செவ்வாய், 14 நவம்பர், 2017

ஆண்களுக்கான மச்ச பலன்கள்..



ஆண்களுக்கான மச்ச பலன்கள்..

*இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.*

*நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.*

*வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.*

*வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.*

*வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.*

*வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.*

*இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.*

*இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை*
*சீராக இருக்கும்.* *இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை*
*சம்பவத்தை சந்திப்பார்.*

*இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.*

*இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.*

*இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.*

*இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு*
*தனிநபர் ஆவார்கள்.* *இருப்பினும் அவர்களது வாழ்நாளின்* *பிற்பகுதியில்*
*அதிர்ஷ்டத்தை* *அடைவார்கள்.*

*மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.*

*மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.*

*மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.*

*மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம்* *உள்ளவர்களாக இருப்பார்கள்,*
*சற்றே கர்வமும், சற்றே* *பாதுகாப்பு உணர்வும்* *இவர்களிடம் மிகுந்திருக்கும்.*

*மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.*

*நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.*

*மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.*

*மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.*

*மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.*

*மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.*

*வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும்.*
*உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள்.* *எப்பொழுதும் சிரித்த முகத்துடன்*
*மகிழ்ச்சியான* *வாழ்க்கை அமையும்.*

*இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.*

*வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.*

*இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.*

*இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர்.* *பேச்சுதிறன், பிறரை*
*வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.*

*தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.*

*கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.*

*கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.*

*இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.*

*வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.*

*மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும்*
*குணத்துடன் இருப்பார்.* *அமைதியான சுபாவமும் கடுமையான* *உழைப்பாளியாகவும்*
*இருப்பார்.*

*வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.*

*வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.*

*வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.*

*தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.*

*வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.*

*வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.*

*இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்.*

*முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.*

*முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.*

*முதுகின்*
*இடப்பக்கம் தோளுக்கு* *அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான* *வாழ்க்கையை*
*பெற்றிருப்பார்.* *தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த* *காரியத்தையும் செய்யும்*
*மனநிலை அவருக்கு இருக்கும்.*

*புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்.*

*நெற்றியின் வலது புறம் & தனயோகம்.*

*வலது புருவம் & மனைவியால் யோகம்.*

*வலது பொட்டு (நெற்றி) & திடீர் அதிர்ஷ்டம்.*

*வலது கண் & நண்பர்களால் உயர்வு.*

*வலது கண் வெண்படலம் & புகழ், ஆன்மீக நாட்டம்.*

*இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செலவாளி*

*மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை.*

*மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடையும் அம்சம்.*

*மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்.*

*மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை.*

*மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்.*

*மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்.*

*வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்.*

*இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு.*

*வலது காது நுனி & சில கண்டங்கள் வரலாம்.*

*இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவமானம்.*

*காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்.*

*தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்.*

*கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை.*

*இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்.*

*வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்.*

*வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை.*

*அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை.*

*புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக