ஆரோக்கியமே அழகு...
சருமம், முடி அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அவற்றின் ஆரோக்கியத்துக்கு சிலவற்றைச் செய்தாலே அழகு தானாக வரும்.
*முகப்பொலிவுக்கு:*
*பயத்தம் பருப்பு மாவுடன் தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து முகத்தில் பூசிவர, முகம் பொலிவு பெறும்.
*பழுத்த வாழைப் பழத்தை பிசைந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சருமம் மிருதுவாகும்.
*வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், பாலைக் கொண்டு முகத்தைத் துடைத்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுவதோடு, சரும் பொலிவோடும் இருக்கும்.
*இரண்டு டீஸ்பூன் புதினா சாற்றுடன், ஒரு டீஸ்பூன் பயித்தம் மாவைக் கலந்து முகப்பருத் தழும்புகளின் மீது பூசிவர, மறையும்.
*தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், நச்சுக்கள் வெளியேறி சருமம் பொலிவு பெறும்.
*கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், அந்த இடத்தில் எலுமிச்சம்பழச் சாற்றைத் தேய்த்து, சோப்பு போட்டுக் குளித்துவந்தால், கறுப்பு நிறம் போய்விடும். தோல் வறண்டு, சுருக்கம் இருந்தால், ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊறவைத்து, சோப்பு போட்டுக் குளிக்க வேண்டும்.
அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்....
கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது.
கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும்.
இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கறை பொருட்களே போதுமானது.
*எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு* போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.👇
வழுவழுப்புக்கு கடலைமாவு பேஷியல்....
அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு.
*கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும்.*
இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும்.
அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும்.
*சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.*
ரோஸ் வாட்டர் கடலைமாவு
இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும்.
பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும். இளமையோடு காட்சி தரும்.
பிசுபிசுப்பான சருமத்திற்கு*
சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும்.
ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும்.
சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
*இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொழிவுபெறும்.*
டல் முகம் பொலிவாக*
தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு “பேக்” போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள்.
வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.
அழகாக இருக்க வேண்டுமென நீங்கள்விரும்பினால், செயற்கை அழகினை நீங்கள் பின்பற்றாமல் இயற்கை வழிமுறைகளை பின்பற்றுங்கள்.*
*இயற்கை அழகு குறிப்புகள்*
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும.
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக