வியாழன், 30 நவம்பர், 2017

கர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!



கர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு குறிப்பிட்ட உணவுகளின் மீது நாட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக புளிப்பாக, இனிப்பாக மற்றும் உப்புள்ள உணவுகளை கர்ப்பிணிகள் அதிகம் விரும்புவார்கள். மேலும் காய்கறி மற்றும் பழங்களுள் புளிப்பாக இருக்கும் மாங்காயை கர்ப்பிணிகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தற்போது மார்கெட்டில் கிவி பழத்தை அதிகம் விற்பதைக் கண்டிருப்பீர்கள். அப்பழத்தை சாப்பிடலாமா கூடாதா என்ற எண்ணமும் மனதில் எழும். நிச்சயம், கர்ப்பிணிகள் இப்பழத்தை சாப்பிடலாம். கிவி பழம் சற்று புளிப்புச் சுவையுடனும், இனிப்புச் சுவையுடனும் இருக்கும். இதில் கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை மற்றும் சர்க்கரை மிகவும் குறைவாகவே உள்ளது.
சரி, இப்போது கிவி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.
நீங்க சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் ஆரோக்கியமானது தானா? வியக்கத்தக்க உண்மைகள்!
மகளை ‘கௌரவ கொலை’செய்த தந்தை! மீண்டு வந்த மகள் என்ன செய்தார் தெரியுமா?


ஃபோலேட்
கிவி பழத்தில் ஃபோலேட் அதிக அளவில் உள்ளது. இது செல்களின் உருவாக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்தாகும். ஃபோலேட் சத்து வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் பெரும் பங்கை வகிக்கிறது. மேலும் ஃபோலேட் குழந்தைகளின் சில முக்கிய உறுப்புக்களின் வளர்ச்சிக்கு அவசியமானது. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தை சாப்பிட்டால், குழந்தைக்கு பிறப்பு குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வைட்டமின் சி
கிவி பழத்தில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. அதுவும் அன்றாடம் தேவைப்படும் 140% வைட்டமின் சி நிறைந்தது. கிவி பழம் சிறப்பான மூளை செயல்பாட்டிற்கு உதவும். மேலும் இப்பழம் கர்ப்பத்தால் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைக் குறைக்கும்.
நேச்சுரல் சர்க்கரை
கிவி பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை கொஞ்சம் இருப்பதால், இப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இனிப்பு உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறையும். இப்பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், கர்ப்ப கால சர்க்கரை நோயைத் தடுக்கலாம்.


செரிமானம் மேம்படும்
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது பொதுவானது தான். ஆனால் கிவி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால், இப்பிரச்சனை தடுக்கப்படும். இதற்கு அதில் உள்ள நார்ச்சத்து தான் காரணம்.
நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்
கிவி பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக உள்ளது. இது குழந்தையின் ஆர்.என். ஏ மற்றும் டி.என்.ஏ பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும். மேலும் இப்பழம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும்.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யும்
கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது சாதாரணம் தான். அதுவும் ஒரு கட்டத்தில் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடும், திடீரென்று கோபப்படக்கூடும், இன்னும் சில நேரங்களில் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கக்கூடும். கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் மன வருத்தம், மிகுந்த சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றில் இருப்பது நல்லதல்ல. ஆனால் கிவி பழத்தை சாப்பிடுவதன் மூலம் இப்பிரச்சனைகள் தடுக்கப்படும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்?
ஆரோக்கியமாக மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்கு, கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு நாளைக்கு 2-3 கிவி பழத்தை சாப்பிடலாம். ஒருவேளை உங்களுக்கு இதை சாப்பிட்டு அழற்சி, வாய்வுத் தொல்லை அல்லது இதர செரிமான பிரச்சனைகளை சந்தித்தால், கிவி பழத்தை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக