புத்தாண்டு கொண்டாட்டத்தை சிறப்புமிக்கும் சுற்றுலா தலங்கள்
புத்தாண்டு கொண்டாட்டத்தை பெரும்பாலானோர் சிறப்புமிக்க சுற்றுலா தலங்களில் கொண்டாட எண்ணுவர். இந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்ற சிறப்பு மிக்க இடங்கள் பல உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கடற்கரை தேசம், பனிமலை சூழல், பாலைவனபரவசம் என விதவிதமான இடங்களில் புத்தாண்டு கொண்டாடி மகிழலாம். சுற்றுலா என்பதே பரவசமான அனுபவம். அதனை புத்தாண்டு சமயத்தில் மகிழ்ச்சியான சூழலோடு அனுபவிப்பது கூடுதல் பரவசம். இந்தியாவில் புத்தாண்டு அன்று காணவேண்டிய சுற்றுலா தளங்கள் சில:-
அழகிய கடற்கரை தீவு - அந்தமான்:-
இந்தியா பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்வது அந்தமான் தீவுகளில் தான். அந்தமான்தீவு பசுமையும், வெண்மணல் கடற்கரையும் இணைந்த அற்புத தேசம். புத்தாண்டு முன் இரவு கொண்டாட்டம் பெரும்பாலும் ஹேவ்லாக் தீவில் இருக்கும் வகையில் அமைந்திட வேண்டும். ஒரு வார கொண்டாட்டமாய் புத்தாண்டு கொண்டாட்டம் அந்தமான் தீவின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. கடற்கரை தண்ணீர் விளையாட்டுகளுக்கு பெயர் பெற்றது அந்தமான். எனவே பரவசமூட்டும் தண்ணீர் விளையாட்டுகளை விளையாடலாம். மவுண்ட் ஹாரிட், ரோஸ் தீவு, நார்த்போதீவு போன்றவை பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாக உள்ளது. கடற்கரை ஹோட்டல்கள் மற்றும் படகுகள் என அனைத்து பகுதிகளிலும் புத்தாண்டு பார்ட்டிகளும் வாணவேடிக்கைகளும் களைகட்டம்.
பாலைவனசூழலில் புத்தாண்டு - ஜெய்சால்மா:-
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் என்பது புகழ்பெற்ற கோட்டை நகரமாகும். யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியல் இடமாக உள்ள ஜெய்சால்மர் கோட்டையும் அதனை சுற்றியுள்ள தங்கமணல் தார்பாலைவனமும் புத்தாண்டை புதிய அனுபவத்துடன் கொண்டாட ஏற்ற இடமாகும். உலக புகழ்பெற்ற தார்பாலைவன சூழலில் அழகிய இரவு வெளிச்சத்தில் ஒட்டக சவாரி செய்வதும், பரந்து விரிந்த பால்வெளியை வான்நட்சத்திரங்களை கண்டு மகிழ்வதும் இனிமையை தரும். இரவின் இனிமையில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் பெரிய பெரிய கூடாரங்களில் வித விதமான ஆடல் பாடல்களுடன் சுற்றுலா பயணிகளை பரவசமூட்டும். மணல்வெளி சூழலில் மனதை மயக்கும் ரம்மியமான புத்தாண்டு கொண்டாட்டம்.
உயரமான மலைசிகரத்தில் புதிய அனுபவம்:-
உலகின் மூன்றாவது மிக உயரமான மணல் சிகரம் தான் கேங்டாக். சுமார் 5,410 அடி உயர மலைப்பகுதி. சிக்கிம் மாநிலத்தில் உள்ள கேங்டாக் சிகரம் பனிபடர்ந்த சூழலுடன் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம். இங்கு சூரியன் மறைவும், சூரிய உதயமும் மிக தெள்ள தெளிவாய் அற்புதமாய் காட்சி தரும். மலை உச்சியில் மகிழ்ச்சியான சூழலில் வித்தியாசமான நிகழ்வுகளுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழலாம். மலையேற்ற விரும்பிகளுக்கு சிறந்த இடம் கேங்டாக். வெள்ளை மழை பொழியும் பனிமலையில் சில்லிட வைக்கும் புத்தாண்டு நிகழ்வு.
உதய்ப்பூரில் உதயமாகும் புத்தாண்டு கொண்டாட்டம்:-
ஏரிகளின் நகரம் என அழைக்கப்படும் உதய்பூர் புகழ்பெற்ற ராஜபுத்தின அரண்மனைகளை தன்னகத்தே கொண்டது. உயர்தர பொலிவுடன் உற்சாகமான சூழலை அரண்மனையின் புத்தாண்டு கொண்டாட்டம் தருகிறது. ஒளிவிளக்குகளில் மின்னும் அரண்மனை, விதவிதமான ராஜ உபசரங்கள், மனம்மயக்கும் ஆடல் பாடல், விண்ணை பிளக்கும் வான்வெடிகள், உல்லாச ஏரி சவாரி என அனைத்தம் புத்தாண்டை புதுமையாய் கொண்டாட வழிவகை செய்கின்றன.
very different article with interesting ,nice work
பதிலளிநீக்கு