செவ்வாய், 16 மே, 2017

இளநரை போக்கும் வழிகள்!


 இளநரை போக்கும் வழிகள்!


இன்றைய இளம் வயதினர் பலருக்கும் நரை முடி பிரச்சனை உள்ளது. இதனை போக்குவதற்கு சில எளிய வழிகள் உள்ளன.  அவற்றில் சிலவற்றை இப்போது காண்போம்.

கறிவேப்பிலை, மருதாணி மற்றும் செம்பருத்தி இம்மூன்றையும் சமமான அளவில் எடுத்து நன்கு அரைத்து எடுத்துத் கொண்டு, அதனை தலையில் தேய்த்து சிறிது நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும். பிறகு தலையை நன்றாக அலசி குளித்தால் முடியானது கருமையாக மாறும்.

கரிசிலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி மற்றும் கறிவேப்பிலை இம்மூன்றையும் கூட இளநரையை போக்கப் பயன்படுத்தலாம். இதில் கீழாநெல்லியும் சேர்த்து பயன்படுத்தலாம்.

*முடி பராமரிப்பிற்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளும் நல்ல பயன் தரும்.*

 கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

 காலையில், வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வரலாம்.

கரிசிலாங்கண்ணி மற்றும் பொன்னாங்கண்ணி கீரைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் இளம் வயதில் நரைமுடி வராமல் தடுக்கும் மற்றும் முடி கருமையாக வளரும்.

இஞ்சியை சீவி தேனுடன் கலந்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் இளநரை வராமல் தடுக்கலாம்.

*இளநரை போக்க மூலிகை எண்ணெய்*

தேங்காய் எண்ணெய் : 100 மி.லி.
சீரகம் : 1 ஸ்பூன்
சோம்பு : 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் : 3
கறிவேப்பிலை : 2 இணுக்கு
கொத்தமல்லி : சிறிதளவு
நெல்லி வற்றல் : 10 கிராம்
வெட்டிவேர் : 5 கிராம்

தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும்.*

 ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது.

 சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும்  தேய்ப்பது நல்லது.

உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு  நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.

*இயற்கை முறையில் இள நரையை எப்படி கருமையாக்குவது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.*

*தேங்காய் எண்ணெய் :*

  தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, அதனை தலை
முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இதனால் நரைமுடி மறைய
ஆரம்பிக்கும்.

 *ஹென்னா* என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

*நெல்லிக்காய்:*

  நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த
எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால்,வெள்ளை முடி மறைவதை
நீங்கள் காண முடியும்.

*கறிவேப்பிலை:*

  கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அததனை தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

*வெந்தயம்:*

 வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை
நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.


இளநரை போக்க கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம்*

என்னென்னவோ எண்ணெய் தேய்த்துப் பார்த்து விட்டேன்.

இந்த முடி கொட்டுவது மட்டும் நிற்க மாட்டேன் என்கிறதே என்று கவலைப்படுகிறவர்களை சந்தோஷப்படுத்துகிறது இந்த கரிசலாங்கண்ணி எண்ணெய்.

இரும்பு வாணலியை அடுப்பில் வையுங்கள். அது நன்றாகக் காய்ந்ததும் 1 கப் கரிசலாங்கண்ணி சாறை அதில் ஊற்றுங்கள்.

 ஈரப்பதம் போய் ஓசை அடங்கியதும் அடுப்பை அனைத்து விடுங்கள்.

 இப்போது இதனுடன் 2 கப் தேங்காய் எண்ணெய், 10 கிராம் சுருள் பட்டைபொடி, 5 கிராம் காய்ந்த ரோஜா இதழ்களை சேருங்கள்.

இந்த எண்ணெயை தினமும் தடவி வர, முடி கொட்டுவது நின்று நன்றாக வளரத் தொடங்கும்.

 பள்ளி செல்லும் குழந்தைகள் எனில், தினமும் 2 துளி எண்ணெய் தடவினாலே போதும்.

சமீபகலாமாக இளநரை மிகப் பெரும் பிரச்சனையாகி வருகிறது*.

*இதற்கு அற்புதத்தீர்வு நெல்லிக்காயில் இருக்கிறது.*

மருதாணி இலை – 1 கப்,
கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் -5,
முழு சீயக்காய் -4,
சுத்தம் செய்த புங்கங்கொட்டை -1

இவற்றை முந்தைய நாள் இரவே ஊற வையுங்கள்.

 மறுநாள் இவற்றை அரைத்து விழுதாக்குங்கள்.

 இதைத் தலைக்கு `பேக்’ ஆகப் போட்டு 10 நிமிடம் கழித்து அப்படியே அலசுங்கள்.

வாரம் ஒரு முறை இந்த குளியல் போட்டால் நரை முடி அத்தனையும் கருப்பாகிவிடும். அடுத்த இளநரையும் வராது.

* இளநரையை போக்கும் மற்றொரு அற்புத சக்தி கரிசலாங்கண்ணியில் இருக்கிறது.

 கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் தனித்தனியே உலர்த்தி பொடி பண்ணிக் கொள்ளுங்கள்,

இது இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து. அதனுடன் எலுமிச்சை சாறு – 1 டீஸ்புன், தயிர் -1 டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள்.

 இதைத் தலைக்கு `பேக்’ ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்து அலசுங்கள், வாரம் 2 முறை இந்த `பேக்’ போட்டுக் குளித்து வந்தால், இளநரை பக்கத்திலேயே வராது.
[16/05, 9:00 AM] ‪+91 97888 89525‬: *சிலருக்கு தலையில் ஆங்காங்கே வழுக்கை விழுந்து தோற்றம் பொலிவிழந்திருக்கும்.*

வழுக்கையைப் போக்கி, கேசத்தை செழிப்பாக வளரச் செய்கிற மகத்துவம் கரிசலாங்கண்ணின் தனித்துவம்!

செம்பருத்தி பூ – 1கப்,
கரிசலாங்கண்ணி இலை – 1 கப்…
இரண்டையும் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வதக்குங்கள்.

இதை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி வடிகட்டுங்கள்.

 இதனுடன் 3 கப் தேங்காய் எண்ணெய் கலந்து தண்ணீர்ப் பதம் போகும் வரை…

 அதாவது சுமார் 10 நாட்கள்… வெயிலில் வைத்து எடுங்கள்.

 இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வாருங்கள். செம்பருத்தி, வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கும். கரிசலாங்கண்ணி, வழுக்கை விழுந்த இடத்தில் முடியை வளரச் செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக