வியாழன், 19 ஜூலை, 2018

அரிசி மற்றும் பருப்பு வகைகளில் பூச்சி, வண்டு வராமல் தடுக்க இதை பண்ணுங்க...

அரிசி மற்றும் பருப்பு வகைகளில் பூச்சி, வண்டு வராமல் தடுக்க இதை பண்ணுங்க...

பொதுவாக நம்ம வீட்ல அரிசி பருப்பு எல்லாம் அப்படியே போட்டு வச்சி இருப்போம் .அது நாட்கள் ஆக வண்டு பூச்சிகள் வந்துவிடும். 
அதும் மழைக்காலங்களில் சொல்லவே வேணாம் அவ்வளவு கஷ்டம் பாதுகாக்குறது.... 
இப்போ எப்படி எளிமையாக பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் ..  
உளுந்தம் பருப்பு 
உளுந்து பருப்பு வாங்கியதும் அதை முறத்தில் போட்டு நன்கு புடைத்திதால் அதில் உள்ள மாவு மாதிரி பொருள் வெளியேறி விடும். பின்னர் டப்பாவில் போட்டு வைத்தால் வண்டு வராது. 
பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்து பின்னர் டப்பாவில் போட்டு வைத்தால் பூச்சி வண்டுகள் வராது.. 
துவரம் பருப்பு ,உளுந்து பருப்பில் பூச்சி மற்றும் வண்டுகள் வராமல் இருக்க சிறிது காய்ந்த வேப்பிலை மற்றும் வசம்பு துண்டு போட்டு வையுங்கள். .. .
அரிசியில் வண்டு வராமல் இருக்க காய்ந்த வற்றல் போட்டு வைத்தால் பூச்சி எதும் வராது. 
புளியில் பூச்சி வராமல் இருக்க கொட்டை மற்றும் நார்களை எடுத்து விட்டு பின்னர் கல் உப்பு சேர்த்து காயவைக்கணும். பின்னர் டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு வருடம் புளி கெட்டு போகாது. . .. 





மேலும் இது போல பயனுள்ள தகவல் பெற பாலோ பண்ணுங்க. .
மறக்காம ஷேர் பண்ணுங்க லைக் பண்ணுங்க. ... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக