புதன், 28 டிசம்பர், 2016

2017 புத்தாண்டின் உறுதிமொழி

2017 புத்தாண்டின் உறுதிமொழி 

*தாயிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

*மனைவியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்ற

*நண்பனிடம் நிரூபியுங்கள்*- என் நட்பு கடைசி வரை உண்மையாக இருக்கும் என்று.                                         உறவுகளிடம்  நிரூபியுங்கள் - என்னால் என்றும் உறவுகள் பிரியாதென்று.                                        
                    
                       
கடவுளிடம் நிரூபியுங்கள் - உன் திருவடியே இறுதிவரை சரணாகதி என்று.                                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக