வியாழன், 25 மே, 2017

மறைந்த நடிகை ஜெயலலிதா அவர்களின் அழகு குறிப்பு பற்றி...



"நேற்று, இன்று, நாளை" என்று தலைப்பிட்ட,
மறைந்த நடிகை ஜெயலலிதா அவர்களின் அழகு குறிப்பு பற்றிய
ஆனந்த விகடன் dt. 14.12.16 இதழ் பிரசுரித்த கட்டுரையில் ஒரு தகவல்,

"தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் அலாதியான ப்ரியம்கொண்டவர்
'நடிகை' ஜெயலலிதா. தினமும் காலையில் எழுந்ததும் சிறிது வெந்நீரில் எலுமிச்சம் பழத்தையும் தேனையும் கலந்து குடிப்பார்"!
நன்றி: ஆனந்த விகடன்!

இனி இது பற்றிய எனது அனுபவ புரிதலை பகிர்கிறேன்!

இது ஏதோ வெறும் அழகு குறிப்பு
என சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்!

மதிப்பிற்குரிய ஜெயலலிதா அவர்கள்,
அரசியலுக்கு வந்தவுடன் இந்த இயற்கை பானம் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிட்டிருப்பார் என தெரிகிறது!

எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறேன் என்றால், தொடர்ந்திருப்பாரேயானால்,
சர்க்கரை நோய் வந்திருக்க ஒரு சதவீதம்கூட வாய்ப்பில்லை,
அப்போலோ வாசம் தேவையிருந்திருக்காது,
இன்று உயிரோடு இருந்திருப்பார்! எப்படி?

"வெந்நீர்+எலுமிச்சை+தேன்"
எனும் தெய்வீக இயற்கை பானம் வாழ்நாள் முழுவதும்,
"நாளின் முதல் திரவ உணவாக" எடுத்துக்கொள்ளும் பட்சத்தில்,
"புற்று நோய்" என்ற,
இந்த நூற்றாண்டில் மனித குலத்தை மிக பயப்படுத்தும் ஒரு வார்த்தை, அகராதியில் இருந்து நீக்கப்படும்!

ஓவராக தெரிகிறதா?
தொடர்ந்து படியுங்கள் உண்மை விளங்கும்!

ஐந்து வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டுவரும்
எனது "ஒரு நாள் பயிற்சி வகுப்பில்"  கலந்து கொண்ட அனைத்து பயனாளிகளும்(சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள்) அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து தேன்,எலுமிச்சை பானத்தை "உணவாகவும், மருந்தாகவும்"
பருகி வருவதோடு சர்க்கரை, இரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், கர்பப்பை கோளாறு, "மன அழுத்தம்", மற்றும்
அனைத்து விதமான "உடல் மற்றும் மனம்சார்ந்த" நோய்களிலிருந்து பூரணகுணம் கண்டு மருந்து மாத்திரை இல்லா பெறுவாழ்வு வாழ்கிறார்கள் என்று சொன்னால் நம்புவது சற்று கடினம்தான்!

பயிற்சி வகுப்பின் 7 வகையான இயற்கை இரகசியங்களில்,
ஒரு மந்திரம், இந்த இயற்கை உற்சாக பானம்!

அந்த அற்புத பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள FB நன்பர்கள் அனைவருக்கும் பல காரணங்களால் இயலாமலிருக்கலாம்,
ஏதோ காரணத்தால் விருப்பமில்லாமலிருக்கலாம்!
நம்பிக்கை இல்லாமலிருக்கலாம்!

அவர்களுக்கும் இது தெரிய வேண்டுமென நான் நினைப்பதால்
இதைப்பற்றி முழுமையாக, தெளிவாக பதிவிடுகிறேன்!

இது பல ஆயிரம் ஆண்டுகளாக,
உடல் செல்களின் தேவையை புரிந்து கொண்டு,
உணவை தேடிப்பிடித்து சாப்பிட்டு,
நோயில்லா வாழ்வு வாழ்ந்து,
இயற்கை மரணம் அடைந்த மூதாதயர்களின் அனுபவ கண்டுபிடிப்பு!

இதைப்பற்றிய தாயாரிப்பு முறை, அளவு, பயன்கள், இதைப்பற்றி மருத்துவர்கள் பரப்பிவிட்டுள்ள மூட நம்பிக்கைகள், தப்பபிப்ராயங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்!

தாயாரிப்பு முறை மற்றும் அளவு(ஒருவருக்கு)!

ஒரு தம்ளர் நீரை குறைந்த தீயில் வைக்கவும்,
அவரவரின் பொறுக்கும் திறனுக்கும்,
வசதிக்கும் வெப்பமடைந்தால் போதும்!

ஒரு காலி தம்ளரில்,
பெரியதாயிருந்தால் பாதி,
சிறியதானால் முழு எலுமிச்சம் பழத்தை பிழிந்துக்கொள்ளவும்!
பருகும் போது அதிக புளிப்புச் சுவையில்லாத அளவு!
அப்பொழுதுதான் கத்தியில் அறுத்த பழமாக இருக்கவேண்டும்!
(ஏற்கனவே அறுத்த பாதி பழத்தை உபயோகிக்க கூடாது,
"சவப்பெட்டியில்" வைத்த எலுமிச்சைக் கூடாது,
அது உணவாக செயல்படாது, "திருஷ்டி சுத்திப்போட,
வாகனங்களின் டயர்களுக்கு அடியில் வைக்க சிறந்தது)!

தேன், இரண்டு அல்லது இரண்டரை அல்லது மூன்று ஸ்பூன்,
வாங்கும் தேனின் தன்மைக்கேற்ப!
சுவைக்கும்போது நன்றாக இனிப்பாக,
உடலும் மனமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்க வேண்டும்!
(சுத்தமான தேன் கிடைப்பது அபூர்வம்,
தேடியலைந்து நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காதீர்கள்,
அசுத்தமான தேனையே உபயோகித்து பலனடையும்
முறைதான் இங்கு சொல்லப்படுகிறது!
அதிர்ஷ்ட வசமாக சுத்தமான தேன் கிடைக்குமானால் நன்று)!

அத்துடன் அடுப்பில் சுமாராக சூடேற்றப்பட்ட நீரை கலந்து
அருந்த வேண்டும் !

இதை பிரத்யோக முறைப்படிதான் பருக வேண்டும்!
கொஞ்சம் கொஞ்சமாக,
கவனம் செலுத்தி,
உமிழ் நீரில்  சுவைத்து,
சுவையை வாயிலேயே முழுவதும்
உறிஞ்சும் வகையில் "சப்பி  சப்பி" சாப்பிட வேண்டும்!

அலட்டல் என நினைக்க வேண்டாம்!

இதில் நிறைய விஷயம் அடங்கியுள்ளது!
அருந்தும்  முறையை ஒவ்வொரு நாளும் சரியாக செய்யமுடியாதுதான்!
அதற்கு ஒரு முறையுள்ளது,
அது "ஸ்பூனில்" சாப்பிடுவதுதான்,
எரிச்சலடையவேண்டாம், தயங்க வேண்டாம்!
இதற்கு மொத்தமே 4 அல்லது 5 நிமிடங்களே ஆகும்!
("கொஞ்சம் கொஞ்சமாகதானே சாப்பிட வேண்டும், அத்தோடு நில், நான் பார்த்துக்கொள்கிறேன்", என நம் "மேதாவித்தனத்தை" காட்டுவது பலனளிக்காது! ஸ்பூனில் மட்டுமே சாப்பிட பழகுங்கள்)

பயன்கள்!

1. உடல் கழிவுகளை வெளியேற்றும்!

2. "கழிவு தேக்கத்தின் உச்சம் தான்
புற்று நோய்" என்ற இயற்கையின் நியதிப்படி
புற்று நோய் பயமில்லா வாழ்க்கை உறுதியாகும்!

3. விஷத்தை முறிக்கும் தெய்வீக குணமுடையது எலுமிச்சை!
ஏன் எலுமிச்சை வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது?
இந்த குணத்தால்தான்!

4. காலையில் நமக்குத் தேவையான "உடனடி குளுக்கோஸ்" நேரடியாக இரத்த ஓட்டத்தில் சேர்க்கப்படுகிறது!
இந்த சேர்க்கைக்கு மனித இன்சுலின் தேவையில்லை என்பது சிறப்பு!
சர்க்கரை நோயாளிகளுக்கு "கனயத்தின் இன்சுலின் " உதவியில்லாமலே குளுக்கோஸ் கிடைப்பது என்பது இனிப்பானச் செய்திதானே?

ஏன்? எப்படி?
தேனில் உள்ள குளுக்கோஸ் முன்னமேயே,
"தேனீ " என்ற அற்புத உயிரினத்தின் இன்சுலினால் முழுமையாக செரிமானிக்கப்பட்டு, "லட்டு" ப்போல கிடைப்பது!
சர்க்கரை நோயாளிகளுக்கு தேன் ஒரு வரப்பிரசாதம்!
ஒரு உயிரினத்தின் இன்சுலினால் செரிக்கப்பட்ட தேன்,
"உமிழ் நீர்" எனும் செரிமான நீரால்,
நம் உடல் செல்கள் ஏற்றுக் கொள்ளத் தகுதியாக
மாற்றுவது மட்டுமே நம் வேலை!
அதற்காகத்தான் "ஸ்பூன்" மூலமாக,
பொறுமையாக, சிறிது சிறிதாக
சாப்பிடும் பழக்கம் பரிந்துரைக்கப்படுகிறது!

5. தோல் பராமரிப்பு, முக வசீகரம்,
கிழட்டுத்தனத்தை தாமதப்படுத்துவது!

6.  கர்பப்பை கோளாறுகள் நீங்கி பை உறுதியாகும்!
இரண்டே மாதங்களில் மாதவிடாய் பிரச்சினைகள் ஒழுங்காகும்!
"சிசேரியன்" எனும் வியாபார வலையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்!

7. அமைதியான தூக்கம்!

8.இன்னும் பிற மனித மூளைக்கு பிடிபடாத நன்மைகள்!

FAQ....!

1. வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு சாப்பிடுவதால்,
அதில் உள்ள "சிட்ரிக் ஆஸிட்" அல்சரை வரவழைக்கும்,
உள்ள அல்சரை தீவிரமாக்கும் என்பது சரியா........?

முற்றிலும் தவறு!

நாம் சாப்பிடுவது சிறிய அளவு எலுமிச்சைச் சாறு!
செயற்கையாக, இராசயனங்கள் மூலம்,
மனிதனால் தயாரிக்கப்படும் சிட்ரிக் அமிலம் வேறு!
எலுமிச்சை பழத்திலுள்ள இயற்கை தயாரிப்பான சிட்ரிக் அமிலம் வேறு!
இயற்கை பண்டங்களில் உள்ள அனைத்தும்,
அதை தேவைக்கருதி சாப்பிடும் உயிர்களுக்கு
நன்மை பயக்க மட்டுமே படைக்கப்படுகிறது!

2. எலுமிச்சை உட்கொள்வதால்
சளி, தும்மல், வீஸிங் வருமென்பது சரியா?

சரியல்ல!

"பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்"என்பது போன்றதுதான்,
இது போன்ற அறியாமை பயங்கள்!

நுரையீரல், இது நாள் வரை தேக்கிவைத்துள்ள "வெள்ளை மலம்"
எனும் "சளிக் கழிவை"வெளியேற்ற முடியாமல்,
பலமில்லாமல் தத்தளிக்கும் நேரத்தில்,
எலுமிச்சைச் சாறு, நுரையீரலுக்கு உடனடி சக்தியை கொடுத்து
சளியை வெளியேற்றும் செயல்தான்
மூக்கு ஒழுகுதல், தும்மல் மற்றும் வீஸிங் என்பது!

3. "சர்க்கரை நோயாளிகள் தேனை சாப்பிடக்கூடாது"
என மருத்துவர்கள் கூறுகிறார்கள்!
அப்படி சாப்பிட்டால் சர்க்கரை "ரீடிங்" தூக்கிடும் என்கிறார்கள்!
இது உண்மையா?

இது நவீன மருத்துவம் கட்டிவிட்ட "மூட நம்பிக்கை"!
மாறாக சர்க்கரை நோயாளிகள் என முத்திரை பெற்றவர்களுக்கு "வரப்பிரசாதம்" தேன்! எப்படி?

நாம் சாப்பிடும் உணவு செரிமாணிக்கப்பட்ட பின் கிடைக்கும் குளுக்கோஸ் அதிகப்டியான அளவு தரமற்றதாக உருவாவதால்,
இன்சுலின் மறுக்கப்பட்டு, சிறு நீரகத்தால், சிறு நீர் வழியாக  வெளியேற்றப்படுகிறது!
இதனால் உடல் செல்கள்,
தேவையான குளுக்கோஸ் சக்தி கிடைக்காமல் அவதிப் படுவதால்
எல்லா நோய்களும் ஏற்பட ஏதுவாகிறது!
இது தான் சர்க்கரை நோயாளிகளின் நிலைப்பாடு!

இப்படிப்பட்டவர்களுக்கு தேன் "ஆபத்தாண்டவன்" !
தேன் ஏற்கனவே செரிக்கப்பட்ட குளுக்ஸை அளித்து
சர்க்கரை குறைபாடு சரி செய்யப்படுகிறது!

எனவே "சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாது"
என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய
"கார்ப்பரேட் வியாபார சதி"!

மேலும் உணவுகளை, "சித்தர்கள்" அறு சுவையின் அடிப்படையில்
வகை படுத்தியிருக்கிறார்கள்!
அதில் தேன் கசப்பு உணவுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது!
"தேன் நாக்கிற்கு மட்டுமே இனிப்பு, உடலுக்கு கசப்பு"!

எனவே சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட்டு,
நாளும் விரலில் குத்தி இரத்தம் சிந்தி,
சர்க்கரை அளவு பார்த்து பார்த்து, பயந்து,
நோயை நிலைப்படுத்திக்கொள்ளும்
"ஆங்கில கோனங்கி பழக்கத்தை" விட்டொழித்து,
தேன் வாங்க கிளம்புங்கள் தேக ஆரோக்யம் காக்க!

4. தேன் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்பது சரியா?

தேன் உடலுக்கு நல்லது மட்டுமே செய்யும்!
கழிவுகளை வெளியேற்றும் வேலை செய்வதால்,
கழிவுகளின் எடை குறைவதால்,
மற்றவர்களின் பார்வைக்கு உடல் மெலிவதாக தெரியும்!
அவ்வளவே!
உடல் "ஸ்லிம்" ஆகும் நல்ல செயல்
தவறாக புரிந்துக் கொள்ளப்படுகிறது!

5. எந்த வயதினர் சாப்பிடலாம்?

வயது வரையறை இல்லை!
இன்று பிறந்த குழந்தை முதல் சாப்பிட ஆரம்பிக்கலாம்!
(இதை குடிக்கும் தாயின் பாலில்
அந்த மருத்துவ குணம் குழந்தைக்கு உட்புகும்)

குறிப்பு: எனது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட
                 சர்க்கரை நோயாளிகள் அனைவரும், "வெந்நீர்+எலுமிச்சை+தேன்"
                 மற்றும் காலையுணவாக வாழைப்பழமட்டுமே உண்டு,
                 முற்றிலும் குணம் பெற்று, மருந்து மாத்திரையில்லாமல்,
                 பயமில்லாமல் இனிப்பு சாப்பிட்டு, எந்தவித உணவு
                 கட்டுப்பாடுமில்லாமல், "ரீடிங்" பார்க்கும் இயற்கைக்கு
                 முரணான பழக்கத்தில் இருந்து விடுதலை அடைந்து, புனர் ஜன்மம்
                 பெற்று நல்வாழ்வு வாழ்கிறார்கள்! எனவே நீங்களும் சிறிதும்
                 தயக்கமில்லாமலும், பயமில்லாமலும் தேன், எலுமிச்சை சாறுணவை
                 வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டு, அனைத்து நோய்களிலிருந்து  
                 விடுதலை பெறுவதுடன் வராமலும் காத்து ஆரோக்ய சமுதாயம்
                 படைக்கலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக