பிறக்க போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிய :-
கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிய பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது அவர்கள் தரையில் இருந்து எழுந்திருக்கும் பொழுது இடது கையை ஊன்றி எழுந்தால் அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்றும், வலது கையை ஊன்றி எழுந்தால் அவர்களுக்கும் ஆண்குழந்தை பிறக்கும் என்றும் அறிக. அதே போல், கர்ப்பிணி பெண்களுக்கு வயிறு நேராக இருக்காது. இடதுபுறமோ, அல்லது வலது புறமோ சாய்ந்து இருக்கும். வயிறு இடதுபுறம் சாய்ந்து இருந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்றும், வலது புறம் சாய்ந்து இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று அறிக.
கர்ப்பிணி பெண் நடந்து போகும் போது அவளது பெயரை சொல்லி கூப்பிட்டால், அவள் வலதுபுறமாக திரும்பினால் 'ஆண் குழந்தையும் ' இடது புறமாக திரும்பினால் ' பெண் ' குழந்தையும் ' பிறக்கும் என்று அறிக.
கர்ப்பிணி பெண் படியில் ஏறும் பொழுது முதலில் அவளது வலது காலை எடுத்து வைத்தால் ' ஆண் குழந்தை ' என்றும், இடது காலை எடுத்து வைத்தால் ' பெண் குழந்தை ' என்றும் அறிக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக