வியாழன், 23 நவம்பர், 2017

மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை போக்குவது எப்படி!?



மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை போக்குவது எப்படி!?

*நமது மனதில் நேர்மறையான சிந்தனைகள் காணப்பட்டால், நமக்கு நல்லதே நடக்கும்.*

*ஆனால் சில சமயங்களில் தோன்றும் எதிர்மறையான சிந்தனைகளால் நமது மனம் குழப்பத்திற்கு உள்ளாவதோடு அது நமது வாழ்க்கையில் நிம்மதி இல்லாமலும் செய்துவிடுகின்றது.*

*இவ்வாறான எதிர்மறையான சிந்தனைகளில் இருந்து தப்பித்துக்கொள்வது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.*

*அமைதியான ஓர் இடத்தில் உங்களது கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் அமருங்கள். இதற்காக எந்தவொரு இடையூறும் இல்லாத இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.*

*மனதை ஒருமுகப்படுத்தி உங்களது நினைவுகளை எல்லாம் உங்கள் மூச்சின் மீது மட்டும் வையுங்கள்.*

*வேறு எந்த விடயங்களைப் பற்றியும் யோசிக்காமல் இருத்தல் வேண்டும். அவ்வாறு யோசிப்பது உங்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும்.*

*உங்களது சிந்தனைகள் உங்களுக்கு எந்த விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்.*

*நீங்கள் நேரில் பார்ப்பவற்றை, கேட்பவற்றை, நுகர்பவற்றை மற்றும் சுவைப்பவை அனைத்தையும் இரசியுங்கள். உங்களது மனதில் இருக்கும் எந்த ஒரு செயல் உங்களது எதிர்மறை எண்ணங்களை நீக்கும் என்பது குறித்து சிந்தியுங்கள்.*

*அடுத்ததாக நீங்கள் உங்களது மனதில் இருந்து எந்த எண்ணத்தை நீக்க வேண்டும் என்பது குறித்து சிந்தியுங்கள்.*

*அந்த எதிர்மறை எண்ணத்தை போக்கும் ஒரு நேர்மறையான, மகிழ்ச்சியான விடயத்தைப் பற்றி நினத்து, உங்களது எதிர்மறை எண்ணங்களை வெல்லுங்கள்.*

*அதன் பின் மெதுவாக கண்களை திறந்து, ஆழமாக சுவாசியுங்கள். மகிழ்ச்சியான ஒரு நடையுடன் மனதிற்கு அமைதி தரும் இடங்களுக்கு சென்று வாருங்கள்.*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக