வியாழன், 9 ஆகஸ்ட், 2018

பாடம் படிக்க உகந்த நேரம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

பாடம் படிக்க உகந்த நேரம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

எதைச் செய்ய வேண்டுமானாலும், அதற்கென ஒரு நேரம் இருக்கிறது எனப் பெரியவர்கள் சொல்வார்கள். ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது வழக்கு. ஆடி மாதத்தில் தென்மேற்குப் பருவமழையால் ஆற்றில் புதுநீர் புரண்டோட, அதுவே பயிரிடுவதற்கு ஏற்ற பருவம் என்பதை இது குறிக்கிறது.
1)அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்தால் நாள் முழுவதும் உடலிலும், உள்ளத்திலும் ஒரு சக்தி நிறைந்திருப்பதை உணரலாம். அதையே கடின உழைப்பின் கடைசியில் மாலையில் செய்தாலும், இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்து அடுத்த நாளை உற்சாகத்தோடு தொடங்கலாம். ஏதோ ஒருவகையில், எப்பொழுது செய்தாலும் உடற்பயிற்சி உகந்தது என்பது மட்டும் உண்மை.
Credits:lanksarinews
2)கல்வியே கண்கண்ட கடவுள் என்ற நிலையில் கற்பதில் போட்டி கணக்கின்றி நடக்கிறது. ஆனால், தினமும் படிக்க ஏற்ற நேரம் என்பது மட்டும் ஒரு கேள்விக்குறியாக இன்னும் இருக்கிறது. பெற்றோர்களிடம் கேட்டால் 24 மணி நேரமும் என்பார்கள்; அதையே ஆசிரியர்கள் 48 மணி நேரம் என்பார்கள். 
3)‘கணிதத்தில் கடன் வாங்குவதைப்போல எங்கிருந்து வேண்டுமானாலும் நேரத்தை வாங்கு’ என்பார்கள். ஆனால், பல மாணவர்களோ தேர்வுக்கு முந்தைய நாள் அல்லது படிப்பு விடுமுறைதான் தேர்வுக்குப் படிக்கும் நேரம் என்று சொல்வார்கள். கல்வி என்ற முக்கோணத்தின் மூன்று பக்கங்களாக இருப்பவர்களே மூன்று கோணங்களில் மாறுபட்டிருப்பதைப் பார்க்கிறோம்.
Credits:google
4)தினமும் படிக்கவேண்டிய பாடத்தைப் படிப்பு விடுமுறைவரை காத்திருக்க வைப்பது எத்தனை முட்டாள்தனம்! நாளும் மூன்றுவேளை உண்ணவேண்டியதைச் சேர்த்துவைத்துத் தூங்கும்முன் உண்ணமுடியுமா? அப்படி உண்டாலும், உடல் தாங்குமா? உடலில் தங்காமல் போகுமே! அவ்வப்போது அளவோடு உண்டால் ஆயுளும் கூடும். எனவே, தினமும் படிக்கவேண்டும் என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்து இருக்கமுடியாது; இருக்கக்கூடாது. ஆனால், ஒவ்வொரு நாளும் வீட்டில் படிப்பதற்கு ஏற்றநேரம் எது என்பதில்தான் ஒரு தெளிவான ஒன்றுபட்ட சிந்தனையில்லை.
Credits:google
5)குழந்தைகள் பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிவரும் முன்னரே அன்றைய ஹோம்வொர்க் பற்றிய விவரம் பெற்றோரின் கைபேசியில் குறுஞ்செய்தியாக வந்துவிடுகிறது. ‘இன்று உன் நாள் எப்படி இருந்தது? மதிய உணவை முழுவதும் முடித்தாயா? ஜூஸ் குடித்தாயா?’ போன்ற சிறுசிறு விசாரிப்புகள்கூட இன்றி ஏதோ ஒரு கம்பெனியில் வேலைக்கான இண்டர்வியூ நடத்துவதுபோல வீட்டுப்பாடம் பற்றிக் கேள்விக்கணைகள் தொடுக்கின்றனர். அதுவும் ஒரு குழந்தை உள்ள வீடென்றால் அக்கறை என்ற பெயரில் அதை அக்கரைக்குத் தள்ளிவிடுகின்றனர்.
உங்களுக்கு எந்நேரமும் சரியெனத் தோன்றினால், இரவில் 10 மணி வரை நன்றாகப் படித்துவிட்டு நிம்மதியாகத் தூங்குங்கள். காலையிலும் 5 மணிக்கு எழுந்து, படித்தவற்றை நினைவுகூர்ந்தால் அல்லது மீதியிருப்பதைப் படித்தால், அது வகுப்பில் ஆசிரியர் கேட்கும்போது உதவுவதோடு அடுத்த பாடத்திலும் தொடர்ந்து பயணிக்கக் கை கொடுக்கும். மூளைக்கும் ஓய்வு மிக அவசியம். தேர்வாக இருந்தாலும் உங்கள் மூளையை ஓய்வின்றி பட்டினி போடாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக