சனி, 31 டிசம்பர், 2016

சசிகலா பற்றி இது வரை வெளிவராத புதுத்தகவல்கள்

சசிகலா பற்றி  இது வரை வெளிவராத புதுத்தகவல்கள்..

1. சசிகலா 1956 ஆம் ஆண்டு பிறந்தார். அவரின் ஜாதகத்தைக் கணித்தப் பிரபல சோதிடர் அம்பலத்தாடி தீட்சிதப் பெருமாள் "பிற்காலத்தில் ஆட்சிப் பீடத்தில் பெண்ணொருவரை அமர்த்தி, அவரின் மறைவுக்குப் பிறகு உலகாளும் பெருமை பெறுவார்" என்று கணித்து வைத்துள்ளார்.

2.1963 ஆம் ஆண்டு வாக்கில் பள்ளிக்கூடத்தில் சிறுமியாய் இருந்த போது களிமண்ணில் இரண்டு பொம்மைகளை சசிகலா செய்துள்ளார்.அச்சு அசலாய் ஒரு பொம்மை ஜெயலலிதா போன்றே இருந்ததென்று அண்மையில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு பொம்மை பறக்கும் தட்டின் மேல் நிற்கும் ஆண் பொம்மை. அது எம.ஜி. ஆர் பொம்மையாகும். அந்த ஆண்டில்தான் "கலையரசி" திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

3. அதே பள்ளியில் தேசிய கீதம் பாடுகின்ற போது 'ஜெயஹே' என்பதை 'ஜெயாஹே' என்றுதான் சசிகலா பாடியதாக பள்ளிக்கூடத்தின் குறிப்புகளில் இருக்கின்றது.

4.'வெண்ணிற ஆடை' திரைப்படத்திற்குப் பின்னர் ஜெயலலிதா அடுத்தப் பட வாய்ப்பினை எதிர் நோக்கி அவர் தனது வீட்டில் தங்கியிருந்த போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டிருக்கிறது. ஜெயலலிதா கதவைத் திறந்த போது வெளியே நின்றிருந்த சசிகலா தன்னை யாரென்று சொல்லிக் கொள்ளாமல் "விரைவில் உன்னை வந்து சேர்வேன்,ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடி" என்று கூறிப்போயிருக்கிறார். இதைப் பின்னாளில் ஜெயலலிதாவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரலேகாவிடம் பகிர்ந்துள்ளார்.

5.அதே காலக்கட்டத்தில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்காக பொருத்தமானக் கதாநாயகியைத் தேடிக்கொண்டிருந்த இயக்குனர் பி.ஆர். பந்துலுவின் காரில் ஜெயலலிதாவின் விலாசத்தை வைத்ததும் சசிகலாதான். இதை பி.ஆர். பந்துலுவே எம.ஜி. ஆருக்கு  எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

6. 1980 ஆம் ஆண்டுவாக்கில் 'வீடியோ' கடையைத் துவங்கிய சசிகலா 'ஜெயலலிதாவின் எதிர்காலம்' என்ற  குறும்படத்தைத் தயாரித்து ஜெயலலிதாவுக்கு மட்டும் கொடுத்துள்ளார். படத்தைப் பார்த்த ஜெயலலிதா "நான் இவ்வளவு பெரிய ஆளாவேனா?" என்று வியந்திருக்கிறார். சசிகலாவைத் தன்னுடனேயே இருக்கும்படி வேண்டிக் கேட்டுள்ளார்.

7.  சசிகலாவின் தெய்வீக ஆற்றலையும், அரசியல் அறிவையும் உளவுத்துறை மூலம் அறிந்த அமெரிக்க அதிபர் ஒபாமா அவரை அமெரிக்கா வருமாறும் சர்வதேச அரசியலில் ஈடுபடுமாறும் அழைத்துள்ளார். அதனை மறுத்த சசிகலா ஜெயலலிதாவும் தமிழக மக்களின் நலனுமே முக்கியம் என்று கூறியுள்ளார்.

8. வைத்தீசுவரன் கோயில் ஓலைச்சுவடியில் பின்வரும் சுலோகம் காணப்படுகிறது.

"இருகைத் திறத்தால் இணைவுற்றாங்கு
ஒருமைத்தாய் ஆயிடுவர் ஒன்றுள வொன்றாய்
கருநா டதுவும் கண்டமன் குடியும்
தருஜெய வம்சசிகர மாகுமே"

இந்த சுலோகத்தின் கடைசி இரண்டு வரிகள் சசிகலாவே எல்லாம் என்பதை தெளிவாய் எடுத்துரைக்கின்றது.

(என்ன? தலையைச் சுற்றுகிறதா? இப்படியெல்லாம் கூட தமிழகத்தில் தகவல்கள் வெளியாகலாம். நம்பிவிட நம்மை நாமே தயார்படுத்திக் கொள்வதை விட வேறு வழியில்லை. நம்ப மறுப்பவர்கள் மீது 'அப்பல்லோட்டாய' சாபம் வந்து சேரும்)

வெள்ளி, 30 டிசம்பர், 2016

புத்தாண்டு கொண்டாட்டத்தை சிறப்புமிக்கும் சுற்றுலா தலங்கள்



புத்தாண்டு கொண்டாட்டத்தை  சிறப்புமிக்கும்  சுற்றுலா தலங்கள்
புத்தாண்டு கொண்டாட்டத்தை பெரும்பாலானோர் சிறப்புமிக்க சுற்றுலா தலங்களில் கொண்டாட எண்ணுவர். இந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்ற சிறப்பு மிக்க இடங்கள் பல உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கடற்கரை தேசம், பனிமலை சூழல், பாலைவனபரவசம் என விதவிதமான இடங்களில் புத்தாண்டு கொண்டாடி மகிழலாம். சுற்றுலா என்பதே பரவசமான அனுபவம். அதனை புத்தாண்டு சமயத்தில் மகிழ்ச்சியான சூழலோடு அனுபவிப்பது கூடுதல் பரவசம். இந்தியாவில் புத்தாண்டு அன்று காணவேண்டிய சுற்றுலா தளங்கள் சில:-

அழகிய கடற்கரை தீவு - அந்தமான்:-


இந்தியா பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்வது அந்தமான் தீவுகளில் தான். அந்தமான்தீவு பசுமையும், வெண்மணல் கடற்கரையும் இணைந்த அற்புத தேசம். புத்தாண்டு முன் இரவு கொண்டாட்டம் பெரும்பாலும் ஹேவ்லாக் தீவில் இருக்கும் வகையில் அமைந்திட வேண்டும். ஒரு வார கொண்டாட்டமாய் புத்தாண்டு கொண்டாட்டம் அந்தமான் தீவின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. கடற்கரை தண்ணீர் விளையாட்டுகளுக்கு பெயர் பெற்றது அந்தமான். எனவே பரவசமூட்டும் தண்ணீர் விளையாட்டுகளை விளையாடலாம். மவுண்ட் ஹாரிட், ரோஸ் தீவு, நார்த்போதீவு போன்றவை பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாக உள்ளது. கடற்கரை ஹோட்டல்கள் மற்றும் படகுகள் என அனைத்து பகுதிகளிலும் புத்தாண்டு பார்ட்டிகளும் வாணவேடிக்கைகளும் களைகட்டம்.

பாலைவனசூழலில் புத்தாண்டு - ஜெய்சால்மா:-

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் என்பது புகழ்பெற்ற கோட்டை நகரமாகும். யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியல் இடமாக உள்ள ஜெய்சால்மர் கோட்டையும் அதனை சுற்றியுள்ள தங்கமணல் தார்பாலைவனமும் புத்தாண்டை புதிய அனுபவத்துடன் கொண்டாட ஏற்ற இடமாகும். உலக புகழ்பெற்ற தார்பாலைவன சூழலில் அழகிய இரவு வெளிச்சத்தில் ஒட்டக சவாரி செய்வதும், பரந்து விரிந்த பால்வெளியை வான்நட்சத்திரங்களை கண்டு மகிழ்வதும் இனிமையை தரும். இரவின் இனிமையில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் பெரிய பெரிய கூடாரங்களில் வித விதமான ஆடல் பாடல்களுடன் சுற்றுலா பயணிகளை பரவசமூட்டும். மணல்வெளி சூழலில் மனதை மயக்கும் ரம்மியமான புத்தாண்டு கொண்டாட்டம்.

உயரமான மலைசிகரத்தில் புதிய அனுபவம்:-

உலகின் மூன்றாவது மிக உயரமான மணல் சிகரம் தான் கேங்டாக். சுமார் 5,410 அடி உயர மலைப்பகுதி. சிக்கிம் மாநிலத்தில் உள்ள கேங்டாக் சிகரம் பனிபடர்ந்த சூழலுடன் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம். இங்கு சூரியன் மறைவும், சூரிய உதயமும் மிக தெள்ள தெளிவாய் அற்புதமாய் காட்சி தரும். மலை உச்சியில் மகிழ்ச்சியான சூழலில் வித்தியாசமான நிகழ்வுகளுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழலாம். மலையேற்ற விரும்பிகளுக்கு சிறந்த இடம் கேங்டாக். வெள்ளை மழை பொழியும் பனிமலையில் சில்லிட வைக்கும் புத்தாண்டு நிகழ்வு.

உதய்ப்பூரில் உதயமாகும் புத்தாண்டு கொண்டாட்டம்:-
ஏரிகளின் நகரம் என அழைக்கப்படும் உதய்பூர் புகழ்பெற்ற ராஜபுத்தின அரண்மனைகளை தன்னகத்தே கொண்டது. உயர்தர பொலிவுடன் உற்சாகமான சூழலை அரண்மனையின் புத்தாண்டு கொண்டாட்டம் தருகிறது. ஒளிவிளக்குகளில் மின்னும் அரண்மனை, விதவிதமான ராஜ உபசரங்கள், மனம்மயக்கும் ஆடல் பாடல், விண்ணை பிளக்கும் வான்வெடிகள், உல்லாச ஏரி சவாரி என அனைத்தம் புத்தாண்டை புதுமையாய் கொண்டாட வழிவகை செய்கின்றன.

ஜெ மரணத்தில் மர்மங்களும்... விடையில்லா வினாக்களும்...

ஜெ மரணத்தில் மர்மங்களும்... விடையில்லா வினாக்களும்...

கொஞ்சம் நீளமான பதிவுதான்..கண்டிப்பா படிங்க.
--------------------------------------------------------------------
அந்த 75 நாட்கள்

மலேசிய பத்திரிகை ஓன்று இரண்டு கால்களும்  அகற்ற பட்டதால் தன்னை   கருணை கொலை செய்துவிடும்படி ஜெயலலிதா கேட்டு கொண்டதாக செய்தி வெளி இட்டிருக்கிறது

நிறைய லிங்க்.. மெசேஜ் இணையதள செய்திகள் தொகுத்து  மூன்று பகுதியாக தருகிறேன்.செய்தியாகவும் கேள்விகளாகவும் புனையப்பட்டது வழக்கறிஞர் ஒருவரிடம் தடை இல்லா சான்றிதழ் பெறப்பட்டது.

1.அப்பொல்லோவுக்கு முன்

2.அப்போல்லோவில்

3.அப்போல்லோவுக்கு பின்
------------------------------------------------------------------
1.அப்பொல்லோவுக்கு  முன் ...

செப்டம்பர் 22ம் தேதி, கண்டிப்பாக சிறிய அளவிலாவது அசம்பாவிதம் நடந்திருக்கிறது.

ஜெயலலிதா பெங்களூரு சிறை வாசத்துக்கு  அப்புறம் மனதாலும் தளர்ந்து விட்டார்.அடிக்கடி
தனிமையில் இருந்ததாக சொல்கிறார்கள்

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உடன்பிறவாவும் தலைமை செயலரும் புகுந்து விளையாடி இருக்கிறார்கள்

ஒரு கட்டத்தில் மத்திய அரசாங்கத்திலிருந்து ஜெயாவை நேரடியாக தொடர்புகொண்டு தங்கள் ஆட்செபனையை சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது .ஜெயலலிதா கீழே விழுந்திருக்கிறார்.

சம்பவ இடத்திலிருந்தாக சொல்லப்படும் பெண்மணி இதுவரை கிடைக்க வில்லை.

எழும் கேள்விகள் :

1,வழக்கமாக செல்லும் ராமச்சந்திரா விடுத்து ஏன் அப்பல்லோ கொண்டுபோகப்பட்டார்?

2.அவரின் first ஹாண்ட் உடல்நிலை பதிவு என்ன?

3.freefall -தானாக விழுந்தார் என்று பதிவு செய்யப்பட்டதாக சொல்கிறார்களே ..உண்மையா?

பி கு சசியின் செப் 22 அலைபேசி பதிவுகள் ஆராயப்பட்டால் தெளிவு கிடைக்கும்.
------------------------------------------------------------------
2.அப்பொல்லோவில் ...

1.ஜெயலலிதா  என்ன மருந்துகள் சாப்பிட்டுவந்தார் என்ற கேள்விக்கு சரியான பதில் யாரும்  சொல்லவில்லை.சசிகலா சொன்ன சில மருந்துகளுக்கும்  உடல்நிலைக்கு சம்பந்தமே இலை என்று சொல்கிறார்களே உண்மையா?

2.ஜெயலலிதா தங்கிய இடம்  மட்டுமல்லாமல் அவர் இருந்த தளம் முழுவதுமே  cctv கள்  அகற்றப்பட்டதாமே ..அப்படியா?முதல்வர் இருக்கும் இடம் பாதுகாப்பு குறைவாக இருக்க
வேண்டுமா?

3.யாரையுமே...கவர்னர் உட்பட ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்க படவில்லைலயே ஏன்?

4.ஜெயலலிதாவை அப்போலோவில் பரிசோதித்த ஒரு டாக்டரிடம் "  என்னை அடிக்கிறார்கள் " என்று அவர் ஈனஸ்வரத்தில் சொன்னதாக சொல்கிறார்களே அப்படியா ?இதற்காகத்தான் கேமராக்கள் அகற்ற பட்டவனவா?

5 ஜெயலலிதாவின் மருத்துவ  சரித்திரம் படித்தது அங்கிருந்தது தொலை பேசியது இன்னபிற "மாபெரும் குற்றம்ங்களுக்காக"   22 பேரை  வேலை நீக்கம் செய்ததாக  சொல்கிறார்களே ...உணமையா?

6.ஜெயலலிதா என்ற நம்முடைய முதலமைச்சரை யார் சசிகலாவின் கஸ்டடியில் கொடுத்தது?

7.இதே சசிகலா நீதிமன்றத்தில் எனக்கும் ஜெயலலிதாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று வாக்குமூலம் கொடுத்தது பொய்யா? நோயாளிக்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்காக ஒப்புதல் கையெழுத்து  யாரிடம் வாங்க பட்டது?

8,ஜெயலலிதாவின் ரேகை அவரது ஒப்புதலுடன் வாங்க பட்டதா? அரசாங்க மருத்துவர் சம்மதத்துடன் ?

9.தமிழக கவர்னரை விட சசிகலாவின் உறவினர்கள் முக்கியமானவர்களா?அவர்களுக்காக அப்போலோவின் ஒரு தள மே ஒதுக்கப்பட்டதாக சொல்கிறார்களே அப்படியா?

10.ஜெயலலிதாவின் ஸ்கேன் ரிப்போர்ட்  கிடைக்குமா?

11.சசியும் இளவரசியும் ஜெயலலிதா இறப்பதற்கு 20 நாள் முன்னதாகவே ஜெயலலிதாவை புதைத்த இட்துக்கு சென்று லொகேஷன் பார்த்ததாக சொல்கிறார்களே .அப்படியா?
------------------------------------------------------------------
3.அப்போலோவிற்கு பின்....

1.5 மணிக்கு இறந்ததாக யார் தகவல் கொடுத்தது?பின் எதற்காக அது மறுக்கப்பட்டு மறுபடியும் அறிவிக்கப்பட்டது?

2,அவரது உடல் அடுத்த நாளே புதைக்கப்படுவதாக இருக்க ஏன் பதப்படுத்தப்பட்டது?

3.எம்பாமிங் செய்ய யார் உத்தரவிட்டது?

4.ஒருவேளை வெகு நாட்கள் முன்னதாகவே இறந்தவரை பதப்படுத்தி வைத்திருந்து பிற்பாடு அறிவித்தார்களா?

5.அவரது கால்கள் அகற்றப்பட்டதாக சொல்கிறார்களே .உண்மையா?

6.அப்போலோவின் மருத்துவ  அறிக்கை ஒன்றாவது தெளிவாக இருந்ததா?மருத்துவ அறிக்கையில்  ஏன் வார்த்தை ஜாலம்?

7.எய்ம்ஸ் மருத்தவர்கள் "ஏன் ஜெயலலிதாவை யாரும் பார்க்க விடாமல் செய்திர்கள்? யாராவது பார்த்து பேசி இருந்தால்தானே அவரும்  பேச முயற்சி செய்திருப்பார்..."  என்று கடிந்து கொண்டார்களாமே ... அப்படியா?

8.ஜெயலலிதா எப்போதாவது தன்னை பார்க்க யாரையுமே அனுமதிக்க கூடாது என்று
சொன்னாரா?

9.இல்லை என்றால் நீங்கள் அவருக்கு செய்த கொடுமைகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்க்காக  அப்படி செய்திர்களா?

10.அதற்காகத்தான் தீபாவை உள்ளெ அனுமதிக்கவில்லையா?

11.மோடியால் நான்கு வருடங்களுக்குமுன் அனுப்பப்பட்ட நர்ஸ் எங்கே?

12.ஜெயலலிதாவால் 4 ஆண்டுகளுக்கு முன்னால்  வெளியேற்பட்டவர்கள் எப்படி அவரது  உடலை சுற்றி உரிமையோடு நிற்க முடிந்தது?

13.ஒருவேளை யாரும் அவரது உடலை சரியாய் பார்த்துவிடுவதை  தடுக்க அரணாக நின்றார்களா?

14.போயஸில் ஜெயலலிதாவின் உடல் இருக்கும்போது ஏன் தீபாவை அனுமதிக்கவில்லை?ஒருவேளை பெண்ணான தீபா ஜெயலலிதாவின் உடலை குளிப்பாட்டும்போது காயங்களை நிலைமையை பார்த்துவிடுவார் என்ற பயமா?

15.ஜெயலலிதாவின் பென் டிரைவ் எங்கே?
(முற்றும்)
----------------------------------------------------------------
# இப்போ நீங்க மேல படிச்சதெல்லாம் Sakthivel Rajkumar ங்கிற நம்மள்ல ஒருத்தர் நமக்காக கஷ்டப்பட்டு சேகரிச்சவிஷயம்..முதல்ல அவருக்கு தனிப்பட்ட முறையில எனது நன்றிகள்.

ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளர்ங்கிற பிம்பத்தை தவிர்த்திட்டு,நம்மோட முன்னால் முதல்வர்ங்கிற எண்ணத்தோட மட்டும் இதைப்பாருங்க.

இந்த கேள்விகளுக்
கெல்லாம் பதில் கிடைக்குமா, கிடைக்காதாங்கிறது இரண்டாவது விஷயம்..
ஆனா நமக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கு..
நீங்களும் கேளுங்க.

இந்த தகவல்கள் உண்மையானது
அல்லது
பொய்யானது
என்பதை இந்தியா முழுவதும் இந்திய
அரசியல் சாசனம் - 1950 - இன் கோட்பாடு - 77(1) - இன்படி நிர்வாகம்
அனைத்தை தனது
ஆளுமைக்குள் வைத் திருக்கும் மாண்பமை. இந்திய குடியரசு
தலைவர். பிரணாப்
முகர்ஜி அவர்கள்
முழுமையான
விசாரணைக்கு இந்திய அரசியல் சாசனம் - 1950 - இன்
கோட்பாடு - 375 - இன்
கீழ் உத்தரவிட்டாலே
உண்மையான நிலை
வீதிக்கு வந்து விடும்.
பொறுத்திருந்து
பார்ப்போம்.
தோழமையுடன்,
சோ. சௌந்தரராசன்,
நிறுவனர்,
LAW EXPOSURE ORDINANCE
CELL. 9092815209
சென்னை - 600125.

ஜெயா டிவி புத்தாண்டு சிற(ரி)ப்பு நிகழ்ச்சிகள்

ஜெயா டிவி புத்தாண்டு சிற(ரி)ப்பு நிகழ்ச்சிகள்
************************************
காலை 6 மணிக்கு : சின்னம்மா அருளிருக்கும் வேதா இல்லத்தில் சிறப்பு வழிபாடு
7 மணிக்கு :சந்தியா அம்மாவுக்கு பிறகு அம்மாவுக்கு அன்னையாக திகழ்ந்தவர் என்பதால் தான் அவரை சின்னமா என்றழைக்கிறோம் கிசோர் கே சாமியின் சிறப்பு பேட்டி
காலை 8 மணிக்கு: தமிழ் புத்தாண்டு சிறப்பு ராசி பலன் சின்னம்மா முன்னாடி இனி  குனிந்த மேனிக்கு நடக்கலாமா இல்ல தவழ்ந்து நடக்க வேண்டுமா சின்னம்மாவின்  ஆசி பெற்ற ஜோதிடர் சிறப்பு பேட்டி மற்றும் சின்னம்மா சரித்திரம் படைப்பாரா , இல்லை தமிழகத்தின் தரித்திரமாக இருப்பாரா சின்னம்மாவின் கிரக நிலைகளை கணிக்கும் ஜோதிட நிகழ்ச்சி
காலை 9 மணிக்கு: சின்னம்மாவை புகழ்ந்து கங்கை அமரனின் இன்னிசை கச்சேரி 
காலை 10 மணிக்கு:  திராவிட கொள்கைகளின் ஆணிவேர் அம்மாவா V /S சின்னம்மாவா குண்டு கல்யாணம் தலைமையில் பட்டிமன்ற சிறப்பு நிகழ்ச்சி .
மதியம் 12 மணிக்கு : அதிமுக ஆட்சியில் 75 கோடி பணம் எப்படி ஊழல் செய்தேன் முன்னாள் தலைமை செயலர் ராம்மோகன் ராவ் சுவாரசியமான பெட்டியை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் .
மதியம் 1 மணிக்கு :சின்னம்மா எத்தனை இட்லி சாப்பிட்டார் என்று  நடிகை "சி ஆர் சரஸ்வதி"
சின்னம்மாவின் கூட இருந்த நினைவலைகளை  பகிர்ந்து கொள்கிறார் .
மதியம் 2 மணிக்கு : சிவபெருமான் என் கனவில் வந்து சின்னம்மா தான்  அடுத்த முதல்வர் என்று சொன்னார் மதுரை ஆதினத்தின் அதிரடி பேட்டி
மதியம் 3 மணிக்கு : "கபி கபி மேரே தில் மே " சின்னம்மாவுடன் வாழ்ந்த அந்த பசுமையான நாட்களை நம்முடன் பகிர்கிறார் சித்தப்பா (தூதூதூ)நடராஜன் அவர்கள் .
மாலை 5 மணிக்கு : சிறந்த அடிமைகள் யார் என்று அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் குனிந்து பின்னோக்கி நடக்கும் விளையாட்டு போட்டி .
மாலை 7 மணிக்கு : தந்தை  பெரியாருடன் சின்னம்மா இனைந்து சமூக நீதிக்காவும் ,பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டதை பெருமையுடன் நமக்கு வழங்குகிறார் "வீரமணி"
இரவு 8 மணிக்கு :சின்னம்மா முதல் முறையாக நமக்காக  தன்னுடைய காந்தர்வ குரலிலில்   நமக்கு அளிக்கும் சிறப்பு பேட்டி
இரவு 9 மணிக்கு :இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக "சின்னதாய்" சிறப்பு  திரைப்படம்
காணத்தவறாதீர்கள் .............
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

வியாழன், 29 டிசம்பர், 2016

நகைச்சுவை விருதுகள் 2016

நகைச்சுவை விருதுகள் 2016..
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'ஒருத்தனை ஏமாத்துனம்னா... மொதல்ல அவன் ஆசையை தூண்டனும்' விருது - 251₹ ஃபிரீடம் ஃபோன்
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'நல்ல வேளை நம்பளை மறந்துட்டாங்க!' விருது - 570 கோடி ரூபாய் கண்டெய்னர்
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'நன்றி கடிதம்' விருது - அம்மாவின் மரணத்துக்கு வந்து ஆறுதல் சொன்னவர்களுக்கு, சின்னம்மா எழுதியது
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர்' விருது - ராம்மோகன் ராவ்
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'திரும்ப திரும்ப பேசற நீ..... திரும்ப திரும்ப பேசற நீ.!' விருது – பொன்னையன்
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'திரைக்கதை ஆசிரியர்' விருது – அப்பல்லோ
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'திரைப்படம்' விருது - அந்த 75 நாட்கள்
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'மடத் தலைவர்' விருது - மதுரை ஆதீனம்
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'நாங்க புதுசா கத்துக்கிட்ட ஆங்கில வார்த்தை' விருது – Embalming
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'அம்பி- அந்நியன்' விருது - பிரதமர் மோடி
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'மோடி பண்றாரோ இல்லையோ... நீங்க நல்லா.... பண்றீங்க!' விருது – கெஜ்ரிவால்
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'எப்ப வருவோம், எப்படி வருவோம்ன்னு தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவோம்' விருது - ஐ.டி. DEPT
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'எப்படி இருந்த நான்..இப்படி ஆயிட்டேன்!' விருது - ஸ்ரீ தேவி ( புலி படத்துக்கு)
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'கையை நீட்டி காசு வாங்கிட்டாருன்னா, வேலையை கச்சிதமா முடிச்சி குடுத்துடுவாரு!' விருது – வைகோ
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'எத்தனை சர்குலர் கொடுத்தோம்ன்னு எங்களுக்கு தெரியாது, வாங்கனவங்களுக்கும் தெரியாது' விருது – RBI
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'இவனுக்குள்ளேயும் என்னவோ இருந்திருக்கு பாரேன்!' விருது - ஆர்.ஜே. பாலாஜி
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'அந்த காரை வச்சிருந்த சொப்பண சுந்தரியை இப்ப யாரு வச்சிருக்கா!' விருது – நயன்தாரா
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'அப்படியே நீங்க காமெடி பண்ணிட்டாலும்....' விருது – சதீஷ்
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த ' அது..ஏண்டா என்னைப் பாத்து அந்தக் கேள்வியை கேட்ட?' விருது - ரங்கராஜ் பாண்டே
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'பிம்பிலிக்கி பிலாப்பி' விருது - விஜய் மல்லையா
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'எட்டப்பர்' விருது - சேகர் ரெட்டி
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'எவ்வளவோ பண்ணிட்டோம். இதை பண்ணமாட்டோமா' விருது – குஷ்பு
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'என்னங்க சார் உங்க சட்டம்... என்னங்க சார் உங்க திட்டம்?' விருது - மோடி அரசு
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'எங்களுக்கு வேறு எங்கும் கோஷ்டிகள் இல்லை' விருது - தமிழக காங்கிரஸ்
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'மச்சி...நீ அவ சிரிச்சி பாத்ததில்லையே..!' விருது - கீர்த்தி சுரேஷ்
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'நம்பினால் நம்புங்கள்' விருது - சென்னை அமிர்தா (படிக்கும் போதே வேலை....கை நிறைய சம்பளம்.)
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த குணசித்திர நடிகர் விருது - சிநேகன் (அம்மா....என்னம்மா ஆச்சு உங்களுக்கு)
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது' விருது – தமிழிசை
• 2016 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த 'இங்கிலீஷ் பாட்டு' விருது - காஷ்மீர்...பியூட்டிபுல் காஷ்மீர்..!

ஏமாற்றாதே...ஏமாறாதே...

ஏமாற்றாதே...ஏமாறாதே...

அதிமுக பொதுசெயலாளர் பதவிக்கான தகுதி

1. 3 வகுப்பு தேர்வு
2. வீட்டில் எடுபிடி வேலை அனுபவம் 33     வருடங்கள்
3. மேடையில் பேசவே தெரியாது
4. கண்டிப்பாக மாபியா குயினாக இருக்க வேண்டும்
5. கண்டிபாக ஒரு vip யாவது உடன்இருந்து சாவடிக்க வேண்டும்
6. ஊழல் செய்வதில் குறைந்தது 20 வருட அனுபவம் வேண்டும்
7. சொந்தங்கள் கொள்ளை கூட்டமாக இருக்க வேண்டும்
8.சாதி என்ற பெயரில் ரவுடிகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்
9. பதவிக்காக கொலை ரவுடிசம் செய்ய தயங்க கூடாது
10. வருமானவரி ரெய்டு, ஊழல் குற்றச்சாட்டு, கொலை முயற்சி போன்ற பல குற்றச்சாட்டுக்காக போலிஸ், CBI, Court judgment எல்லாம் தேடி கொண்டு இருக்க வேண்டும்

இந்த எல்லாம் சசிகலா அவர்களிடம் மிகவும் சரியாக உள்ளது அதனால் நாங்கள் அவர் காலில் விழுந்து பொதுசெயலாளர் பதவி கொடுப்போம்
ஆம் நாங்கள் மானம் ரோசம் என்றால் என்ன என்று தெரியாத கூட்டம்.

அடிப்படை தகவல் ஏதும் அறியாத அதிமுக பொதுகுழு தீர்மானம்.

1.ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் கொடுக்கனும்.

2.ஜெயா மறைந்த நாளை விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும்.

3. பாரதரத்தனா விருது வழங்க வேண்டும்..

என சசிகலா தலைமையிலான அதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது...

இதில் உண்மையென்னவெனில்

1.மறைந்த ஒருவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட மாட்டாது. அதற்க்கான விதி நோபல் பரிசு கமிட்டியின் விதியில் தெளிவாக உள்ளது...

2.விவாசயிகள் தினம் ஏற்கனவே டிசம்பர் 23 அன்று மறைந்த பிரதமர் சரண்சிங் அவர்களின் நினைவாக ஏற்கனவே கொண்டாப்பட்டு வருகிறது...

3. பாரதரத்தினா விருது ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறைவாசம் அடைந்தவர்களுக்கு கொடுப்பது மரபு அல்ல. அதுவும் மறைந்த முதல்வர் மேல் 15 க்கு மேற்ப்பட்ட ஊழல் வழக்குகள் போடப்பட்டு இருந்தது என்பது அனைவரும் அறிந்த தகவல்..

இதிலிருந்து நாம் அறிய வேண்டியது
இதுப்போன்ற அடிப்படை தகவல் கூட தெரியாமல் தான் முதலைமைச்சர், 30 மேற்பட்ட அமைச்சர்கள் , 133 எம்.எல்.ஏ க்கள் , 54 எம்பிக்கள், சபாநாயகர் என வரிசைக்கட்டி நிற்ப்பது கேலிகூத்தானது..

இத்தனை முட்டாள்களை தேர்ந்தெடுத்த யார்...?

பல தமிழ்சங்கங்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடத்தியவன், குடவோலை முறையை உலகுக்கே அறிமுகப்படுத்தியவன் திருக்குறள், தொல்காப்பியம் போன்ற பல ஆயிரக்கணக்கான காப்பியங்களை உலக்கே ஈன்றவன்தான்..

இத்தனை முட்டாள்களை தேர்ந்தெடுத்தவன்...

#தமிழன் ...

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிபபதின் நன்மைகள்..

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிபபதின் நன்மைகள்..

நம்மிள் பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்....செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுவாக மற்ற பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதே சிறந்தது என பலராலும் சொல்லப்படும் நிலையில், செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் குறித்து விளக்கம் அளிக்கிறார், சித்த மருத்துவர் காசி பிச்சை.
செம்பு தாது, நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. செம்பு பாத்திரம் அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும். பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும். குறிப்பாக இரவே செம்பு பாத்திரத்தில் அல்லது ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும்போது உடலுக்கு அதிக ஆற்றல், விரைவாக கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.
'செம்பு பாத்திரத்தை விளக்கி செடிக்கு அடியிலே ஊற்று' என்பது பழமொழி. இதன் பொருள் செம்பு பாத்திரம் கழுவிய நீரை செடிக்கு ஊற்றும்போது, அந்நீரை உறிஞ்சி வளரும் செடியின் வாயிலாக கிடைக்கும் காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவையாக இருக்கும். அக்காய்கறிகளை நாம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு மிகுந்த பயன்கிடைக்கும் என்பதுதான் பொருள். செப்பு பாத்திரத்தின் அருமை தெரிந்த நம் முன்னோர்கள் சொல்லிவைத்துச் சென்ற இப்பழமொழி...விஞ்ஞானக் காலத்திலும் நிலைத்து நிற்கும் உண்மை கூற்று.
செம்பு எனப்படும் காப்பர் சத்துதான் இரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாது உப்பு. செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணிநேரங்கள் கழித்து குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செம்பு தாதுவும் நம் உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கிறது. மேலும் செம்பு தாது, நல்ல இரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால், செம்பு கலந்த நீரைக் குடிக்கும்போது இரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும். இதனால் இரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட இரத்தம் சார்ந்த உடல்நலப் பிரச்னைகளின் வரவும் தடைபடும்.

செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் இரத்தசோகை பிரச்னையின் வரவை கட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும்.
நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய எவர்சிலவர் பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள்தான் சிறந்தவை. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பியும், உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தி அதிகமாகும். குறிப்பாக முந்தையக் காலங்களில் பெண்களை திருமணம் செய்து அனுப்பும்போது, செம்பு பாத்திரங்களை சீராக கொடுத்து அனுப்புவார்கள். புதுமணத்தம்பதிகள் செம்பு பாத்திரத்தைப் பயன்படுத்தி விரைவில் குழந்தைப் பேறு, நோய் நொடியில்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.
நீரைக் குடிக்கும் முறை:
குடிநீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம். இந்த தண்ணீரிலேயே சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ் போன்ற மூலிகைகளை தினம் ஒன்றாக கலந்தும் குடிக்கலாம். உடலுக்கு கூடுதல் நன்மைக் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு:
முந்தைய காலங்களில் செம்பு கெண்டியில்தான் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பார்கள். அதனால் அந்நீரைக் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். காலப்போக்கில் அப்பழக்கம் மறைந்துபோய்விட்டதால், இன்றைய இளம் குழந்தைகளும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை அதிக அளவில் சந்திக்க நேரிடுகிறது. எனவே செம்புப் பாத்திரங்களில் நிரப்பிய நீரை, குழந்தைகளுக்கு பருகக் கொடுப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
செம்பு பாத்திரத்தை சுத்தம் செய்வது எப்படி?
செம்பு பாத்திரத்தை, பாத்திரம் துலக்கும் சோப்பு கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. வெறும் அடுப்புச் சாம்பல் மற்றும் புளியைக் கொண்டு, தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்வதே சிறந்தது. சாம்பல் கிடைக்காதவர்கள், புளியை மட்டுமே பயன்படுத்தலாம். புளியில் இருக்கும் அமிலத்தன்மை, செம்பு தாதுவுடன் வினைபுரிந்து பளபளப்பைக் கொடுக்கும். பாத்திரத்தைக் கழுவியப் பின்னர், ஒன்றிரண்டு முறை நல்ல தண்ணீரைக் கொண்டு அலசி ஊற்றியப் பின்னர், குடிதண்ணீரை ஊற்றி வைத்து குடிக்கப் பயன்படுத்தலாம்.

நமக்கு தெரிந்ததும் தெரியாததும்

நமக்கு தெரிந்ததும் தெரியாததும் 

*ஆண்கள்*  *தெரிந்து* *கொள்ள* *வேண்டியது*

1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது .

2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும்

3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது

4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது

5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது

6. ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது

7. வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது

8. தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது

9. இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது .

*பெண்கள்* *தெரிந்து* *கொள்ள* *வேண்டியது*

1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.

2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது)

3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது

4. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.

5. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.

6. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்

7. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது

8. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது,அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் ,வருமானம் )பாதிப்பு அடையும்

9. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போககூடாது

10. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது

11. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது...