வெள்ளி, 26 மே, 2017

உடலுக்கு புத்துணர்வையும் புதுப்பொலிவையும் தரும் வாழை இலை குளியல் !!



உடலுக்கு புத்துணர்வையும் புதுப்பொலிவையும் தரும் வாழை இலை குளியல் !!


உலகில் உள்ள எல்லா தாவரங்களும் கரியமிலா வாய்வை உண்டு அக்ஸிஜனை வெளிவிடுகின்றன. அதில் சுத்தமான பிராணக் காற்றும் கலந்திருக்கும். ஆனால், வாழை இலை  மட்டுமே கரியமிலா வாய்வை உண்டு சுத்தமான பிராணக்காற்றை மட்டுமே வெளிவிடுகின்றன.!
இன்றைக்கு சைனா போன்ற நாடுகளிலும் நமது பெருநகரங்களிலும் சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் வசூலித்து விட்டு காற்றை விற்கிறார்கள். ஆனால் அதுவும் தூய பிராணாக்காற்று அல்ல.! ஏனெனில் காற்றைப் பிடித்து அதில் உள்ள மாசை வடிகட்டி நமக்கு அளிக்கிறார்கள்.! இதில் உண்மையில் பிரணாக்காற்று இருப்பதில்லை. வெறும் சக்கையான காற்று மட்டுமே உள்ளது. இதனால் உடலுக்கு பெரிய நன்மை எதுவும் கிடைக்காது. ஆனால், இயற்கையான வாழை இலையில் சாப்பிடுவதாலும், வாழையில் உள்ளிருந்து வெளியேறும் காற்றை சுவாசிப்பதலேயும் நமது உடலில் 100% பிராணக்காற்று அதிகரிக்கும்.! அதனால் தான் உடல் எரிந்த நிலையில் பிரணான் அல்லாடிக் கொண்டிருப் பவர்களை  வாழையில் படுக்க வைக்கிறார்கள்.!
இது மட்டுமல்லாமல் இலையை சுட்டு புண்களில் தடவுவது, வயிற்றுப் புண்ணுக்கு காய்ந்த இலையோடு தேன் கலந்து சாப்பிடுவது போன்ற பல்வேறு பழக்கங்கங்களை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர் அதில் ஒன்றுதான் வாழை இலைக்குளியல் வாழை இலைக்குளியல் செய்வதால் போகுப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானிகள்.!
வாசியை சுத்தப்படுத்தும் இரகசியம் தெரிந்து விட்டால் உடலின் சேர்ந்து விட்ட அளவுக்கதிகமான கரியமிலா வாய்வை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றி விடலாம்.

*தேகத்துக்கு தேஜஸ்*

தேகத்தின் அழகைக் கூட்டுவதற்காகத் தினமும் விலை உயர்ந்த கிரீம்களையும் ஜெல்களையும் தவறாமல் பூசியும் பயனில்லையே என அங்கலாய்ப்பவர்கள், வாழை இலையில் சாப்பிடத் தொடங்கிவிட்டால்போதும், தேகம் பளபளப்படையும். வாழை இலையில் குளிப்பதனால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு உடல் தூய்மையடையும்.

*பித்த நோய்கள் மறைய*


உடலில் பித்தத்தின் அளவை குறைக்கவும், உயர் ரத்தஅழுத்தம், தலைவலி, வயிற்றுப் புண், தோல் நோய்களின் தீவிரம் குறையவும் வாழை இலையில் குளிக்கலாம். வாழை இலைக்குக் குளிர்ச்சியுண்டாக்கிச் செய்கை இருப்பதால், பித்தம் சார்ந்த நோய்கள் அனைத்தும் சாந்தப்படும். நோய்களைத் தவிர்க்க ஆசைப்படு பவர்களுக்கு `வாழை இலை குளியல்’ அற்புதமான தேர்வு.

*செரிமானம் அதிகரிக்க*

உண்ட உணவு செரிக்காமல் வயிற்றுக்குள் ஏற்படும் `கடமுட’ ஓசையை அடிக்கடி கேட்பவர்களும், சிறிதளவு சாப்பிட்டாலும் வயிறு உப்பிக்கொண்டு அவதிப்படுபவர்களும் வாழை இலையில் குளித்தால் நல்ல செரிமானம் உண்டாகிப் பிரச்சினைகள் மறையும். மந்தத்தைப் போக்கும் குணம், வாழை இலைக்கு உண்டு. சூடான  நேரத்தில் வாழை இலையில்  குளிக்கும்போது, அதில் உண்டாகும் அற்புதமான இயற்கை மணமே பசி உணர்வைத் தூண்டிச் செரிமானச் சக்தியை அதிகரிக்கும். உணவின் மணத்துக்கும் பசி உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

செரிமானத்துக்குத் தேவையான துணைப்பொருட்கள் அனைத்தும் வாழை இலையில் உண்டு.

நோய்களிலிருந்து விடுதலை

எந்தெந்த உணவுப் பொருட்களில் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் கொட்டிக் கிடக்கிறது எனத் தேடுவதற்குப் பதிலாக, விரும்பும் உணவு வகைகளை வாழை இலையில் குளித்தால், தேவைக்கு அதிகமாகவே ஆன்ட்டிஆக்ஸிடண்ட் கிடைக்கும். உடல் செல்களின் அழிவைத் தடுக்கக்கூடியதும், நோய்கள் வராமல் பாதுகாக்கக்கூடியதுமான சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடண்டான பாலி ஃபீனால்கள் (Epigallocatechin gallate) வாழை இலையில் பொதிந்திருக்கின்றன. அதிலுள்ள Polypheno> oxidase, நடுக்குவாத நோய் (பார்கின்சன் நோய்) வராமல் தடுக்கிறது.

உணவுப் பொருட்களின் சுவை தெரியாமல் திண்டாடும் `சுவையின்மை’ நோயாளிகளும் உடல் பலவீனமானவர்களும் வாழை இலையில் குளித்தால், அறுசுவையையும் உணர்ந்து உடல் பலமடையும், விந்தணுக்களும் பெருகும்.

வாழை இலை ஒரு நல்ல கிருமி நாசினியாகும்..அதனால் வாழை இலையில் நாம் குளிப்பதால் பல நன்மைகள் உண்டாகின்றன..
இந்த வாழை இலை இயற்கை மருத்துவத்தில் நமது உடலில் உள்ள அனைத்து நச்சுத் தன்மையையும்  {TOXINS} நீக்க பயன்படுத்துவார்கள்..இந்த முறையை நாம் வீட்டிலயே செய்யமுடியும்..காலை நேரத்தில் சுமாராக 8 To 9 மணி சமயத்தில் நமது வீட்டு மாடியில் சூரிய ஒளி நம் உடல் முழுதும் படும்படியான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்..மேலும் இரண்டு நீளமான வாழை இலைகளை  எடுத்துக் கொண்டு, ஒரு இலையை தரையில் வைத்து அதன் மேல் நாம் படுக்க வேண்டும்..நம் உடல் முழுதும் வாழை இலையில் படும்படி இலை நீளமானதாக இருக்க வேண்டும்..மேலும் உள்ளாடை தவிர நாம் வேறு எந்த உடையும் இல்லாமல் படுக்க வேண்டும்..மற்றொரு இலையை நம் உடலின் மேல் பாகத்தில் நம் உடல் முழுதும் படும்படி வைத்து மூடிவிட வேண்டும்..வெளிக் காற்று புகாத படி கால், இடுப்பு, நெஞ்சுப் பகுதிகளில் ஒரு கயிறு மூலம் மெலிதான முடிச்சுமூலம் கட்டிவிட வேண்டும்..மொத்தத்தில் இரண்டு பெரிய வாழை இலைகளைக் கொண்டு நம் உடல் முழுவதையும் "complete pack" செய்கிறோம் அவ்வளவுதான்..
இந்த முறையில் என்ன நடக்கிறது தெரியுமா? ஒரு 5 to 10 நிமிடங்கள் போனபின் நம் உடல் முழுவதும் வியர்வை அருவி போல் கொட்டும்..நம் உடல் முழுவதும் சூடாகி உடனடியாக வெளியே வர வேண்டும் போல் இருக்கும்..ஆனால் 15 to 20 நிமிடங்கள் இருந்தால் நம் உடலில் உள்ள அணைத்து நச்சுத் தன்மைகளும் வியர்வை மூலம் வெளியேறி விடும்..தோல் நோய் உள்ளவர்கள், மூட்டு வலிகள் உள்ளவர்களுக்கு நல்ல பயன் தரும்...நம்  உடலின் இரத்தம் சுத்தமாகும்..ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் நோய் எதுவும் வராமல் இருப்பதற்கும் இந்த முறை உதவும்..பல வருடங்களாக உடலில் பல நச்சுத் தன்மைகள் தேங்குவதே கேன்சர் நோய் உட்பட பல நோய்களுக்கும் காரணம் என்பதால் இந்த முறை அனைவருக்கும் பயன்படும்..மற்ற மருத்துவ முறைகளுடன் இந்த முறையையும் பயன்படுத்தினால் நோய் விரைவில் குணப்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும்.

வாழை இலைக்குளியல்
செய்முறை

1. இயற்கை வழியில் விளைவித்த வாழை இலைகளை ஆளுக்கு தகுந்தாற்போலும் உருவத்திற்கு தகுந்தாற் போலும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுமாராக ஒருவருக்கு  எட்டு இலைகள் வரை தேவைப்படும்.!
2.தரையில்  ஆறு வாழை நார், நூல் கயிறு அல்லது தென்னங்கயிற்றை வரிசையாக போட வேண்டும்.
3.அதன் மேல் நான்கு வாழை இலைகளை நன்றாக துடைத்து இலையின் தண்டை கையால்  லேசாக சதைத்து போடவேண்டும்.!
4.ஒரு காட்டன் டவலை சிறிது நனைத்து தலையில் மப்ளர்போல் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.
5.நான்கு முதல் ஆறு டம்ளர் வரை நீரை குளியல் செய்யப் போகின்ற வருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.!
6.பிறகு மெதுவாக அவரை வாழையில் படுக்க வைத்து விட்டு அவரின் மேல் நான்கு முதல் ஆறு இலைகளை  தலை முதல் பாதம் வரை வெளியே தெரியாமல் வைத்து நன்றாக மூடிவிடவும். சுவாசம் செய்வதற்காக மூக்கின் மேல் வைக்கும் இலையை மட்டும் லேசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.!
7.அப்படியே கயிறால் கட்டி படுக்க விடவும். இருபது முதல் 30 நிமிடம் வரை இப்படி இருக்க வேண்டும். உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேல் இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன். கட்டுகளை அவிழ்த்து இலையை எடுத்துவிடவும்.
8.எழுந்தவுடன் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை உடலில் இருந்து கெட்டநீர் வெளியேறி இருக்கும்.!
9.எழுந்தவரை நன்றாக ஐந்துமுறை சுவாசம் செய்ய வைத்து
தேன்  மற்றும் சிறிது இந்துப்புக்கலந்த  இரண்டு டம்ளர் நீரை குடிக்க கொடுக்க வேண்டும்.பிறகு 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.!

நம் நல வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பது வாழை. எனவே நலவாழ்வு தரும் இதற்கு வாழை என்ற காரணப் பெயர் அமைந்தது எனலாம். இதன் இலை, பூ, காய், பழம், தண்டு, பட்டை அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது.

      இதன் சிறப்பை உணர்த்தவே அனைத்து மங்கல நிகழ்வுகளிலும் வாழை மரம் கட்டுகிறோம். வாழை இலை சிறுநீர் பெருக்கி. அத்துடன் உடலில் உள்ள கெட்ட நீர்களை அகற்றும் தன்மை கொண்டது. எனவேதான் அம்மை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை விளக்கெண்ணெய் தடவிய வாழை இலையில் படுக்க வைக்கிறோம். தற்போதைய மூலிகைக் குளியல் மருத்துவ முறையிலும் வாழை இலை பயன்படுகிறது.

        பண்டைய நாட்களில் நம் முன்னோர் வாழை இலையில் தான் உணவு அருந்துவது வழக்கம். சூடான உணவை இலையில் வைக்கும்போது இலை சற்றே வெந்து அதன் மருத்துவகுணம் உணவில் கலந்து விடும். எனவேதான் பண்டிகை விரதம் போன்ற நாட்களில் கட்டாயம் வாழை இலையில் சாப்பிடுகிறோம். அதோடு படையல் செய்த இலையை அடுத்தவர்க்குக் கொடுக்கக்கூடாது. வீட்டில் உள்ளவர்களே சாப்பிட வேண்டும் என மறைமுகக் கட்டுப்பாடுகள். எனவே சூடான உணவை இலையில் பொதித்து சாப்பிட்டு வர பல்வேறு வியாதிகள் குணமாகும்.

       சிறுகுழந்தைகளுக்கு வாழை இலையைக் குடிநீராக்கிக் கொடுக்கலாம். அத்துடன் வாழை இலை கொழுக்கட்டை, வாழை இலை வடகம் செய்து அனைவரும் சாப்பிட உணவே மருந்தாகி நலவாழ்வு கிட்டும். வாழையடி வாழையாக வளமான வாழ்வு கிட்டும்.

கழிவுகளின் நீக்கம் எப்படி நடக்கும்?
வாழை இலையில் குளிக்கும் பொழுது நம் உடலில் இருந்து பல வகையில் கழிவுகள் வெளியேறத் தொடங்கு கிறது. அவற்றை கண்டு நாம் பயப்படத் தேவையில்லை. நம் உடலில் இருந்து அழுக்குகள் வெளியேறுகிறது என நாம் மகிழ்ச்சி அடையவெ வேண்டும்.
பல வகை கழிவுகள் வெளியேற்றம்

(1) தலைவலி
(2) உடல் வலி
(3) சோர்வு
(4) தூக்கம்
(5) காய்ச்சல்
(6) தோல் வியாதிகள்
(7) வயிற்று போக்கு
(8) சளி, இருமல்
(9) நகங்களின் வழியாக
(10) உடல் துர்நாற்றம்
(11) வாய் துர்நாற்றம்
(12) வாந்தி

இவை அனைத்தும் நம் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதன் அடையாளமே தவிர பயப்படத் தேவையில்லை. நோயாளியின் மன உறுதி, தைரியம். ஒத்துழைப்பு இவையே முக்கியமாகும். இயற்கை உணவால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஒருவர் நன்றாக புரிந்து கொண்டால் அது அவர் விரைவில் குணமாக உதவும்.

கழிவுகள் நீங்கும் பொழுது செய்ய வேண்டியது
கழிவுகள் நீங்கும் பொழுது இயன்ற அளவு ஓய்வு எடுக்க வேண்டும்.

வாழைகுளியல் பலன்கள்
""''"'''"''"""""""'"'"'"
1.உடல் எடை சீராக இருக்கும்
2.உடலில் உள்ளக் கொட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும்
3.தோல் நோய்கள் குணமாகும்
4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன்  போன்ற நோய்கள் கட்டுப்படும்
5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும்
6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும்
7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும்
8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும்
9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும்
10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.!

இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்.!

குறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணிவரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்.!
கீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்.!
வாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும்.!
அதீத மன அழுத்தம், மனக்கோளாறுகள், கர்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்திற்காக பல ஆண்டுகள் மாத்திரை எடுப்பவர்கள், முற்றிய நிலையில் உள்ள இதய நோயாளிகள் வாழை இலை குளியல் எடுப்பதை தவிர்ப்பது நலம் பயக்கும். மற்றபடி 10 வயது முதல் நூறு வயதுவரை உள்ள ஆண், பெண் அனைவரும் வாழையில் குளியல் செய்து உடலில் பிராண சக்தியை அதிகரிக்கலாம்.

இக்குளியலின் நோக்கம், "உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதுதான்.

கழிவுகளால் உருவாகும் நோய்களும், அறிகுறிகளும் நம்மை பாடாய்படுத்துகின்றன. நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள், உணவு பொருட்கள், உணவு பொருட்களை விளைவிக்க பயன்படுத்தும் மருந்துகள், சூழலால் உடலில் கலக்கும் நச்சுக்கள் ஆகியவை உடலை கழிவாக்குகின்றன. இவற்றை வெளியேற்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எதிர்ப்பு சக்தியை கூட்டும் கழிவு வெளியேற்றமே நோய்களிலிருந்து விடுபட எளிய வழியே வாழை இழை
குளியல் ஆகும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக