சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் ..
நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில்,
சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
*இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல
உடல் உபாதைகள் உருவாகிறது*...
இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...
*நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு
வாய்ப்பு உள்ளது*.
*நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்*.
*மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது*.
எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால்
போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.
எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை
மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு
ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.
சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.
இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக
அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,
அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*.
எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...
எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...
கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...
சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால்
சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...
சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...
*சாப்பிடும் முறை*...!
1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...
2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...
3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...
4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...
5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...
6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...
7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...
8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...
9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...
10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...
11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...
12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்
13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...
அமருங்கள் சம்மணமிட்டு
**********************************
தரையில் உட்கார்ந்து
சாப்பிடுவதால் ஏற்படும்
நன்மைகள்
நாம் கால்களை குறுக்காக மடக்கி
சம்மணம் போட்டு தரையில்
உட்காரும் போது , இயல்பாகவே
ஆசன நிலைக்கு
வந்துவிடுகிறோம்.
இதற்கு " சுகாசனா ' அல்லது " பாதி
பத்மாசனா' என்று பெயர் . இந்த
முறையில் அமைதியாக சாப்பிட
உட்காரும்போதே ஜீரணத்துக்கு
தயாராகுமாறு மூளைக்கு தகவல்
சென்றுவிடுகிறது .
சாப்பிடும் தட்டு
தரையிலிருப்பதால் நாம்
இயல்பாகவே குனிந்து , நிமிர்ந்து
சாப்பிடுகிறோம் . இதனால்
வயிற்றுத் தசைகள் சுருங்கி
விரிந்து அமிலம் சுரந்து நாம்
சாப்பிடும் உணவை ஜீரணிக்க
வைக்கிறது.
பத்மாசன நிலையில் இருக்கும்
போது வயிற்றைச் சுற்றியுள்ள
தசைகள் இறுக்கமடைவதால், அந்த
இடத்தில் ஏற்படும் வலிகள்
குறைகின்றன. மேலும் இந்த ஆசன
நிலையில் வயிறு அழுத்தப்படாமல்
இருப்பதால் ஜீரணசக்தி
அதிகரிக்கிறது.
நாம் தரையில் நேராக அமர்ந்து
சாப்பிடும்போது.
முதுகெலும்பும், தோள்களும்
சீரான நிலையில் இருக்கின்றன.
இதனால் தாறுமாறான நிலையில்
உட்காருவதால் ஏற்படும் வலிகளும் ,
அசதியும் நீங்கிவிடுகின்றன .
தரையில் அமர்வதால் முழங்கால்
மூட்டுகளும், இடுப்பு
எலும்புகளும் வலுவடைகின்றன.
அடிக்கடி உட்கார்ந்து
எழுந்திருப்பதால் இவை மிகவும்
இலகுத் தன்மை அடைந்து நோய்கள்
வராமல் தடுக்கப்படுகிறது .
தரையில் உட்கார்ந்து
எழுந்திருப்பதால் நம் உடலின்
வலிமை அதிகரித்து ஆயுளும்
கூடுவதாகவும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக