வியாழன், 5 ஜனவரி, 2017

சகோதரி தீபா பற்றிய சில தகவல்கள்

சகோதரி தீபா பற்றிய சில தகவல்கள்

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தவர். 1998-இல் நிலா டிவி(?)யில் பயிற்சி பத்திரிக்கையாளராக சேர்ந்தார். பின்பு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. இதழியல் முடித்து, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்.
பின்பு லண்டனில் இரண்டு ஆண்டுகள் ஜர்னலிசம் படிப்பு முடித்து, IANS என்ற சர்வதேச செய்தி நிறுவனத்தில் பத்திரிக்கையாளராக பணியாற்றினார். தற்போது War Crimes And Humanity Crimes பிரிவில் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் சரளமாக பேசுபவர், எழுதுபவர்.
நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். ‘இளவேனில் பூக்கள்’ என்ற ஒரு கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
அதில் முதல் கவிதையே தனது அத்தை ஜெயலலிதாவை பற்றியது தான்..
சின்னச் சின்ன ஞாபகங்கள்
சின்னவள் என் சிந்தையிலே!
அத்தை என்று உன்னை அழைக்க
அமுதூறுது என் நாவிலே!
அன்புக்கரம் நீ பிடித்து
கொஞ்சிக் கொஞ்சிப் பேசையிலே!
வண்ண வண்ணப் பூங்காவில்
அத்தை மடி மெத்தையிலே!
சின்னவள் நான் குறும்புசெய்ய
புன்னகைத்தாயே மலர் போலே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக