தண்ணீர் மாற்றி குடித்தால் தொண்டை கட்டுகிறதா? அதற்கு சில வீட்டு மருத்துவம் !!
இஞ்சி:
சிறிய துண்டு இஞ்சியை எடுத்து தோல் சீவி, அதனை அப்படியே சாப்பிடலாம். இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடுவதால் அதன் சுவை அதிகரிக்கும்.கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் இஞ்சியை போட்டு கொதிக்க விடவும். பின்பு அந்த நீரை வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து பருகவும். ஒரு நாளில் மூன்று முறை இதனை பருகலாம்.
தேன்:
தேனின் மென்மையான தன்மை குரல்வளையை மிருதுவாக்கி உங்கள் குரலை மீட்டுத் தருகிறது.தொண்டை எரிச்சலைப் போக்கி அழற்சியைக் குறைக்கிறது.ஒரு சிட்டிகை மிளகு தூளுடன், இதனைக் கலந்து இந்த கலவையை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து பருகலாம்.
எலுமிச்சை:
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து பருகவும். தினமும் சில முறை இதனை பருகலாம்.எலுமிச்சை சாற்றுடன் தண்ணீர் சேர்த்து கலந்து அந்த நீரை தொண்டை வரை ஊற்றி கொப்பளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.
ஏலக்காய்:
தொண்டை கரகரப்பைப் போக்கி இழந்த குரலை மீட்டுத் தர இது உதவுகிறது.ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு மெல்லவும். இதனால் தொண்டை ஈரப்பதம் பெறுகிறது.அல்லது ஏலக்காய் தூளுடன் சிறிதளவு தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக