செவ்வாய், 17 ஜூலை, 2018

நாம் உண்ணும் உணவிலேயே பெரும்பாலும் விட்டமின்கள் இருக்கின்றது.

நாம் உண்ணும் உணவிலேயே பெரும்பாலும் விட்டமின்கள் இருக்கின்றது.

உடலின் இயல்பான வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு குறைந்த அளவு தேவைப்படும் இன்றியமையாத கரிமப்பொருள் ஆகும்.
விட்டமின்கள் பெரும்பாலும் நாம் உண்ணும் உணவிலேயே இருக்கின்றது. ஆதலால்தான் நம்மை சரிவிகித உணவினை எப்போதும் எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
மனிதர்களில் விட்டமின்களின் அளவு கூடினாலும், குறைந்தாலும் நோய்கள் உருவாகின்றன. சிலநேரங்களில் உயிரிழப்பும் நிகழ்கிறது. எனவேதான் விட்டமின்கள் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டியவை.
ஒவ்வொரு விட்டமினும் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு உடல் செயல்பாட்டிற்காக நமக்கு அவசியமாகிறது.
மனித உடலானது பொதுவாக விட்டமின்களை உற்பத்தி செய்வதில்லை.
ஆனால் நம்உடலால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களில் உள்ள சத்துகளை விட்டமின்களாக மாற்ற இயலும். எடுத்துக்காட்டாக ஏ-விட்டமினை பீட்டா கரோடீனிலிருந்தும், சூரியனின் புறஊதாக்கதிர்களிடமிருந்து டி-விட்டமினையும் நம்உடலால் தயார் செய்ய இயலும். நாயானது சி-விட்டமினை தனது உடலில் இருந்து தயார் செய்து கொள்ளும்.
தற்போது வரை மொத்தம் 13 விட்டமின்கள் நமது உடலுக்கு அவசியமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அவை ஏ, பி1, பி2, பி3, பி5, பி6, பி7, பி9, பி12, சி, டி, இ, கே ஆகும்.
இந்த 13 விட்டமின்களை கொழுப்பில் கரைபவை, நீரில் கரைபவை என இருவகைகளாகப் பிரிக்கலாம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக