வியாழன், 19 ஜூலை, 2018

சிவப்பு கொய்யாவை சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள்...

சிவப்பு கொய்யாவை சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள்...

மருத்துவ செய்திகள்:சர்வசாதரணமாக கிடைக்கும் பழங்களில் கொய்யாப் பழமும் ஒன்று. ஒவ்வொரு பழத்தின் நிறத்திற்கு ஏற்ப அவற்றின் குண நலன்கள் மாறுபடும் ஏனென்றால் பழத்தில் இருக்கக்கூடிய தாதுக்கள், சத்துக்கள்,ஃபைட்டோ கெமிக்கல்களினால் தான் பழத்தின் நிறம் வேறுபடுகிறது.
அதுவும் கொய்யா பழ வகைகளில் சிவப்பு கொய்யாவுக்கு என்று தனிச்சுவை உண்டு. அது மிகவும் சுவையானது. இந்தக் கொய்யாப் பழம் மிக எளிதாக கிடைக்கக்கூடியவை. ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உங்களுக்கு மூன்று கிராம் அளவு ஃபைபர் கிடைத்திட வாய்ப்புண்டு. ஒரு நாளைக்கு பெண்களாக இருந்தால் உங்களுக்கு 25 கிராம் ஃபைபரும், ஆண்களாக இருந்தால் 38 கிராம் ஃபைபரும் அவசியமாகும்.
குறைவான கலோரி, அதிக நார்ச்சத்து கொண்டது சிவப்பு கொய்யா பழம். இதில் கரோடினாய்டு, விட்டமின் ஏ, சி, பி3, பி9,ஃபைபர், பொட்டசியம், ஃபோலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

சிவப்பு கொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்கள் நம்முடைய செல் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி, மார்பக புற்றுநோய் போன்ற பல புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. சிவப்பு கொய்யாப்பழத்தை அதிகம் எடுத்துக்கொள்வதால் உங்களுக்கு பொட்டாசியம் சத்து அதிகரிக்கும்.
சிவப்பு கொய்யாவில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த க்ளைசமிக் இண்டெக்ஸ் ஆகியவை இருக்கிறது. எனவே இந்த சிவப்பு கொய்யாவை சாப்பிடுவதால் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தவிர்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் இந்த பழம் சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு கூடிடுமோ என்கிற அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதனால் சர்க்கரை நோயாளிகள் தயங்காமல் சிவப்பு கொய்யாவை சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக