வெள்ளி, 27 ஜனவரி, 2017

தூக்கத்தில் உளறுவது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

தூக்கத்தில் உளறுவது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக நம்மில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, யாரிடமோ பேசுவதை போல பேசிக் கொண்டிருப்பார்கள்.

இப்படி இரவில் தூங்கும் போது சிலர் தன்னை அறியாமல் பேசுவதை தான் நாம் தூக்கத்தில் உளறுதல் என்று கூறுகின்றோம்.

தூக்கத்தில் சிலர் உளறுவதற்கு என்ன காரணம் என்று நீங்கள் யோசித்தது உண்டா? நம் அனைவரின் உடம்பில் தூக்கத்தின் கட்டுப்பாட்டு மையமாக நமது மூளையில் இருக்கும் முகுளப் பகுதி செயல்படுகிறது.

ஆனால் நமது உடம்பில் உள்ள தாலமஸ், நடுமூளையின் வலைப்பின்னல் அமைப்பு மூளையின் தண்டுப்பகுதி ஆகிய உறுப்புகளின் ஒருங்கிணைந்த சில செயல்பாடுகளினால் தூக்கத்தின் தன்மைகள் சில சமயங்களில் மட்டும் மாறுபடுகிறது.

எனவே நாம் சில நேரங்களில் மிகவும் ஆழ்ந்து தூங்கும் போது, அந்த ஆழ்ந்த தூக்கத்தின் இறுதிக்கட்டத்தில், உணர்வு நரம்புகளின் தூண்டுதல்கள் மூலம் நாம் நம்மை அறியாமலே தானாகப் பேசுவதும், புலம்புவதும் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக