ஞாயிறு, 25 மார்ச், 2018

புத்தகங்கள் பற்றி



புத்தகங்கள் பற்றி...

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் 👉மகாத்மா 👈

கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம்
👉தந்தை பெரியார் 👈

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  👉ஜவஹர்லால் நேரு 👈

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் 👉பெட்ரண்ட் ரஸல்👈

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார்
👉ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்👈

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் 👉நெல்சன் மண்டேலா👈

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி 👉லெனின👈 கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் 👉சார்லிசாப்லி👈

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் 👉வின்ஸ்டன் சர்ச்சில்👈

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம்
👉மார்டின் லூதர்கிங்👈

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம்
👉பகத்சிங்👈

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
👉ஆபிரகாம் லிங்கன்👈

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
👉ஜூலியஸ் சீசர்👈

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
👉டெஸ்கார்டஸ்👈

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
👉இங்கர்சால்👈

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!  👉பிரான்சிஸ் பேக்கன் 👈

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
👉லெனின்👈

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
👉ஆஸ்கார் வைல்ட்👈

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
👉சிக்மண்ட் ஃப்ராய்ட்👈

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
👉 மாசேதுங்👈

கல்வி கற்போர்களாக இருங்கள் பின்பு கற்பிப்பவர்களாக  இருங்கள்
👉 நபிகள் நாயகம்👈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக