேயே தமக்கு தாமே குழி வெட்டிக் கொள்வார்கள்."

23 "சிரிக்க தெரிந்த மனிதன் தான் உலகத்தின் மனித தன்மைகளை உணர்ந்தவன்."

24 "கண்ணீரில் மலரும் காதல், சேற்றில் மலரும் செந்தாமரையாகக் காட்சி தருவதும் உண்டு."

25 "துணிவிருந்தால் துக்கமில்லை... துணிவில்லாதவனுக்கு என்றும் தூக்கமில்லை..."

26 நான், எனது என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது..
நாம், நமது என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும்.

27 நேற்று என்பது என்றும்
நடந்ததை நினைவு கூறவே..
இன்று என்பது எதையும்
நாளை என்றில்லாமல் கடமையை உடனே செய்யவே.!

28 உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த தமிழ் மண்ணுக்குரிய பண்பாடு.

29 எதிரிகளை அழிப்பதைவிட அவர்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் நாச எண்ணங்களை தலை குனியச்  செய்வதே நிரந்தர வெற்றி..!

30 புகழும் பாராட்டும் கிடைக்கும் போது குட்டையன வாயிலை
கடப்பது போல குனிந்து செல்ல வேண்டும்..! இல்லையெனில் நெற்றியடி நிச்சயம்..!!

31 வீரன் சாவதே இல்லை.
கோழை வாழ்வதே இல்லை

32 விதவை என்ற  வடமொழி சொல்லை
தமிழில் கைம்பெண் என்று எழுதிப்பார் இரண்டு பொட்டு வைக்கலாம். தமிழ் வஞ்சிக்காது. வாழவைக்கும்

*ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்'* *என்று தனது கல்லறையில் எழுத வேண்டும் என்பது கலைஞரின் கடைசி விருப்பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக