ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள இந்த பிரச்சனைகள் நீங்கும்.
இன்றும் சளி பிடித்து தலை பாரமாக இருந்தால் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து முகத்திற்கு ஆவி பிடிப்போம். இப்படி செய்யும் போது தலையில் அதிகமாகச் சேர்ந்துவிட்ட நீர் வியர்வையின் மூலம் வெளியேறி முக வீக்கம், நீர்க்கோவை, தலைபாரம் ,தலைவலி குறைந்து ஒரு புத்துணர்வு கிடைக்கும்.இப்படி சளி பிடித்தால் மட்டும் செய்வதை வாரம் இரண்டு முறை கொதிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு செய்தால் கிடைக்கும் அற்புதமான நன்மைகளை பற்றிதான் இங்கு பார்க்கபோகிறோம்.
ஆவி பிடிப்பதால், முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து விடும். அதாவது, முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் பருக்கள் ஏற்படுகிறது. இப்படி அடிக்கடி ஆவி பிடித்து வந்தால் முகப்பரு போய்விடும் அதாவது முகப்பரு இருப்பவர்கள் oru 5 நிமிடம் வரை ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், முகப்பரு உடைந்துவிடும். இதனால் முகப்பருவை எளிதாக போக்கி விடலாம்.
பொதுவாக முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. இது போன்று வாரம் இரண்டு முறை ஆவி பிடித்தால், அழுக்குகள் நீங்கி பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும். முகம் பொலிவு பெரும்: ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் அழகாக, பொலிவோடு இருக்கும்.
மேலும் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள் மட்டுமல்லாமல் கிருமிகளும் விரைவில் வெளியேறிவிடும் அதேபோன்று முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் வேரோடு நீங்கிவிடும். மீண்டும் வராது . ஆகவே வாரம் இரண்டு முறை முகத்திற்கு ஆவி பிடித்தால் சோர்ந்து போன உங்கள் முகம் புத்துணர்ச்சியுடன், அழகாக மாறி விடும். மேலும் இதில் சேர்க்கபடும் வேப்பிலை சிறந்த கிரிமி நாசினி என்பதால் அதன் பலன் கண்கூடாக தெரியும்.
உண்மையிலேயே பயன் தரக்கூடிய இந்த ஆவிபிடித்தல் முறையை நீங்களும் வாரம் இரண்டு முறை செய்து சருமத்தை அழகாக மாற்றி கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக