அலுவலக வேலையினால் அதிக மன அழுத்தமா? கவலை வேண்டாம் நம் கால் விரலில் இருக்கிறது அதிசயம்..!
இன்றைய காலகட்டத்தில் காலை வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் சென்று திரும்பும் வரை அனைத்து இடங்களும் டென்சன் நிறைந்ததாகவே காணப்படுகிறது.
இவ்வாறு இருக்கையில், மன அழுத்தம், டென்சன், தலைவலி போன்றவற்றினை குறைப்பதற்கு சிறிது நேரம் நமது கவனத்தினை வேறு எங்காவது செலுத்துவோம்.
ஆனால், இதனைக் காட்டிலும் எளிமையான வைத்தியத்தை நாம் அமர்ந்த இடத்திலிருந்தே அக்குபஞ்சர் முறையில் கையாளலாம்.
நாற்காலியில் அமர்ந்து கொண்டு நம் காலின் மேற்பாதத்தில் பெருவிரலுக்கும் இரண்டாவது விரலுக்கு இடையில் உள்ள புள்ளியில் கை கட்டைவிரலினை பயன்படுத்தி அழுத்தம் கொடுக்கவேண்டும்.
ஒரு நிமிடம் வரை அதே புள்ளியில் அழுத்தத்தினை தரவேண்டும். இது மன அழுத்தம், டென்ஷன் போன்றவற்றினை குறைக்கும்.
தலைவலி ஏற்படும் போதும் இந்த புள்ளியில் அழுத்தம் கொடுத்தால் தலைவலி தீரும். இந்த புள்ளியானது கீழ்முதுகில் இணைக்கப்பட்டுள்ளதால் உடலில் ஏற்படும் வலிகள் குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக