செவ்வாய், 30 அக்டோபர், 2018

அறிவியல் மருத்துவ‌த்தின் சாதனை யாது? - விரிவாக காண்போம்...

அறிவியல் மருத்துவ‌த்தின் சாதனை யாது? - விரிவாக காண்போம்...

அறிவியல் மருத்துவத்தின் சாதனை கணக்கிலடங்காதது ஆகும். 1900 புள்ளிவிபரப்படி 1000 தாய்மார்கள் கருவுறும் போது அதில் 120க்கும் அதிகமானோர் பிள்ளைப் பேறின் போது உயிர் இழந்தனர். ஆனால் தற்போதைய புள்ளி விபரப்படி ஒரு லட்சம் பெண்கள் கருவுறும்போது அதில் பத்துக்கும் குறைவானவர்களே குழந்தை பிறக்கும் போது உயிர் இழக்கின்றனர்.
மேலும் முறையற்ற பாரம்பரிய பிரசவ முறைகளால் பெண்கள் மோசமான முறையில் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமாவில் கர்ப்பிணி ஒருவரை காட்டினால் அவர் அநேகமாக இறந்து விடுவதாகத் தான் திரைப்படம் அமைந்திருக்கும். ஆனால் இன்று குழந்தைப் பேறு என்பது பெரும்பாலான படங்களில் ஒரே பாடலில் முடிந்து வடுகிறது. 
மேலும் பெரியம்மை நோயை ஒழித்தது, போலியோவை ஒழித்தது, தொழுநோயை ஒழித்தது, பாம்புகடிக்கு மருந்து, பெரும்பாலான நோய்களுக்கு தீர்வுகள், வலிநீக்கிகள் போன்றவை ஆங்கில மருத்துவத்தின் சாதனையாகும்.100 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவருக்கு குடல்வால் பாதிக்கப்பட்டால் அவர் வலியால் துடித்து இறப்பதைத் தவிர வேறு வழிஇல்லை. ஆனால் இன்று 3 நாள் மருத்துவ கவனிப்பில் வலி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து நலமாகி வருகின்றனர்.
இவ்வாறு இந்தப் பட்டியல் மிக நீண்டதாகும். நீங்கள் கண்ணாடி அணிந்து இதனை படித்துக் கொண்டிருந்தால் அதனை கழட்டி விட்டு இந்த ஸ்கிரினை சற்று நேரம் வாசிக்கவும், இயல்பாக அறிவியலின் அற்புதம் உங்களுக்குப் புரிந்து விடும்.குறிப்பு : இந்த கட்டுரைக்கு மறுப்பு எழுத முனைபவர்கள் மருத்துவமனைகளின் கொள்ளைகளை விளக்கி அதனால் முழுமையாக அறிவியலை ஒழித்துக் கட்டுவோம் என்று எழுத முனைய வேண்டாம். ஏனெனில் ‘உலக மயத்தில் அனைத்தும் விற்பனைக்கே’ என்ற அடிப்படையில் மருத்துவமும் வியாபாரமயமாகி உள்ளது.
எடுத்துக்காட்டாக எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான அரசியல் செய்து மக்களை சுரண்டுகின்றன என்பதால் எல்லோரும் வாகனங்களைப் புறக்கணித்து நடந்து செல்ல முடியாது. உலக அரசியலும் அறிவியல் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. அதனால் மாற்று அரசியல் தேடுவோர் அறிவியலைப் புறக்கணித்து மூடநம்பிக்கையை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக