செவ்வாய், 21 நவம்பர், 2017

டீயில் இனி சர்க்கரைக்கு நோ சொல்லுங்க... வெல்லம் சேர்த்து குடிங்க... இதெல்லாம் தானா நடக்கும்..

டீயில் இனி சர்க்கரைக்கு நோ சொல்லுங்க... வெல்லம் சேர்த்து குடிங்க... இதெல்லாம் தானா நடக்கும்...

நம்முடைய முன்னோர்கள் கருப்பட்டி டீ குடித்து வந்தனர். இந்த தலைமுறை மக்கள் எல்லோருக்குமே சர்க்கரை கலந்து குடித்துத்தான் பழக்கம். டீ கசப்புச்சுவையும் உவர்ப்புச்சுவையும் கலந்து இருக்கும். இதில் சற்று இனிப்பை சேர்க்கும் போது தான் நமக்கு ருசி கிடைக்கும்.
அதனால் டீயில் சர்க்கரை வழியாகத்தான் இனிப்பை சேர்க்க வேண்டும் என்பது கிடையாது. சர்க்கரை வழியாகவும் சேர்க்கலாம். அவ்வளவு தான்.

நம்மைப் பொருத்தவரையில் இனிப்பு என்றாலே அது சர்க்கரை என்று முடிவு கட்டி பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சர்க்கரையைத் தாண்டி, பல இனிப்புச் சுவையூட்டும் பொருள்கள் உண்டு. அதில் மிக முக்கியமான ஒன்ற தான் கரும்புச்சாறில் இருந்து நேரடியாகக் காய்ச்சி எடுக்கப்பகிற வெல்லம்.

இப்போது சர்க்கரையை தவிர மற்ற வழிகளில் எப்படியெல்லாம் இனிப்பை சேர்க்கலாம் என்று பார்க்கலாம்.

வெல்லம் மிகவும் தித்திப்பாக இருக்கும்.  கேரளாவில் அச்சுவெல்லம் மற்றும் இனிப்பும் பாலும் சேர்க்காத டீ இரண்டும் கொடுப்பார்கள்.  டீ குடித்துவிட்டு வெல்லத்தை கடித்துவிட வேண்டும்.  வெல்லம் உடலுக்கு நல்லது. உடலில் சக்தியைப் பெருக்கி உடலுக்கு கெடுதல் தரும் இரத்தச் சோகையை விரட்டி அடிக்கும்.

வெல்லம் போலவே பனைவெல்லமும் உடலுக்கு மிக நல்லது.  வெல்லம் சிலருக்கு இருமலை உண்டாக்கும். ஆனால் பனைவெல்லம் எல்லுாருமே பயன்படுத்தலாம்.

மலச்சிக்கலைத் தடுக்கும்

வெல்லத்தில் உள்ள உட்பொருள்கள் குடலியக்கத்தைத் தூண்டி, மலச்சிக்கலில் இருந்து தடுக்கும். எனவே உங்களுக்கு வயிறு சரியில்லை என்றாலோ அல்லது செரிமான பிரச்சனைகள் இருந்தாலோ, டீயில் வெல்லத்தை சேர்த்து குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ரத்த சோகை

இரத்த சோகை உள்ளவர்கள் குடிக்கும் டீயில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்தால், அதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்தின் காரணமாக ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

கல்லீரல் சுத்தமாகும்

சர்க்கரையால் உடலுக்கு தீங்கு தான் விளையும். குறிப்பாக கல்லீரலைத் தான் சர்க்கரை முதலில் பாதிக்கும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கல்லீரலை சுத்தம் செய்யவும். குடிக்கும் டீயில் வெல்லத்தை சேர்த்து குடியுங்கள்.

காய்ச்சல், சளி குணமாகும்

ஒரு கப் சூடான டீயில் வெல்லத்தை சேர்த்து குடிப்பதன் மூலம் சளி, வயிற்று உப்பல், இருமல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மாதவிலக்கு

மாதவிலக்கு சுழற்சி ஆரம்பமாவதற்கு முன் பெண்களுக்கு மனநிலை சற்று இறுக்கமாக இருக்கும். இதனைத் தவிர்க்க தினமும் டீயில் வெல்லத்தை சேர்த்து குடிக்க வேண்டும். இதன் மூலம், எண்டோர்பின்கள் வெளியேற்றப்பட்டு, எப்போதும் ஒரே மாதிரியான மனநிலையில் இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக