ஞாயிறு, 25 மார்ச், 2018

இதையெல்லாம் மறந்தும் கூட ஃப்ரிட்ஜ்ல வச்சுராதீங்க...

இதையெல்லாம் மறந்தும் கூட ஃப்ரிட்ஜ்ல வச்சுராதீங்க...

இன்று பெரும்பாலானோர் வீடுகளில் ப்ரிட்ஜ் இருந்து வருகிறது.அதில் எந்த உணவுகளையும் வைத்து சாப்பிடலாம் என நாம் நினைப்பது தவறு.ப்ரிட்ஜ்ல் வைத்த உணவுகளை மறுநாள் சாப்பிடுவது தவறான ஒன்று.எந்தெந்த பொருட்களை ப்ரிட்ஜ்ல் வைக்க கூடாது என்பதை பார்ப்போம்.
 
சாஸ்(Hot sauce )
சூடான சாஸ் ப்ரிட்ஜ்ல் வைக்காமல் இருந்தாலே அவை மூன்று வருடங்கள் வரை புதிதாக இருக்கும்,அவை திறக்க பட்டிருந்தாலும் கூட.
உருளைக்கிழங்கு 
உருளைக்கிழங்குகளை ஒரு பேப்பர் பைகளில் சுற்றி வைத்தாலே அவை கெட்டு விடாமல் இருக்கும்.ப்ரிட்ஜ்ல் வைக்கும் போது அவற்றின் ருசி மாறிவிடும் மற்றும் உடனே அழுகிவிடும்.
வெங்காயம் 
வெங்காயத்தை காற்றோட்டமான இடத்தில வைத்தாலே அவை நன்றாக இருக்கும்.உருளைக்கிழங்குக்கு அருகாமையில் இவற்றை வைக்க வேண்டாம்.அவற்றிலிருந்து வெளிவரும் வாயு வெங்காயத்தை அழுக செய்துவிடும்.
வெங்காயத்தை பிரிட்ஜ்ல் வைத்தால் இவற்றின் மணம் மற்ற பொருட்களின் மணகளுடன் சேர்ந்து துர்நாற்றம் வீசக்கூடும்.
பிரட்
பிரட் போன்ற பேக்கரி பொருட்களை நன்றாக பேப்பர் பைகளில் மூடி சாதாரண வெப்பநிலையில் வைத்தாலே அவை கெட்டுவிடாமல் இருக்கும்.இவற்றை பிரிட்ஜ்ல் வைக்கும் போது இவற்றின் சுவை மாறிவிடும் மற்றும் குளிரில் விறைத்துவிடும்.
தேன்
தேன் இயற்கையிலேயே கெட்டுப்போகாது பொருளாகும்.அவற்றை இறுக மூடி வெளியில் வைத்தாலே அவற்றின் சத்துக்கள் பாதுகாப்பாக இருக்கும்.
வாழைப்பழம் 
வாழைப்பழத்தை பிரிட்ஜ்ல் வைக்கும் போது அதில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான குளிர் அவற்றை அழுகிவிட செய்யும்.வாழைபழத்தை காற்றோட்டமான திறந்த சூழலில் வைத்தாலே கெட்டுவிடாமல் இருக்கும்.
ஆரஞ்சு,எலுமிச்சை 
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழங்களை சாதாரண வெப்பநிலையே பழுக்க செய்துவிடும்.குளிர்ந்த சூழலில் இவற்றை வைக்கும் போது,இந்த பழங்களில் உள்ள சிட்ரஸ் அமிலம் பாதிக்கப்பட்டு அவற்றின் சுவையை மாற்றிவிடும்.
சமையல் எண்ணெய்,காபி,அரிசி,வெட்டப்பட்ட தர்ப்பூசணி பழம்,ஜாம்,பாதாம்,முந்திரி போன்ற பொருட்களை பிரிட்ஜ்ல் வைத்து சாப்பிட வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக