காபிக்கு பதிலாக எடுத்துக் கொள்ள வேண்டிய பானங்கள்....
காபியை தவிர்த்து நீங்க குடிக்க வேண்டிய சில முக்கிய பானங்கள் பற்றி கீழே தெரிந்து கொள்ளலாம்.
டான்டெலியன் வேர் டீ: நீங்கள் காபியை மிகவும் விரும்பினால் அதை ஆரோக்கியமாக மாற்ற காபியின் அளவை குறைத்து விட்டு டான்டெலியன் வேர் டீ போட்டு குடிக்கலாம். இதனால் நமக்கு விட்டமின் ஏ, பி, சி மற்றும் டி, இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.
மோச்சா க்ரீன் டீ: மோச்சா க்ரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், குளோரோபைல் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. இது இதய நோய்கள் மற்றும் டைப் 2 டயாபெட்டீஸ்க்கு உதவுகிறது. மேலும் புற்று நோய் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள சிறுதளவு காஃபைன் உங்களை உற்சாகமாக வைக்கவும் உதவுகிறது.
மசாலா சாயா: இது ஒரு புகழ்பெற்ற இந்திய பானம் ஆகும். இதுவும் காபியை போலவே உங்களுக்கு நல்ல எனர்ஜியை தரக் கூடியது. மேலும் இந்த சாயாவில் ஏலக்காய், பட்டை, சாதிக்காய், கிராம்பு, இஞ்சி போன்ற மசாலா பொருட்களையும் சேர்த்து தயாரிக்கின்றனர்.
மஞ்சள் டீ: இதிலும் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது பார்ப்பதற்கு கோல்டன் கலரில் நல்ல நறுமணத்துடன் இருக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் நிறைய ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக