வியாழன், 19 ஜூலை, 2018

விஷமாக மாறும் உணவு - எச்சரிக்கை ரிப்போர்ட்!

விஷமாக மாறும் உணவு - எச்சரிக்கை ரிப்போர்ட்!

என்ன சாப்பிடுகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி எப்படி சமைக்கிறோம் என்பதும் ரொம்ப முக்கியம். சில நியூட்ரியன்ட்ஸ் நீரில் கரைந்து விடும், இன்னும் சில ஹீட்-சென்ஸிடிவாக இருக்கும். சரியான முறையில் சமைக்காத போது, அந்த சத்துக்கள் நமக்குக் கிடைக்காது. சில தவறான சமையல் முறைகளால் முக்கியமான சத்துக்கள் எல்லாம் பயனற்றவையாகின்றன. நாம் விரும்பி சாப்பிடும் பல உணவுகள் தவறான முறைகளில் சமைக்கப் படுபவை. அதில் சிலவற்றைப் பார்ப்போம். 
ஸ்மோக்கி
ஸ்மோக்கி சிக்கன், ஸ்மொக்கி டிராகன் சிக்கன் என ஸ்டைலிஷாக இருக்கும் உணவுகள் எல்லாம் உடலுக்கு நல்லது என நினைத்து விடாதீர்கள். சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் இது உடலுக்கு முற்றிலும் கேடானது. புகையில் வெந்த மாமிசங்கள் கேன்சரை உண்டாக்கக் கூடியவை. புகையிலிருந்து வெளிபடும் 'பாலிசிலிக் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்' போன்ற கார்சினோஜென்கள் கேன்சரின் நண்பன். 
பார்பிக் யூ
பலருக்கும் இந்த பார்பிக்யூ சிக்கன் பிடிக்கும். ஆனால் இது உடலுக்கு எவ்வளவு தீங்கு என உங்களுக்குத் தெரியுமா? வெந்துக் கொண்டிருக்கும் சிக்கனில் இருந்து கொழுப்பு உருகி கீழே கொட்டும் போது 'பாலிசிலிக் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்'னை உள்ளடக்கிய கார்சினோஜெனிக் புகை உண்டாகிறது. அதோடு பார்பிக்யூ சாஸ்களில் சர்க்கரைகள் அதிகம் இருக்கின்றன. அதனால் அதி தீவிர பிரியர்கள் ஆசைக்கு என்றைக்காவது ஒருநாள் சாப்பிடுங்கள். 
உயர் வெ ப்பநிலை
அதிக வெப்பநிலையில் மாமிசம் (க்ரில் சிக்கன்) வேகும் போது கொழுப்பு ஆக்ஸிஜனேற்றம் அடைந்து குடல் அழற்சியை உண்டாக்கும். அதோடு இதிலிருக்கும் ப்ரோட்டின் பயனற்றுப் போகிறது. வெளிப்புற சிக்கன் ப்ரவுன் நிறத்திலும் உட்புறம் அதற்கு கம்மியாகவும் இருக்கும் படி க்ரில் செய்வது நல்லது. 
டீப் ஃ ப்ரை 
டீப் ஃப்ரையில் எண்ணெய் ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டு, ட்ரான்ஸ் ஃபேட்டை உற்பத்தி செய்யும். இந்த ட்ரான்ஸ் ஃபேட்டுகள் கெட்ட கொழுப்பான எல்.டி.எல்-லை அதிகப்படுத்தும். அதோடு உணவில் இருக்கும் ப்ரோட்டினை பயனற்றுப்போக செய்யும், சில சமயங்களில் புரோட்டின் நச்சுத் தன்மையாகவும் மாறும். அதோடு இந்த மாதிரி சமைக்கப்படும் உணவுகளில் அதிக கலோரியும் இருக்கும். 
மைக் ரோவேவ்
இதனால் சமையலறையில் அதிக அளவு மின்காந்த அலைகள் உருவாகும். தேவையான போது மட்டும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் தவிர்த்து விடுவது நல்லது. காய்கறிகளை சமைக்க அடுப்பை மட்டும் பயன்படுத்துங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக