திங்கள், 13 நவம்பர், 2017

உலகில் முதன்முதல் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தவர் யார் தெரியுமா?...



உலகில் முதன்முதல் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தவர் யார் தெரியுமா?...


*பிறந்த குழந்தை முதல் தடி ஊன்றி நடக்கும் பெருசுகள் வரையிலும் விரும்பி அணிவது ஜீன்ஸைத் தான்.*

*ஆனால் உண்மையிலேயே அது எங்கிருந்து வந்தது. அதன் வரலாறு தான் என்ன என்று தெரிந்து கொள்வது இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமானது தான்.*

*8 -ஆம் நூற்றண்டுகளில் கலிஃபோர்னியாவில் தங்கம் வெட்டி எடுக்கும் வேலை மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.*

*அந்த சமயத்தில் நியூயார்க்கில் இருந்து லெவி ஸ்ட்ராஸ் என்னும் இளைஞர் துணி வியாபாரம் செய்வதற்காக கலிஃபோர்னியா செல்கிறார்.*

*லெவிஸ்டிராஸ் கொண்டு சென்ற எல்லா துணி வகைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.*

*ஆனால் கேன்வாஸ் வகை துணி மட்டும் அப்படியே இருந்தது.*

*லெவியின் வாடிக்கையாளர்கள் அந்த சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் தான். அவர்கள் அத்தனைபேரும் லெவியிடம் புலம்பிக் கொண்டிருந்திருந்தனர்.*

*சுரங்கத்தில் கடினமான வேலைகள் செய்வதால் அடிக்கடி பேண்ட் கிழிந்து விடுவதாகக் கூறிக் கொண்டிருந்தார்கள்.*

*இவர்களுக்கு பேண்ட் கிழியக்கூடாது. நமக்கு நம்முடைய கேன்வாஸ் துணி விற்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது லெவிக்குத் தோன்றியது தான் இந்த ஐடியா.*

*அதை மனதில் வைத்துக் கொண்டு, தன்னிடம் இருந்த  கேன்வாஸ் துணியில் பேண்ட் தைத்தார். எப்போதோ அவர் வாங்கி வைத்திருந்த பித்தளை நட்டுகள் அவருடைய கண்களில் பட்டபோது அடுத்த ஐடியா கிடைத்தது.*

*சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் கடினமான சில பொருட்களை பேண்ட் பாக்கெட்டுகளில் வைக்க வேண்டியிருக்கும். அதனால் அடிக்கடி பேண்ட் பாக்கெட்டுகள் கிழிந்து போகும். அதை மனதில் வைத்துக் கொண்டு, தான் வைத்திருந்த பித்தளை நட்டுகளைப் பேண்ட் பாக்கெட்டின் ஓரங்களில் வைத்து தைத்து விற்க ஆரம்பித்தார்.*

*அந்த புதிய ரக கேன்வாஸ் பேண்ட்கள், சுரங்கத் தொழிலாளர்களை மிகவும் கவர்ந்தது. சுரங்கத் தொழிலாளர்கள் அனைவரும் அவரது வாடிக்கை யாளர்களாக மாறிவிட்டனர்.*

*அதற்கடுத்து இத்தாலியில் இருந்து ஜென்னாஸ் என்ற நீல வண்ண துணியினை வாங்கி பேண்ட் தைத்தார். நாளடைவில் அது பிரபலமாகி இன்று எல்லாராலும் விரும்பி அணியப்படுகின்ற ஜீன்ஸ் ஆனது.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக