விதைகளில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள் பற்றி அறிவோம்..
ஒருசில வகை காய்கறிகள் மற்றும் பழங்களின் விதைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் விதைகளை உள்ளடக்கிய பழங்கள், காய்கறிகள் சிலவற்றை பார்ப்போம்.
தர்ப்பூசணி விதைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவும். இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
பப்பாளி விதைகள் கசப்பு தன்மை கொண்டவை. அதேவேளையில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை கொண்டவை. செரிமானம் சீராக நடைபெறவும் உதவும். அதில் உள்ளடங்கியிருக்கும் கசப்பு தன்மையை நீக்க தேன் கலந்து கசாயமாக தயாரித்து பருகலாம். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக்கூடாது.
சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பூசணி விதைகளின் பங்களிப்பு அவசியமானது. புற்றுநோய் ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவுகிறது. பூசணி விதைகளை சூப்பாகவோ, தயிருடனோ அல்லது பிற காய்கறி, பழங்களுடன் சேர்த்து சாலட்டாகவோ சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக