உங்கள் வீட்டில் உள்ள பலசரக்கு சாதனங்களில் வண்டு மற்றும் பூச்சிகள் வராமல் இருக்க,இதை ட்ரை பண்ணுங்க...
பொதுவாக குளிர் காலங்களிலும்,மழை காலங்களிலும் தான் பூச்சிகளும்,வண்டுகளும் வீட்டில் உள்ள அரிசி,உளுந்து,மாவு போன்ற பலவகையான பொருட்களை பாழாக்கும்.
கோடைகாலத்தில் இந்த பிரச்சனையே வராது.எனவே எந்தெந்த பொருட்களை எவ்வாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று இப்போது பார்ப்போம்.
- உளுத்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பு போன்றவற்றில் பூச்சிகள் மற்றும் வண்டுகள் வராமல் இருக்க வேப்பிலைகளையும்,வசம்பு துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும்.
- அரிசியில் மிளகாய் வத்தலை போட்டு வைத்தால் வண்டு வராது.
- சர்க்கரை மற்றும் வேறு வகையான இனிப்பு பொருட்களில் எறும்புகள் வராமல் இருக்க கிராம்புகளை சிறிதளவு போட்டு வைத்தால் போதுமானது.
- பிரியாணி அரிசியில் சிறிது உப்பு தூள் கலந்து ஒரு டப்பாவில் தட்டி வைத்துக்கொண்டால் பூச்சி கூடுகள் கட்டாது.
- புளியை சுத்தம் செய்து சிறிது கல் உப்பு சேர்த்து,கண்ணாடி குடுவையில் வைத்தால் ஒரு வருடம் ஆனாலும் பூச்சிகள் வராது.
- அரைத்து வைத்த மாவில் பூச்சிகள் வராமல் இருக்க ,சிறு துணியில் சிறிதளவு உப்பை கட்டி மாவு இருக்கும் பாத்திரத்தில் வைத்தாலே போதும்.
- சில பொருட்களில் பூச்சிகள் வருவதாக தென்பட்டால் அதனை அப்படியே சிறிது நேரம் வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக