வெள்ளி, 10 ஜனவரி, 2020

நாம் உண்ணும் மதிய உணவு ஆரோக்கியமானதா?


நாம் உண்ணும் மதிய உணவு ஆரோக்கியமானதா?


இன்றைய சூழலில் வேலை பரபரப்பால் தினமும் காலையில் சாப்பிட நேரம் இல்லாமல், மதிய சாப்பாட்டை அதிக அளவில் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் நம் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. மதிய உணவுக்கு எதை சாப்பிடலாம்? எதை தவிர்க்க வேண்டும்? என்று பார்க்கலாம்.

எடுத்துக்கொள்ள வேண்டிய மதிய உணவுகள் :

🍚 மதிய உணவுக்கு கைகுத்தல் அரிசியை பயன்படுத்தி, செய்யும் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அதிகளவில் கிடைக்கின்றன.

🍚 வரகு, திணை, சிவப்பரிசி, கம்பு, ராகி போன்ற தானியங்களின் மூலம் செய்யப்பட்ட உணவை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

🍚 அனைத்து வகையான கீரை, காய்கறி மற்றும் பயிறுகளை மதிய உணவில் சேர்த்துக்கொள்ளுவது உடலுக்கு நல்ல பலனை அளிக்கும்.

🍚 நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்றவை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

🍚 மதிய உணவில் அவசியம் இருக்க வேண்டியது ரசமாகும். செரிமானம் சீராக நடைபெற ரசம் உதவுகிறது.

🍚 முட்டை, சிக்கன், மீன் போன்றவற்றையும் மதிய உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நமக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கிறது.

🍚 சப்பாத்தி, ரொட்டி போன்ற கோதுமையில் தயாரிக்கப்பட்ட உணவை மதிய உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.

தவிர்க்க வேண்டிய மதிய உணவுகள் :

🍚 மைதாவில் தயாரிக்கப்படுகின்ற பரோட்டா, நாண் போன்ற உணவுகளை மதிய வேளையில் சாப்பிடக்கூடாது. இது செரிமானத்தை தடுக்கிறது.

🍚 காலை உணவுக்கு பின் சிலர் டீ, நொறுக்குத்தீனி, ஜூஸ் போன்ற அனைத்தும் சாப்பிடுவார்கள். இதுபோன்று நொறுக்குத்தீனி சாப்பிட்டால் மதிய உணவைத் தள்ளிப்போடச் செய்யும்.

🍚 எனவே காலை உணவுக்கும், மதிய உணவுக்குமான இடைவேளையில் நொறுக்குத்தீனியை குறைத்து கொள்ள வேண்டும்.

🍚 பாலீஷ் செய்யப்பட்ட அரிசியால் செய்த உணவை தவிர்த்துவிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இந்த வகையான அரிசியில் சத்துக்கள் எதுவும் இருக்காது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக