வெள்ளி, 17 ஜனவரி, 2020

செல்லவேண்டியது_வெகுதூரம்


#செல்லவேண்டியது_வெகுதூரம்

கோஸ்டாரிகா 99% புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரித்து அனைத்து நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக உயர்ந்து நிற்கிறது.

 ஆறுகள், எரிமலைகள், காற்று, சூரிய ஒளி போன்றவற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது. இதன்மூலம் பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse gases) வெளியிடுவது குறைத்திருக்கிறது. 1.47% மின்சாரம் தான் 2014 - 2018 வரை நிலத்தடிபுதைம எரிபொருள் பயன்படுத்தியுள்ளது.

2019 முதல் 5 மாதங்களில் எரிமலையும் மின்சாரம் தயாரித்து வருகிறது. 74.77% மின்சாரத்தை நீர்மின் ஆலைகள் ஆற்று நீரை பயன்படுத்தி உருவாக்கியுள்ளது.

 11.92% எரிமலைகள் வெப்பத்தை பயன்படுத்தியும், 11.8% காற்றை பயன்படுத்தியும், 0.73% உயிரி எரிபொருள் பயன்படுத்தியும், சோலார் தகடுகள் பயன்படுத்தி 0.04 சதவீதமும் உருவாக்கப்படுகிறது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது கோஸ்டாரிகா நாட்டினர் உண்மையாக்கி காட்டி உள்ளனர்.

இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி வருடம் அதிகரித்துக் கொண்டு போகிறது. 2013-14 166.9 மில்லியன் டன்னாக இருந்தது. 2018-19ல் 235.24 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட ₹83,680 மதிப்புள்ள நிலக்கரியை எரிக்கும் மின்சார ஆலைகள் 17 GW மின்சாரம் உற்பத்தி செய்யும்.

₹22,913 மதிப்பிலான புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 4.5 GW மட்டுமே. அதிக நிலக்கரி, அதிக மாசு, அதிக ஆபத்து. சோலார் தகடு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் கடந்த வருடத்தை விட 9% குறைந்துள்ளது.

தற்போது சோலார் தகடுகள்‌ 3.4% மின்சார உற்பத்தி மட்டுமே‌ செய்கின்றன. நம் நாட்டின் சூழலை பாதுகாக்கும் பயணத்தில் நாம் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக