வியாழன், 15 மார்ச், 2018

திருமணமும் தமிழ் பாரம்பரியமும்



திருமணமும் தமிழ் பாரம்பரியமும்:

நம் அப்பா/அம்மா, தாத்தா/பாட்டிகள், திருமண அழைப்பிதழ் எழுதுவதில் கூட, அழைப்பிதழைப் பெறுவோரின் வாழ்க்கைக்குப் பயனுள்ளத் தகவல்கள் கிடைக்கப்பெறுமாறு எழுதினர்.

அப்படி ஒரு பயனுள்ள தகவல் "திருநிறைச்செல்வன்/செல்வி, திருவளர்ச்செல்வன்/செல்வி," ஆகிய பதங்களுக்குள் மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கும்.

திருவளர்ச்செல்வன்/செல்வி என்றால் அது அந்தக் குடும்பத்தின் மூத்த மகன்/மகளின் திருமணமாகும். திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் இளைய மகன்/மகளின் திருமணமாகும்.

திருவளர்ச்செல்வன்/செல்வி எனும் போது, "திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன்/மகளுக்கு, இளைய சகோதர/சகோதரிகள் உள்ளனர். இது எங்கள் இல்லத்தின் முதல் திருமணம் ஆகும்.

எங்கள் இளைய குமாரன்/குமாரிக்குத் திருமண வயது நிரம்பும் போது, உங்கள் மகன்/மகளுக்கு, திருமண வயது நிரம்பி இருந்தால், வரன் கேட்டு வரலாம்," என்பதைப் பெரியவர்கள் நினைவில் கொள்ள, மறைமுகமாகத் தெரிவிப்பதாகும்.

திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் எங்கள் இல்லத்தில் திருமணங்கள் நிறைவுற்றன, இத்திருமணமே இறுதியானதாகும், இனி எங்கள் இல்லத்தில் மணமக்கள் யாரும் இல்லை என்று பொருள்படும்.

இதையே, சமஸ்கிருதத்தில் ஜேஷ்டகுமாரன்/குமாரி, கனிஷ்டகுமாரன்/குமாரி என்று குறிப்பிடுவர்.

மொபைல் ஃபோன்கள், வாட்ஸப், ஃபேஸ்புக், மேட்ரிமோனி தளங்கள் இல்லாத காலத்தில், நம் முன்னோர்கள், வரன் தேட, பத்திரிகைகளில் உள்ள இது போன்ற சிறுசிறு குறிப்புகளின் மூலம் நினைவுப்ப்படுத்திக் கொண்டனர்.

ஆதலால், திருமண அழைப்பிதழ்களைத் திருமணம் நிகழ்ந்ததும் அதன் பணி நிறைவுற்றது என்பதாக நம் முன்னோர்கள் கருதவில்லை. அதை பத்திரப்படுத்தி, தத்தமது மகன்/மகள்களின் திருமணத்திற்கு வரன் தேடப் பயன்படுத்திக் கொண்டனர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக