வெள்ளி, 6 ஜனவரி, 2017

நம்ம பிரதமர் மோடி பதவி ஏற்ற பின்..

நம்ம பிரதமர் மோடி பதவி ஏற்ற பின்..

முதல் பயணமாக 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் *பூடான்* சென்றார். அந்நாட்டுக்கு *ரூ.4500* கோடி கடனுதவி அறிவித்தார்.
2014 ஆண்டு ஆகஸ்ட் மாதம் *நேபாளம்* சென்றார்.. அந்நாட்டுக்கு *ரூ.6000* கோடி கடனுதவி செய்தார்..
அதே ஆண்டு நவம்பர் மாதம் *பிஜி* சென்றார்.. அந்நாட்டுக்கு *ரூ.495* கோடி கடனுதவி செய்தார்.
2015 ஆண்டு மார்ச் மாதம் *செஷல்ஸ்* சென்றார்.. *ரூ.450* கோடி கடனுதவி செய்தார்.. *மொரிசியஸ்* சென்றார் அந்நாட்டுக்கு *ரூ.3000* கோடி கடனுதவி செய்தார்..
2015 ஆண்டு மே மாதம் *மங்கோலியா* சென்றார்.. *ரூ.6300* கோடி கடனுதவி அறிவித்தார்..
2015 அக்டோபர் மாதம் *இந்திய-ஆப்பிரிக்க* நாடுகளின் உச்சி மாநாடில் ஆப்பிரிக்க நாடுகளின் கட்டமைப்புக்கு          *ரூ.65000* கோடி கடனுதவி அறிவித்தார்..
இந்த ஆண்டு 2016 மே மாதம் *ஈரான்* சென்றார்.. சபஹர் துறைமுகத்தில் முனையங்கள் மற்றும் சரக்கு கப்பல் நிறுத்துமிடங்கள் கட்டுவதற்காக, இந்தியா *ரூ.1,300* கோடி நிதியுதவி வழங்கும். இரண்டாவது கட்டமாக, *சபஹர் மற்றும் ஜஹிதன் இடையே 500 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைப்பதற்காக சுமார் *ரூ 2,000 கோடி* வழங்கும் என்று அறிவித்தார்.
2௦16 ஜூன் மாதம் *பங்களாதேஷ்* சென்றார்.. இதுவரை எந்த நாட்டுக்கும் கொடுக்காத அளவிற்கு *ரூ.13441* கோடி கடன் கொடுத்தார்..
2௦16 ஜூலை மாதம் *கென்யா*சென்றார்.. *ரூ.101 கோடி* கடனுதவி செய்தார். அங்கிருந்து *தான்சானியா* சென்றார்.. *617 கோடி* கடனுதவி செய்தார்..
2௦16செப்டம்பர் மாதம் *வியட்னாம்* சென்றார்.. அந்நாட்டுக்கு *3340 கோடி*கடன் கொடுத்தார்..
இது போக *இலங்கை* குடிநீர் திட்டத்திற்கு இந்தியா *ரூ.2675 கோடி*கடனுதவி செய்தது.. இலங்கைக்கு டீசலில் இயங்கும் ரயில்கள் தயாரிக்க இந்த மாதம் பல கோடி ரூபாய் கடனுதவி செய்துள்ளது.. இதெல்லாம் யார் பணம் மோடி அப்பன் வீட்டு பணமா? நாடு இருக்கிற நிலையில் போகிற நாடுகளுக்கெல்லாம் சொந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கோடி கோடியாக கடன் கொடுத்தாகிவிட்டது.. தற்பொழுது இருந்த சேமிப்பையும் வலுக்கட்டாயமாக பிடுங்கி வங்கியில் போட வைத்தாகிவிட்டது. அதையும் எடுத்து எந்த எந்த நாட்டுக்கு கடன் கொடுக்க போகிறாரோ தெரியவில்லை.. இதை எல்லாம் கேள்வி கேட்டால் மோடி பக்தர்கள் தேச துரோகி பட்டம் வேறு தருகிறார்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக