திங்கள், 19 மார்ச், 2018

பெரியார் பட்டம் வழங்கப்பட்டதன் பிண்ணணி இது தான் ;


பெரியார் பட்டம் வழங்கப்பட்டதன் பிண்ணணி இது தான் ;

1930 ல் சென்னை பெரம்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த தோழர் ஒருவரின் திருமணத்தை நடத்திவைக்க அந்த பெரியவர் ஈ.வே ராமசாமி செல்கிறார். அது சேரிப் பகுதி என்பதால் திருமணம் முடிந்தவுடன் சாப்பிடாமல் செல்ல பலர் முயற்சிக்கின்றனர் அப்போது மழை வேறு வந்துவிட்டது. சேரிப் பகுதியே சேரும் சகதியுமாக மாறிவிட்டது. அங்கு உட்கார வைத்து சாப்பாடு போட முடியாத சூழல் ஏற்படுகிறது. இதைப் பார்த்த அந்த பெரியவர் அனைவரும் சாப்பிடாமல் சென்றால் அந்த ஏழை தம்பதியை அவமானப்படுத்துவது போல் ஆகுமே அவர்கள் மனவருத்தம் அடைவார்களே என்று உடனடியாக ஒரு ஓலையை தரையில் போட்டு உட்கார்ந்து அப்படியே கையில் தட்டில் சாப்பாடு வாங்கி சாப்பிட ஆரம்பித்து விட்டார். இதைப் பார்த்த மற்றவர்களூம் அவ்வாறே சாப்பிட்டனர் இந்த சம்பவத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து போய்விட்டாராம் அந்த திருமணத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த மீனாம்பாள் சிவராஜ். அதன் பிறகு இந்த கிழவருடன் தொடர்ச்சியாக சேர்ந்து பணி செய்கிறார் அந்த அம்மையார் இப்படிப்பட்ட மனிதருக்கு நாம் எதாவது சிறப்பு செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தாராம் அது போலவே 1939 ல் நீலாம்பிகை, தர்மாம்பாள் ஆகியோருடன் சேர்ந்து முடிவெடுத்து மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் அந்த மனிதருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் அவர் பெரியார் என்றே அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக