வியாழன், 15 டிசம்பர், 2016

மார்கழியின் சிறப்புகள்...

மார்கழியின் சிறப்புகள்...

மாதங்களில் மிகவும் உயர்ந்தது
மார்கழி என்பார்கள். அதனால்தான்,
‘மாதங்களில் நான் மார்கழியாக
இருக்கிறேன்!’ என்று
ஸ்ரீகிருஷ்ணனே
கூறியிருக்கிறார். மேலும் அவரே,
கீதையில் "மார்கழி மாதத்தை
தேவர்களின் மாதம்" என்று
சொல்கிறார்.
அத்தனை சிறப்புகள் வாய்ந்தது இந்த
மார்கழி மாதம். அதிகாலை எழுந்து
கோலம் இட்டு அதில் சாணத்தால்
பிள்ளையார் பிடித்து வைத்து
கோலத்தை பூக்களால் அலங்கரித்து
மார்கழியை வரவேற்கிறோம். 'பீடு'
என்றால் 'பெருமை' என்று பொருள்.
பெருமை நிறைந்த மாதம் என்பதே
மருவி 'பீடை' என்றானது.
அதுவரை இருந்த எல்லா
கஷ்டங்களும் நீங்கி வரும் தைத்
திங்களில் இருந்து புது வாழ்க்கை
அமைய வேண்டும் என
பிரார்த்திக்கப்படும் மாதமும் இது
தான்.
மார்கழி முப்பது நாட்களும் பாவை
விரதம் இருந்து தானே ஆண்டாள்
அந்த பெருமாளையே மணாளனாகக்
கொண்டாள். இதிலிருந்தே அந்த
மாதத்தின் பெருமையை உணரலாம்.

விடியற்காலையில் இருந்தே,
ஆலயங்களில் வழிபாடுகள்
தொடங்கிவிடும். அதுபோலவே பல
ஆலயங்க ளில் திருப்பள்ளி எழுச்சி
பூஜை தொடங்கி விடும்.
மார்கழி மாதத்தில் கோலத்தில் பூ
வைப்பதற்கும், சாணத்தால்
பிள்ளையார் பிடித்து
வைப்பதற்கும் முன்னோர்கள்
காரணங்கள் சொல்லிச்
சென்றுள்ளனர்.

பூ வைப்பது ஏன்?

அக்காலத்தில், திருமணத் தரகர்களோ,
மாப்பிள்ளை - பெண் தேவை
என்பதற்காக வெளியிடப்படும் கல்
யாண விளம்பரங்களோ கிடையாது.
எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை
திருமணத்துக்குத் தயாராக
இருக்கிறார்களோ, அந்த வீட்டின்
வாயிலில் மட்டும் கோலத்தின் மேல்
பூசணிப் பூ வைப்பார்கள். ஒட்டு
மொத்தமாக எல்லா வீடுகளிலும்
வைக்க மாட்டார்கள்.
மார்கழி மாத அதிகாலையில் வீதி
பஜனையில் வருபவர்களின்
பார்வையில் இந்தப் பூக்கள்
தென்படும். விவரத்தைப் புரிந்து
கொள்வார்கள். தை மாதம் பிறந்த
உடனே பேசி, கல்யாணத்தை
முடிப்பார்கள். இதன் காரணமாகவே
மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில்
இருக்கும் கோலத்தில் பூக்களை
வைத்தார்கள்.
அதுபோலவே மார்கழி மாதத்தில்
பல புராதன நிகழ்வுகளும்
நடந்துள்ளன. மகாபாரத யுத்தம்
மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக
இதிகாசம் கூறுகிறது.
திருப்பாற்கடல் கடையப்பட்டபோது,
முதலில் விஷம் எழுந்ததும், சிவன்
அதனை உண்டு உலக மக்கள்
அனைவரையும் காப்பாற்றியதும்
இதே மார்கழி மாதத்தில்தான்.
இந்திரனால் பெரு மழை வெள்ளம்
உருவாக்கப்பட்டு கோகுலத்தில்
அனைவரும் துன்பப்பட்டபோது,
கோவர்த்தனகிரி மலையை,
கிருஷ்ணர் குடையாகப் பிடித்து
மக்களை காப்பாற்றியதும் இந்த
மார்கழி மாதத்தில்தான் என்பது
வரலாறு சொல்லும செய்தி.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள்
நாள்தோறும் வைகறையில்
எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப்
பாடி, திருமாலை
திருப்பாவையால் திருவடித்
தொழுது, திருமணம் புரிந்ததும்
மார்கழி மாதம் என்னும் சிறப்பு
மிக்க மாதத்தில் தான். இவ்வாறு பல
மகத்துவத்தை தன்னுள் அடக்கி
வைத்துள்ளது மார்கழி மாதம்.

சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில்
நடைபெறும் ஆருத்ரா தரிசனமும்,
ஸ்ரீரங்கத்தில் நடைபெறும்
வைகுண்ட ஏகாதசியும் மிக
முக்கியமான விசேஷங்களுள்
ஒன்று.
ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதமாக
கருதப்படும் இந்த மார்கழி மாதத்தில்
இறைவனை எண்ணத்தால் துதித்துப்
போற்றுங்கள்..... அனைத்து
செல்வங்களையும் பெறுங்கள்.....
***********************************

மார்கழித் திங்கள் ..மதி
கொஞ்சும் நன்னாள்..
"காத்யாயனி
மஹாமாயே மஹாயோகின்ய
தீஸ்வரி
நந்தகோப சுதம் தேவி பதிம் மே
குருதே நம:'
பிருந்தாவனத்தில் கோபியரான
கன்னிப்பெண்கள்,
அதிகாலையிலேயே
யமுனையில் நீராடி என்று
தேவியைத் துதித்து,
கண்ணனையே கணவனாக
அடையவேண்டினர் என்று ஸ்ரீமத்
பாகவதம் கூறுகிறது.
ஆயர்பாடிக் கன்னியர், மார்கழி
மாத முப்பது நாள்களும் கவுரி
நோன்பு நோற்று,
காத்யாயனியை-பார்வதியை
வழிபட்டனர்.
பரமாத்மாவைக் கணவனாக
அடைய விரும்பினர்.
கார்த்தியாயினி துதியைச்
சொல்லி தேவியை வழிபட்டு
நல்ல
கணவனை அடையலாம் ..!
"வாரணம் ஆயிரம் சூழ வலம்
செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான்
என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப்
புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன்
தோழி நான்' -
ஆண்டாள் அற்புத மொழி
மார்கழி நோன்பு நோற்ற
மகிமையால் ."மதுசூதனன்
வந்து தன் கைத்தலம் பற்றி' மணம்
புரிந்துகொண்டதாக கனவு
பற்றி ஆண்டாள் பாடிய 11
பாடல்களில் திருமணச் சடங்குகள்
எல்லாவற்றையும்
பாடியிருக்கிறாள்.

பெரியாழ்வார் மணக்கோலத்தில்
தளிர்நடையுடன் கோதை உள்ளே
செல்ல, அவளது பௌதீக உடல்
அரங்கனுக்குள்
ஐக்கியமாகிறது.
ஆண்டவனையே தன் பக்தியினால்
மணந்து ஐக்கியமானதால் அவள்
ஆண்டாளாகிறாள்.
ஆண்டாள் ஆடிப்பூரத்தில்
உதித்தவள். (பார்வதி, காமாட்சி
ஆகியோரின் அவதார
நட்சத்திரமும் பூரமே). ஆண்டாள்
பூமாதேவி அம்சம்
சிறுவயதிலிருந்தே
அரங்கன்மீது பக்திகொண்டு,
அவரை மணாளனாக அடைய
விரும்பி வேண்டுதல் வைத்து,
மார்கழி மாதத்தில் ஆண்டாள்
மேற்கொண்ட விரதமே பாவை
நோன்பு.
எனவேதான் இந்த மார்கழி
நோன்பு- கோதை நோன்பு
உன்னதம் பெறுகிறது.மார்கழி
"பீடு' உடைய மாதம்-
பெருமைக்குரிய மாதம்.
சிறப்பான மார்கழி
மாதம்  புண்ணியம் தரும் ஆன்மிக
மாதம்.
மாஸானாம் மார்க்கசீர்ஷோஹம்'
என்பது கண்ணன் வாக்கு.
நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த
வைகாசியையோ, ராமர்
அவதரித்த சித்திரையையோ,
திருமலைவாசனுக்குகந்த
புரட்டாசியையோ, தான்
அவதரித்த ஆவணியையோ
கண்ணன் குறிப்பிடவில்லை.
எல்லாக் காலங்களாகவும்
விளங்குகின்ற ஸ்ரீகிருஷ்ண
பகவான் மாதங்களில் நான்
மார்கழியாக இருக்கிறேன்
என்று பகவத்கீதையில்
அருளினார்.
காலம் ஒரு கடவுள். காலமாக
இருப்பவனும் கடவுள்.
இவரிவர்களுக்கு இன்னது,
இப்போது நடக்கும் என்று
காலங்களை நிர்ணயித்து
விதிப்பவனும் கடவுள்.
திருவாய் மொழி, மார்கழியின்
சிறப்புகளை உயர்த்திப்
பேசுகின்ற திருவாசகமாக
அமைந்தது
சுறுசுறுப்பும், உள்ளத்
தெளிவும் நிறைந்த வைகறைக்
காலை வழிபாடு சிறந்தது.
வைகறைப் பொழுதான மார்கழி,
தேவர்களை வழிபடுவதற்கு
மிகப்பொருத்தமான மாதம்
என்பது சிறப்பு.
தட்சிணாயனத்தின் கடைசி மாதம்
மார்கழி.
உத்தராயனத் தொடக்கப் புனித
நாள் டிசம்பர் 21.
இத்திருநாள் மார்கழியின்
ஒருநாள்.
மார்க்க சீர்ஷம் மார்கழி என்று
மாறியது.
மார்க்க சீர்ஷம் என்றால் தலையாய
மார்க்கம். தனுர் மாதம்.
அதிக அளவு பிராண வாயு
கலந்த ஓசோன் மார்கழி மாதம்
முழுவதும் பிரம்ம முகூர்த்த
நேரத்தில் தரையில்
படியும். அப்போது அதிகாலை
நீராடினால்- நீரிலும் ஓசோன்
கலந்திருப்பதால் உடலுக்கு
நல்லது. திறந்தவெளியில்
நடமாடுவதால் காற்றில் உள்ள
ஓசோன் உடலில் படியும்.
இதனால்தான் முன்னோர்கள்
மார்கழி நீராடல், அதிகாலை
பஜனை செய்தல், பெண்கள்
வீதியில் கோலமிடல் என
ஏற்படுத்தி சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை ஆலயம் செல்ல
வேண்டும் என வகுத்துள்ளனர்.

ஒருபிடி சாணத்தில்
பிள்ளையாரைப் பிடித்து
பூக்கின்றபோதே காய்க்கின்ற
பூசணிப்பூவை,
வழிபடுகின்றபோதே
அருளுகின்ற பிள்ளையாரின்
திருமுடிமேல் சூட்டுகிறோம்
..!
பிள்ளையார் அனைவருக்கும்
அருள்வதற்கு
பிரசன்னமாகிறார்.
கோலத்தின் வெண்மை-பிரம்மன்;
சாணத்தின் பசுமை-விஷ்ணு;
செம்மண்ணின் செம்மை-சிவன்.
முற்றத்திலுள்ள வண்ணங்கள்
மூன்றும்
மும்மூர்த்திகளை
நினைவுபடுத்துகின்றன.
எங்கும் பக்தி; எதிலும்
தெய்வீகம். அனைத்தும்
மார்கழியின் சிறப்புகள்.
ஆலயங்களில் திருப்பாவை,
திருவெம்பாவை தெய்வீகப்
பாடல்களின்
இன்னிசை அதிகாலை
ஒலிபரப்பப்படும்
ஆண்டாள், அருளிய
திருப்பாவை,
மாணிக்கவாசகரின் தித்திக்கும்
திருவெம்பாவை போன்ற
பாவை நூல்களை மார்கழியில்
தினமும் பாராயணம் செய்யத்
தொடங்குவார்கள்..!
திருப்பதியில் மார்கழி மாதம்
முழுவதும்
தமிழ் வேதமான திருப்பாவை
ஒலிக்கும் ..!
ஆவுடையார் கோவில், மதுரை,
சிதம்பரம், திருநெல்வேலி,
குற்றாலம் முதலிய
சிவத்தலங்களில்
மாணிக்கவாசகர்-
திருவெம்பாவை உற்சவம்,
மார்கழியில் சிறப்பாக பத்து
நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
மாணிக்கவாசகருக்கு சிறப்பு
அர்ச்சனை, ஆராதனை,
அபிஷேகங்களுடன் பவனி
ஊர்வலமும் உண்டு. பத்தாம் நாள்
நடைபெறுவதே திருவாதிரை.
ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த
ஸ்ரீவில்லிபுத்தாரில் நீராட்டு,
தைலக்காப்பு விழா மார்கழியில்
நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக