கற்பூரம் அதன் நன்மைகள் மற்றும் அதன் பயன்களை அறிந்து கொள்வோம்!
கற்பூரம் சருமத்தின் மீது உள்ள துளைகள் அடைப்பதுடன் அரிப்பு மற்றும் சிவப்பு சருமத்தை தடுக்கும்.பெரும்பாலனவர்கள் சந்திக்கும் ஒரு சரும பிரச்சினை அரிப்பு மற்றும் சருமம் சிவந்து போவதாகும்.இதனை பயன்படுத்துவதும் மிகவும் எளிது, நீரில் சிறிது கற்பூர எண்ணெயை கலந்து அதனை பாதிக்கப்பட்ட இடத்தின் மீது தடவுங்கள்.
கற்பூர எண்ணெயின் வாசனை மனதில் ஒரு மகிழ்ச்சியான எண்ணத்தை உண்டாக்கக்கூடும், அதன்மூலம் நிம்மதியான தூக்கத்தை வழங்கும்.கற்பூரம் சளி மற்றும் இருமல் சிகிச்சைக்கு உதவுவதோடு தொண்டையில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்யவும் உதவுகிறது. மூக்கடைப்பை சரிசெய்ய உதவும் பல வேப்போரப்களில் கற்பூர எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. குளிக்கும் நீரில் கற்பூர எண்ணெயை கலந்து குளிப்பது தலைவலி மற்றும் பேன் தொல்லையிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து தூங்கும் முன் தலையில் தேய்த்துக்கொள்ளவும். காலையில் ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். இதன்மூலம் பேன்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக