சனி, 4 ஆகஸ்ட், 2018

கருப்பாய் இருப்பவரா நீங்கள் வெண்மையாக ஒரு எளிய வழி...

கருப்பாய் இருப்பவரா நீங்கள் வெண்மையாக ஒரு எளிய வழி...


இன்றைய உலகில் பெண்கள் தங்களை அழகு படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர் .எப்படிடா வெள்ளை ஆகலாம் என்று பார்க்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு எளிய வழி இதோ ! 
பப்பாளி பழச் சாறு:
         சிறந்த ‘ப்ளீச்சிங் ஏஜென்ட்’. ஏ, சி, இ உள்ளிட்ட பல வைட்டமின்கள் அடங்கியிருக்கின்றன. பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தொடர்ந்து தடவி வருவதன் மூலம் சரும வெடிப்பு, இறந்த செல்கள் மற்றும் அழுக்கு நீங்கி, பளபளப்பு கிடைக்கும். முகம் பொலிவுடன் காணப்படும். 
தேங்காய் :
    இளநீர், தேங்காய்ப் பால், எண்ணெய் என இதிலிருந்து கிடைக்கும் அனைத்துமே நம் அழகைப் பாதுகாப்பதில் அற்புதமானவைதான். தேங்காய்ப் பாலை எடுத்து முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், வறண்ட சருமம் மாறி, முகம் பளபளப்பாக மின்ன ஆரம்பித்துவிடும். நல்ல ஒரு முகப்பொலிவை பெறலாம்.
கற்றாழை:
   இளமையைத் தக்க வைக்கும் கற்றாழைக்கு ‘குமரி’ என்ற பெயரும் உண்டு. இதிலிருக்கும் ஆக்சின் (auxin), கிப்பெரெல்லின் (gibberellins) போன்ற ரசாயனங்கள், நம் உடலில் புதிய செல்களை உருவாக்க உதவும். இதன் சதைப் பகுதியை சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால், சருமம் பொலிவாகும். 
கசகசா :
  கசகசாவுடன் தண்ணீர் விட்டு அரைத்து அதன் பாலை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சரும செல்களைப் புதுப்பித்துப் புத்துணர்ச்சி தரும். மேலும், சரும கருமையையும் கருவளையத்தையும் நீக்குவதில் வல்லது. சிலருக்கு இது சரும அலர்ஜியை ஏற்படுத்தலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். முகத்திற்கும் நல்லது.
ரோஸ் வாட்டர்:
 

  பருத்தி அல்லது சுத்தமான துணியில், ரோஸ் வாட்டரை நனைத்து, சருமத்தின் மீது தேய்த்து வந்தால், குளிர் காற்றினால் ஏற்படும் வறண்ட சருமத்தையும் அதனால் ஏற்படும் எரிச்சலையும் தவிர்க்கலாம். தேங்காய் எண்ணெய், தேன், ரோஸ் வாட்டர் மூன்றையும் தலா, இரண்டு டீ ஸ்பூன்கள் அளவுக்குக் கலந்து முகம் மற்றும் கை கால்களில் தடவி வந்தால் வறண்ட சருமத்திற்கு நிரந்தர தீர்வு காணலாம். சருமத்தின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வது இதன் கூடுதல் சிறப்பு. முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக