வெள்ளி, 6 ஜனவரி, 2017

பீட்ரூட்டை சாப்பிட்டதும் சிறுநீர் சிவப்பாக மாறுகிறது?

பீட்ரூட்டை  சாப்பிட்டதும் சிறுநீர் சிவப்பாக மாறுகிறது?

பீட்ரூட்டை உட்கொள்வதால் சிறுநீர் சிவப்பு நிறமாக மாறலாம். எனவே அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். பீட்ரூட்டின் சிவப்பு நிறத்திற்கு காரணம் அதிலுள்ள பீடாசையனின் ஆகும்.

பீட்டாசயனைனை கல்லீரலால உடைக்க முடியாமல் போகும்போது அவை சிறு நீரில் கலந்து சிவப்பாக மாறுகிறது. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்சினோஜன்களுக்கு எதிராக செல்களை பாதுகாக்கின்றது.

பீட்ரூட் ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடெண்டாகவும், நோய் அழற்சி எதிர்ப்பு காரணியாகவும் பயன்படுகின்றது. இதிலுள்ள ஒரு வகையன நார் பொருட்கள், பெருங்குடல் புற்று நோயை தடுக்க உதவுகின்றது.

பீட்ரூடில் உள்ள பீடானைன் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. இது பீட்ரூடின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்றாகும்.

பீட்ரூடில் அதிக அளவில் இரும்பு சத்து உள்ளது. இது உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகமாக்கும். எனவே இது மாதவிடாய் கோளாறுகள் மற்றும் மாதவிடாய் அறிகுறிகளின் சிகிச்சைக்கு உதவுகிறது.

பீட்ரூட்டில் அதிக அளவில் உள்ள நைட்ரேட் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது. ரத்த அழுத்தத்தை குறைக்க தினந்தோறும் இரண்டு டம்ளார் பீட்ரூட் சாறு அருந்துவது நல்லது.

பீட்ரூட்டில் உள்ள ஆன்டி ஆண்டியாக்ஸிடண்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க்து வீக்கத்திற்கு எதிராக போராட உதவுகிறது.

பீட்ரூட் சாறு செரிமானம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவுகின்றது. மேலும் இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றது. இந்த சாதகமான செரிமானம் சார்ந்த விளைவுகள் மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகின்றது.

பீட்ரூடில் அதிக அளவில் இரும்பு சத்து உள்ளது. எனவே இது இரத்த சிவப்பணுக்கள் அதிகரித்து இரத்த சோகையை தடுக்கிறது.

பீட்ரூட்டில் நம்ப முடியாத அளவில் ஃபோலேட் உள்ளது. இது ஒரு அற்புதமான வயது அதிகரிப்பை எதிர்க்கும் காரணியாகும். எனவே இது தோல் பிரச்சினைகள் தீர்க்க உதவுகிறது.

பீட்ரூட் சாற்றில் அதிக அளவில் பீடைன் மற்றும் டிரிப்தோன் உள்ளது. இது மனதிற்கு அமைதி அளிக்கின்றது. எனவே இது மன அழுத்த சிகிச்சைக்கு உதவுகின்றது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக