வெள்ளி, 26 மே, 2017

தமிழ்நாட்டில் தோன்றிய சுயம்பு தலைவர் தொல்.திருமாவளன்!!


தமிழ்நாட்டில் தோன்றிய சுயம்பு தலைவர் தொல்.திருமாவளன்!!

நேருவின் அரச குடும்பம் காங்கிரஸ் கட்சியை உறுவாக்கி அதன் மூலம் தமிழ்நாட்டில் ஐயா காமராஜர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகி தமிழக முதலமைச்சார் ஆகியது அதிசயமல்ல!

உயர்ந்த சமூகத்தில் பிறந்த தந்தை பெரியார் அவர்கள் சமூக நீதிக்காக ஒடுக்கபட்ட மக்களின் வாழ்வு வளம்பெற தமிழ்நாட்டில் போராடியது அதிசயம் அல்ல!

பெரியாரின் உழைப்பை அருகில் நின்று சுவைத்து அதன் மூலம் திமுக என்ற கட்சியை உறுவாக்கி தமிழகத்தில் முதலமைச்சரான பேறறிஞர் அண்ணா அவர்களின் அரசியலும் அதிசயம் அல்ல!

அண்ணாவின் உழைப்பில் உறுவாண திமுக கழகத்தில் பணியாற்றி அண்ணாவுக்கு பின் திமுக கழகத்தின் தலைவர் ஆன கலைஞர் கருணாநிதி பின்னர் தமிழகத்தின் முதல்வராக ஆனுதும் அதிசயம் அல்ல!

பல ஆண்டுகாலம் திரைப்பட ஊடகங்கள் மூலம்  புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தமிழக மக்களிடத்தில் அறிமுகமாகி அண்ணாவுடன் இனைந்து திமுக கழகத்தில் பணியாற்றி பின்னர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் எம்ஜிஆர் அவர்கள் அதிமுக என்ற கட்சியை தொடங்கி தலைவராக ஆனார் பின்னர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனுதும் கூட அதிசயம் அல்ல!

அண்ணா காலம் தொட்டு திமுக வில் பணியாற்றி பின்னர் கலைஞர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு காரணமாக திமுக கழகத்தில் உள்ளவர்களை இரண்டாக பிரித்துக் கொண்டு தனிகட்சியை தொடங்கிய ஐயா வைகோ அவர்கள் மதிமுக வின் தலைவர் ஆனதும் அதிசயம் அல்ல!

சினிமா புகழ் உச்சத்தால் தமிழக மக்களிடத்தில் அறிமுகமாகிய புரட்சிதலைவி ஜெயலலிதா பின்னர் எம்ஜிஆர் அவர்களுடன் இனைந்து அதிமுக என்ற இயக்கத்தில் பணிபுரிந்து எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக என்ற இயக்கத்துக்கு தலைவர் ஆனதும் பின்னர் தமிழக முதல்வர் ஆனதும்கூட அதிசயம் அல்ல!

திமுக கழகத்தில் இளம் வயது முதல் பணியாற்றி தலைவர் கலைஞர் அவர்களுக்கு அரசியலில் பக்க துனையாக நின்று........ தற்போது கலைஞரின் உடல் நிலை மற்றும் வயது ஓய்வெடுக்கும் நிலையில் கலைஞர் கருணாநிதி திமுக வில் இருந்த இடத்தை அவரின் வாரிசாக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்று அரசியலில் இன்று எதிர்கட்சி தலைவராக இருப்பதுகூட அதிசயம் அல்ல!

மறுத்துவர் ஐயா ராம்தாஸ் அவர்களின் கடுமையாண உழைப்பால் உறுவாக்கப்பட்ட வன்னியர் சங்கம் பின்னர் நாளடைவில் மறுபரிமாணம் பெற்று பாமக என்ற இயக்கத்தை உறுவாக்கினார். அதன் மூலம் அப்பாவின் ஆசீர்வாதத்தோடு அரசியலுக்கு வந்து இன்று தமிழக முதலமைச்சர் வேட்பாளராக பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடகூடிய தகுதியை பெற்ற சின்ன ஐயா மறுத்துவர் அன்புமனி ராமதாஸ் அவர்களின் அரசியல் வாழ்க்கையும் அதிசயமல்ல!

திரைப்படங்களில் நூறுபடங்களை தாண்டி நடித்துவிட்டு அதன்மூலம் தமிழகத்தில் தணக்கென்று ரசிகர் பட்டாலத்தை உறுவாக்கி பின்னர் அரசியலுக்கு வந்து தேமுதிக என்ற இயக்கத்தின் தலைவராக ஆன கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறு தேர்தலிலே எதிர்கட்சி தலைவர் என்ற உச்சத்தை தொட்டதுகூட அதிசயம் அல்ல!

இன்று அரசியலுக்கு வர துடிக்கும் திரைபடத்தில் அதிக சம்பளம் பெறும் தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று தமிழக மக்களிடத்திலே அடிக்கடி விறுப்பாக பேசப்படும் சூபபர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சியை தொடங்கி தலைவராக ஆவதும் அதிசயம் அல்ல!

இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனையாண்டு காலத்தில் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்த ஒருவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக ஆனதையும் அதனை இச்சமூகம் அங்கிகரித்ததையும் கண்டதுண்டா....?

திருமாவளவன் ஒரு அரசியல் கட்சியை தொடங்கி அரசியலில் புறகணிக்கப்பட்ட சமூக மக்களை திரட்டி இன்று தமிழகத்தில் தவிர்க்கமுடியாத அரசியல் தலைவராக உறுபெற்று தன் சொந்தகாளில் நிற்கிறார் என்றால்...!

அவரின் பின்னனி என்ன...?
திருமாவளவன் பெறும் சமூகத்தை சேர்ந்தவரா...?
பெரும் நிலக்கிழாரா...?
அடுத்தவரின் உழைப்பில் உறுவான இயக்கத்தின் தலைவரா...?
திருமாவளவன் அரசியலுக்கு வருவதற்கு முன் தமிழக அளவில் தெரிந்த அல்லது பேசப்பட்ட சினிமா நடிகரா...?
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி என்ற இயக்கத்தை இந்த அளவுக்கு உறுவாக்கி வளம்பெற செய்தமைக்கு அவரின் வாழ்க்கை தியாகம் எந்த அளவிற்கு அர்பணித்துள்ளார்...!

தமிழகத்தில் ஆண்ட ஆளத்துடிக்கிற மிக பெரிய கட்சிகளுக்கு இனையாண தலைமை அலுவலகம்! தொலைகாட்சி ஊடகம் கட்சி பொறுப்பாளர்கள் என சம அந்தஸ்தில் உறுவாக்கி இயக்கத்தை வளம்பெற செய்துள்ளார் எமது தியாக தலைவர் எழுச்சித்தமிழர்!!

#மனசாட்சி_உள்ளவர்கள் இப்பதிவின் பின்னூட்டத்துக்கு வரட்டும்!
                                                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக